என் மலர்
விளையாட்டு
2 வது இன்னிங்சில் இந்தியா 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் தென்ஆப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற இன்னும் 111 ரன்கள் தேவைப்படுகிறது.
கேப்டவுன்:
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் களம் இறங்கி விளையாடியது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 77.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா தரப்பில் காஜிசோ ரபடா 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி 76.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில் 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 13 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 17 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று நடைபெற்ற 3 வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை 44.3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து தொடர்ந்த ஆட்டத்தில், 29 ரன்களில் விராட் கோலி ஆட்டமிழக்க அதைத் தொடர்ந்து களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் (7 ரன்கள்), சர்துல் தாகுர் (5 ரன்கள்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
உமேஷ் யாதவ், முகமது ஷமி இருவரும் டக் அவுட் ஆன நிலையில் இறுதியாக களமிறங்கிய பும்ராவும் 2 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த நிலையில் 67.3 ஓவர்கள் முடிவில் 198 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்தியா ஆல் அவுட்டானது.
இதையடுத்து 212 ரன்கள் இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்கா அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. 3-ம் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 101 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். வெற்றி பெற இன்னும் அந்த அணிக்கு 111 ரன்கள் தேவைப்படுகிறது. இரண்டு நாட்கள் மீதம் உள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி வலுவான நிலையில் உள்ளது.
2017க்கு பிறகு சர்வதேச போட்டிகளில் சாய்னாவை வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை மாளவிகா பெற்றுள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, லக்சயா சென், பிரனோய் ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்துவருகிறார்கள்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் பி.வி.சிந்து, சக வீராங்கனை ஐரா சர்மாவை 21-10 21-10 என்ற நேர்செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு எளிதில் முன்னேறினார். காலிறுதியில் பி.வி.சிந்து, ஆஷ்மிதா சாலிஹாவை எதிர்கொள்கிறார். இவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரான்ஸ் வீங்கனை ஹோயாக்சை 21-17 21-14 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார்.
லக்சயா சென், ஸ்வீடன் நாட்டின் பெலிக்ஸ் புரெஸ்டட்டை 21-12, 21-15 என்ற செட்கணக்கில் வீழ்த்தி காலிறுதியை உறுதி செய்தார். இதேபோல் பிரனோயை எதிர்த்து விளையாடவிருந்த மிதுன் மஞ்சுநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் போட்டியில் இருந்து விலகினார். இதனால் பிரனோய் காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆனால், முன்னாள் சாம்பியனும், 2012 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான சாய்னா நேவால், சக வீராங்கனை மாளவிகாவிடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். இப்போட்டியில் 111வது இடத்தில் உள்ள மால்விகா, வெறும் 34 நிமிடங்களில் சாய்னாவை 21-17, 21-9 என்ற நேர்செட்களில் வீழ்த்தினார். இதன்மூலம், 2017க்கு பிறகு சர்வதேச போட்டிகளில் சாய்னாவை வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை மாளவிகா பெற்றுள்ளார்.
முழங்கால் மற்றும் இடுப்பு காயங்களில் இருந்து மீண்டு வந்து உற்சாகமாக ஆடிய சாய்னா, முதல் சுற்றில் வெற்றி பெற்றார். ஆனால், இன்றைய ஆட்டத்தில் அவரால் மாளவிகாவுக்கு ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை.
தனது உடற்தகுதி இன்னும் பழைய நிலைக்கு திரும்பவில்லை என்று கூறி உள்ள சாய்னா, இதற்காக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றார். அதேசமயம், மாளவிகா மிகவும் சிறப்பாக விளையாடியதாகவும், அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்றும் சாய்னா கூறினார்.
2 வது இன்னிங்சில் இந்தியா 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் தென்ஆப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கேப்டவுன்:
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் 77.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா தரப்பில் காஜிசோ ரபடா 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி 76.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில் 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதையடுத்து 13 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 17 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற 3 வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை 44.3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து தொடர்ந்த ஆட்டத்தில், 29 ரன்களில் விராட் கோலி ஆட்டமிழக்க அதைத் தொடர்ந்து களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் (7 ரன்கள்), சர்துல் தாகுர் (5 ரன்கள்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
உமேஷ் யாதவ், முகமது ஷமி இருவரும் டக் அவுட் ஆன நிலையில் இறுதியாக களமிறங்கிய பும்ராவும் 2 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த நிலையில் 67.3 ஓவர்கள் முடிவில் 198 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்தியா ஆல் அவுட்டானது. இதையடுத்து 212 ரன்கள் இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டி இதுவரை 13 முறை நடந்துள்ளது. இதில் இந்தியா அதிகபட்சமாக 4 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.
ஆண்டிகுவா:
19 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) 1988-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
ஆஸ்திரேலியாவில் நடந்த முதல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
கடைசியாக 2020-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் வங்காளதேசம் சாம்பியன் பட்டம் பெற்றது.
