என் மலர்
விளையாட்டு

நடிகர் ரன்வீர்சிங், கிரிக்கெட் வீரர் விராட் கோலி
ராஜா எப்போதும் ராஜாவாக இருப்பார் - கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகர் ரன்வீர்சிங்
கோலிக்கு ஆதரவாக அலியா பட், அதியா ஷெட்டி, வாணி கபூர், சாரா டெண்டுல்கர், அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
மும்பை:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது. இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விராட் கோலி திடீரென விலகியுள்ளார்.
தமது முடிவு குறித்து இன்ஸ்டாகிராமில், விராட் கோலி பதிவிட்டுள்ளதாவது:
"ஏழு வருடங்கள் கடின உழைப்பு, உழைப்பு மற்றும் இடைவிடாத விடாமுயற்சியுடன் ஒவ்வொரு நாளும் அணியை சரியான திசையில் கொண்டு சென்றேன். நான் முழு நேர்மையுடன் வேலையைச் செய்தேன், எதையும் விட்டுவிடவில்லை. எல்லாம் ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஒரு கட்டத்தில் நிறுத்துங்கள், இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக இருக்கும் எனக்கு, இப்போது தான். பயணத்தில் பல ஏற்றங்கள் மற்றும் சில தாழ்வுகள் இருந்தன,
ஆனால் முயற்சியின்மையோ அல்லது நம்பிக்கையின்மையோ இருந்ததில்லை. நான் செய்யும் எல்லாவற்றிலும் எனது 120 சதவீதத்தை வழங்க வேண்டும் என்று எப்போதும் நம்புகிறேன். என் இதயத்தில் முழுமையான தெளிவு உள்ளது. மேலும் எனது அணிக்கு நான் நேர்மையற்றவராக இருக்க முடியாது. இவ்வாறு தமது பதிவில் கோலி குறிப்பிட்டிருந்தார்.
கோலியின் முடிவுக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில், நடிகர் ரன்வீர் சிங் பதிலளித்துள்ளார். அதில் 'ராஜா எப்போதும் ராஜாவாக இருப்பார்' என குறிப்பிட்டுள்ளார். நடிகர் நகுல் மேத்தா, தமது பதவில், நாங்கள் இதுவரை பாத்திராத வகையில் இந்திய டெஸ்ட் அணியை மிகச் சிறந்த அணியாக மாற்றிய உங்கள் சேவைக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
கோலிக்கு ஆதரவாக அலியா பட், அதியா ஷெட்டி, வாணி கபூர், சாரா டெண்டுல்கர், அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, விராட், தலை நிமிர்ந்து போகலாம். நிச்சயமாக இந்தியாவின் மிகவும் ஆக்ரோஷமான மற்றும் வெற்றிகரமானது இந்த அணி என்பதால் தனிப்பட்ட முறையில் எனக்கு சோகமான நாள். இவ்வாறு தமது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






