search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விக்கெட் வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க்
    X
    விக்கெட் வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க்

    ஹோபர்ட் டெஸ்டில் ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு - இங்கிலாந்து 180 ரன்னில் சுருண்டது

    இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், கிரீன் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தது.
    ஹோபர்ட்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா 3-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடி சதமடித்து 101 ரன்னில் அவுட்டானார். கிரீன் 74 ரன்கள் எடுத்தார். லபுசேன் 44 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் பிராட், மார்க் வுட் தலா 3 விக்கெட்டும், ராபின்சன், கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிறிஸ் வோக்ஸ் 36 ரன்னும், ஜோ ரூட் 34 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, 123 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.
    Next Story
    ×