என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இவ்விரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன.
    • 6-ல் ஜெர்மனியும், ஒன்றில் ஸ்பெயினும் வெற்றி பெற்றன. 3 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது.

    14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி தொடர் (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. கடந்த 28-ந் தேதி தொடங்கிய இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

    இதில் இன்றுஇரவு 8 மணிக்கு நடைபெறும் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் 'நம்பர் ஒன்' அணியான ஜெர்மனி, 4-ம் நிலை அணியான ஸ்பெயினை எதிர்கொள்கிறது.

    7 முறை சாம்பியனான ஜெர்மனி அணி லீக் சுற்றில் தென்ஆப்பிரிக்கா, கனடா, அயர்லாந்தையும், கால்இறுதியில் பெனால்டி ஷூட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சையும், அரைஇறுதியில் 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவையும் தோற்கடித்து 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

    ஸ்பெயின் அணி லீக் சுற்றில் எகிப்து, பெல்ஜியம், நமிபியாவையும், கால்இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தையும், அரைஇறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவையும் வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் கால் பதித்துள்ளது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 6-ல் ஜெர்மனியும், ஒன்றில் ஸ்பெயினும் வெற்றி பெற்றன. 3 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது.

    மொத்தத்தில் உலகக் கோப்பையை 8-வது முறையாக கைப்பற்றி தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட ஜெர்மனியும், முதல்முறையாக கோப்பையை கையில் ஏந்த ஸ்பெயினும் வரிந்து கட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

    முன்னதாக மாலை 5.30 மணிக்கு நடைபெறும் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ரோகித் தலைமையிலான இந்திய அணி, அர்ஜென்டினாவை சந்திக்கிறது. 2 முறை சாம்பியனான இந்தியா உள்ளூரில் நடைபெறும் இந்த போட்டியில் வெறுங்கையுடன் வெளியேறாமல் குறைந்தபட்சம் ஒரு பதக்கத்துடன் நிறைவு செய்ய போராடும். ஆனால் சமபலம் வாய்ந்த அர்ஜென்டினாவும் கடும் சவால் அளிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

    போட்டி குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்ரீஜேஷ் கூறுகையில், 'ஜெர்மனிக்கு எதிரான அரைஇறுதியில் எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை. எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை. ஆனால் எதிரணிக்கு தொடக்கத்தில் இருந்தே எளிதாக கோல் அடிக்கும் வாய்ப்புகளை வழங்கி தவறிழைத்து விட்டோம். நாங்கள் முதலில் தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்திவிட்டு, பிறகு தாக்குதலை தொடுத்து கோலுக்கான வாய்ப்புகளை உருவாக்கி இருக்க வேண்டும். முந்தைய தவறுகளை திருத்தி கொண்டு அர்ஜென்டினாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வெண்கலப்பதக்கத்தை வெல்ல முயற்சிப்போம்' என்றார்.

    7-வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ்-நியூசிலாந்து (பகல் 12.30 மணி), 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம்-நெதர்லாந்து (பிற்பகல் 3 மணி) அணிகள் மோதுகின்றன.

    இதற்கிடையே சென்னையில் நேற்று நடந்த 15-வது இடத்தை நிர்ணயிப்பதற்கான ஆட்டத்தில் சிலி 2-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி 15-வது இடத்தை சொந்தமாக்கியது. சுவிட்சர்லாந்து 16-வது இடம் பெற்றது.

    13-வது இடத்துக்கான ஆட்டத்தில் மலேசியா- ஜப்பான் அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்ததால் வெற்றியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் மலேசியா 3-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை பதம் பார்த்தது.

    11-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

    • முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தினார்.
    • ஒருபுறம் சன்னி லியோனின் படத்தையும் மறுபுறம் இன்னொன்றையும் அவர் பதிவிட்டார்.

    இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின்  எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

    முன்னாள் ஆபாச நடிகையும் இந்நாள் பாலிவுட் நடிகையுமான சன்னி லியோனின் புகைப்படத்தைப் அவர் பகிர்ந்து கொண்டார்.

    சையத் முஷ்டாக் அலி டிராபியில் இளம் வீரர் சன்னி சந்துவின் அற்புதமான ஆட்டத்திற்கு அஸ்வின் இப்படித்தான் வாழ்த்து தெரிவிப்பாராம்.

    ஒருபுறம் சன்னி லியோனின் படத்தையும் மறுபுறம் சென்னையில் உள்ள ஒரு சந்தின் புகைப்படத்தையும் அஸ்வின் பதிவிட்டார்.

    இந்தப் பதிவு சன்னி (லியோன்) மற்றும் சந்து (தெரு) ஆகியவற்றை இணைத்து 'சன்னி சந்து' என்று பொருள்படும் வகையில் உருவாக்கப்பட்டது என்று ரசிக சிகாமணிகள் தீவிரமாக சிந்தித்து கண்டுபிடித்துள்ளனர்.  