இதுவரை 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டி 13 முறை நடந்துள்ளது. இதில் இந்தியா அதிகபட்சமாக 4 முறை கோப்பையை வென்றது. ஆஸ்திரேலியா 3 தடவையும், பாகிஸ்தான் 2 தடவையும், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேசம் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை கைப்பற்றின.
14-வது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நாளை தொடங்குகிறது. பிப்ரவரி 5-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் வங்காள தேசம் உள்பட 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளன.
இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்று உள்ளது. தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா ஆகிய நாடுகள் அந்த பிரிவில் இடம் பெற்று உள்ளன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 15-ந் தேதி எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. அயர்லாந்துடன் 19-ந் தேதியும், உகாண்டாவுடன் 22-ந் தேதியும் மோதுகிறது.
நாளை நடைபெறும் தொடக்க ஆட்டங்களில் இந்த போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து-இலங்கை (குரூப் ‘டி’) அணிகள் மோதுகின்றன.
ஆண்டிகுவா, கயானா, செயின்கிட்ஸ், டிரினிடாட் ஆகிய 4 இடங்களில் போட்டி நடக்கிறது. பிப்ரவரி 5-ந் தேதி இறுதிப்போட்டி ஆண்டிகுவாவில் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. மொத்தம் 48 ஆட்டங்கள் நடக்கிறது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பும்ரா அபாரமாக பந்து வீசி 42 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.
கேப்டவுன்:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.
இந்தியா முதல் இன்னிங்சில் 223 ரன்னில் ஆல் அவுட் ஆனது. விராட் கோலி அதிகபட்சமாக 79 ரன்னும், புஜாரா 43 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா 4 விக்கெட்டும், ஜான்சென் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன் எடுத்து இருந்தது.
நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்கா 210 ரன்னில் சுருண்டது. பீட்டர்சன் அதிக பட்சமாக 72 ரன் எடுத்தார்.
பும்ரா அபாரமாக பந்து வீசி 42 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். உமேஷ் யாதவ், முகமது ஷமி தலா 2 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
13 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன் எடுத்து இருந்தது. அகர்வால் 7 ரன்னில் ரபடா பந்திலும், ராகுல் 10 ரன்னில் ஜான்சென் பந்திலும் ஆட்டம் இழந்தனர். கோலி 14 ரன்னிலும், புஜாரா 9 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
இந்திய அணி தற்போது 70 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கைவசம் 8 விக்கெட் உள்ளது. இன்றைய 3-வது நாள் ஆட்டம் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
28 வயதான பும்ரா 27 டெஸ்டில் விளையாடி 112 விக்கெட் கைப்பற்றி உள்ளார். அவர் ஒரு இன்னிங்சில் 7-வது முறையாக 5 விக்கெட்டை தொட்டு உள்ளார்.
பும்ரா பெரும்பாலும் விராட் கோலி தலைமையில்தான் அதிகமான டெஸ்டில் விளையாடி உள்ளார். கோலி தலைமையின் கீழ் அவர் 100 விக்கெட்டை எடுத்துள்ளார். ஜான்சென் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் அவர் 100-வது விக்கெட்டை தொட்டார்.
விராட் கோலியின் தலைமையின் கீழ் பும்ரா 24 டெஸ்டில் விளையாடி 102 விக்கெட் கைப்பற்றி உள்ளார். சராசரி 21.23 ஆகும். 27 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியது அவரது சிறந்த பந்து வீச்சாகும்.
நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில், வரைவு பட்டியல் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஒபன் வருகிற திங்கட்கிழமை மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது. கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே நாட்டிற்குள் அனுமதி என ஆஸ்திரேலியா அரசு தெரிவித்த நிலையில், ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தாமல் சென்றார். அவரை மெல்போர்ன் விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
இதுவரை அவருக்கு விசா விலக்கு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று யார் யாருடன் மோதுவது என்பதை முடிவு செய்யும் வரைவு பட்டியல் இன்று வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால், ஜோகோவிச் விளையாடுவா? விளையாடமாட்டாரா? என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
இதனால் போட்டி வரைவு பட்டியல் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே 3 இந்திய வீரர்கள் கொரோனா காரணமாக வெளியேறினர்.
புது டெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிவேகத்தை எட்டியுள்ள நிலையிலும், இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இந்த தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் விளையாடி வருகின்றனர்.
இன்று தொடரின் 2-வது சுற்று தொடங்க இருந்த நிலையில், இந்திய வீரர்கள் கிடம்பி ஸ்ரீகாந்த் நம்மாழ்வார், அஸ்வினி பொன்னப்பா, ரித்திகா ராகுல், தெரசா ஜாலி, மிதுன் மஞ்சுநாத், சிம்ரன் அமன் சிங், குஷி குப்தா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து இந்த 7 வீரர்களும் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இவர்களுக்கு எதிரான போட்டிகளில் ஆட இருந்த அனைத்து வீரர்களும் அடுத்த சுற்றுக்கு தகுதி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அனைத்து பங்கேற்பாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பேட்மிண்டன் உலக சம்மேளனம் மற்றும் இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி சோதனை நெறிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே, 2019-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற பி சாய் பிரனீத் மற்றும் இரட்டை நிபுணர்களான மனு அத்ரி மற்றும் துருவ் ராவத் ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி தொடரில் இருந்து வெளியேறினர்.
மேலும் தங்கள் நாட்டு வீரர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து முழு இங்கிலாந்து பேட்மிண்டன் அணியும் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி வெளியிட்ட ஆல் ரவுண்டர் தரவரிசையிலும் இந்தியாவின் அஸ்வின் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதில், பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2-வது இடம் வகிக்கிறார்.
முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் உள்ளார். 3-ம் இடத்தில் நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் உள்ளார். முதல் 10 இடங்களுக்குள் இந்திய வீரர் அஸ்வின் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.
இதேபோல், பேட்டிங் தரவரிசையை பொருத்தவரை முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் லபுசேன் உள்ளார். 2-ம் இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டும், 3-ம் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித்தும் உள்ளார். 4-ம் இடத்தில் கேன் வில்லியம்சனும், 5-ம் இடத்தில் இந்தியாவின் ரோகித் சர்மாவும் உள்ளனர்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி 9-ம் இடத்தில் உள்ளார்.
இதையும் படியுங்கள்...எங்களுக்கு தலைவலியே விராட் கோலியும் புஜாராவும் தான் - கீகன் பீட்டர்சன்
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1- 1 என சமனில் உள்ளது.
கேப் டவுன்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் ஜஸ்ப்ரீத் பும்ரா 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்தது. இதனால் 70 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா 9 ரன்னுடனும், விராட் கோலி 14 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.
இந்நிலையில், ஆட்டம் முடிந்ததும் செய்தி நிறுவனத்திடம் பேசிய கீகன் பீட்டர்சன் விராட் கோலியும் புஜாராவும் எங்களுக்கு தலைவலியை ஏற்படுத்துகின்றனர் என தெரிவித்தார்.
காலையில் விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்துவதே எங்கள் இலக்கு. ஆனால் தற்போது களத்தில் உள்ள விராட் கோலி மற்றும் புஜாராவின் ஆட்டம் கடந்த சில போட்டிகளில் எங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி விட்டன என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...கேட்சில் சதமடித்து சாதித்த விராட் கோலி
முதல் டெஸ்டை வென்றதுபோல் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைக்குமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
கேப் டவுன்:
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பும்ரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் பவுமாவை கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார் விராட் கோலி. இது அவரது 100-வது கேட்ச் சாதனை ஆகும். விராட் கோலி 99 டெஸ்டில் 168 இன்னிங்சில் 100 கேட்ச் பிடித்துள்ளார். டெஸ்ட் அரங்கில் 100 கேட்ச் பிடித்த 6-வது வீரர் விராட் கோலி ஆவார்.
ராகுல் டிராவிட் 163 டெஸ்டில் 299 இன்னிங்சில் (1996 முதல் 2012 வரை) 209 கேட்ச் பிடித்து முதலிடத்தில் உள்ளார். வி.வி.எஸ். லட்சுமண் (135), தெண்டுல்கர் (115), கவாஸ்கர் (108), அசாருதீன் (105) ஆகியோர் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.
இதையும் படியுங்கள்...புரோ கபடி லீக் - டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பெங்களூரு
புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பெங்களூரு புல்ஸ் அணி 6 வெற்றி, 2 தோல்வி, 1 டிரா என மொத்தம் 33 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
பெங்களூரு:
12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.
இதில் நேற்றிரவு நடந்த இரண்டாம் போட்டியில் பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி அணிகள் மோதின. போட்டியின் ஆரம்பம் முதலே பெங்களூரு அணி ஆக்ரோஷத்துடன் விளையாடியது. இதனால் 61-22 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் தோற்றதன் மூலம் டெல்லி அணி மூன்றாம் இடத்துக்கு பின்தங்கியது.
மற்றொரு போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ், யு மும்பா அணிகள் மோதின. போட்டியின் இறுதியில் இரு அணிகளும் 36 -36 என்ற புள்ளிகள் பெற்று போட்டி டிராவில் முடிந்தது.
முதல் இன்னிங்சில் இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
கேப் டவுன்:
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் குவித்தார். புஜாரா 43 ரன்களும், ரிஷப் பண்ட் 27 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்ரிக்கா தரப்பில் ரபாடா 4 விக்கெட், மார்கோ ஜேன்சன் 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 210 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் சேர்த்தார். டெம்பா பவுமா 28 ரன்களும், கேசவ் மகராஜ் 25 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட் எடுத்தார். உமேஷ் யாதவ், முகமது ஷமி தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2ம் இன்னிங்சை தொடங்கியது.