    • முதல் ஓவரின் 2-வது பந்திலேயே டி காக், அர்ஸ்தீப் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
    • மறுமுனையில் பிரெவிஸ் கண்ணும் கருத்துமாக விளையாடினார்.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக்கில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

    திலக் வர்மா 26 ரன்னும், அக்சர் படேல் 23 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 28 பந்தில் 59 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர், 6 பவுண்டரி அடங்கும்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டும், லூதோ சிபம்லா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 176 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது.

    முதல் ஓவரின் 2-வது பந்திலேயே டி காக், அர்ஸ்தீப் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அர்ஸ்தீப் பந்துவீசிய 2-வது ஓவரில் ஸ்டப்ஸ் 14 ரன்களில் அவுட்டானார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன மார்க்ரம் 14 ரன்னில் சுருண்டார். டேவிட் மில்லர் 1 ரன், டோனோவன் பெரீரா 5 ரன்கள், மார்கோ ஜான்சன் 12 ரன்கள் மட்டும் ஸ்கோர் செய்து வெளியேற மறுமுனையில் பிரெவிஸ் கண்ணும் கருத்துமாக விளையாடினார்.

     ஒரு வழியாக அவரும் 22 ரன்களில் மூட்டையை கட்ட 12.3 ஓவரில் 76 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வெற்றியை பறிகொடுத்தது. இதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.   

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 175 ரன்கள் எடுத்தது.

    கட்டாக்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக்கில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

    திலக் வர்மா 26 ரன்னும், அக்சர் படேல் 23 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 28 பந்தில் 59 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர், 6 பவுண்டரி அடங்கும்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டும், லூதோ சிபம்லா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 176 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்குகிறது.

    • இந்தியா, இலங்கை இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்த ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய மகளிர் அணி வென்று சாதனை படைத்தது.

    இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்த மாதம் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    அதன்படி, இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி 21-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. 2-வது போட்டி 23-ம் தேதி அதே மைதானத்தில் நடைபெற உள்ளது. 26, 28, 30 ஆகிய தேதிகளில் என கடைசி 3 போட்டிகளும் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

    இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்திய அணியின் விவரம் பின்வருமாறு:

    ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), தீப்தி சர்மா, சினே ராணா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, ஹர்லீன் தியோல், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட், ரேணுகா சிங் தாக்கூர், ரிச்சா கோஷ், ஜி.கமலினி, ஸ்ரீ சரணி, வைஷ்ணவி சர்மா.

    • முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-0 என வென்றது.
    • அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது.

    கட்டாக்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் டெஸ்ட், ஒருநாள் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்காவும், ஒருநாள் தொடரை இந்தியாவும் கைப்பற்றியது.

    இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக்கில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் பேட் செய்ய களமிறங்குகிறது.

    • 27 ஆண்டுகளுக்கு பின் தென் ஆப்பிரிக்கா அணி முதல்முறையாக ஐசிசி கோப்பையை கைப்பற்றி உள்ளது.
    • இந்தியா முதல் முறையாக மகளிர் ஒருநாள் உலக கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

    2025-ம் ஆண்டில் கிரிக்கெட் தொடரில் நடந்த வரலாற்று வெற்றிகள் குறித்த தகவலை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம். அதன்படி இந்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (துபாய்) ஆகிய நாடுகளில் நடைபெற்றது.

     இத்தொடரில், இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியா தனது மூன்றாவது சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றதன் மூலம் அதிக முறை இப்பட்டத்தை வென்ற அணி என்ற பெருமையைப் பெற்றது. இது 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வென்ற ஒரு முக்கிய ஐசிசி கோப்பையாகும்.

    ஐபிஎல் 2025 தொடரின் இறுதி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.


    இதன்மூலம் ஐபிஎல் கோப்பையை 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

    ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.


    இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பின் தென் ஆப்பிரிக்கா அணி முதல்முறையாக ஐசிசி கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதற்கு முன் கடைசியாக 1998-ம் ஆண்டில் ஐசிசி நாக்-அவுட் டிராபியை தென் ஆப்பிரிக்கா வென்றிருந்தது.

    மகளிர் உலகக் கோப்பை செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக ஒருநாள் உலக கோப்பையை வென்று வரலாறு படைத்தது.


    இதில் இந்திய ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா, உலகக் கோப்பைப் போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் எடுத்து 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் ஆண் அல்லது பெண் கிரிக்கெட் வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார்.


    தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.


    இதன் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று தென் ஆப்பிரிக்கா வரலாற்று சாதனையை நிகழ்த்தியது.

    ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.


    இதன் மூலம் ஆசிய கோப்பையை வென்று தனது அதிக வெற்றிகள் சாதனையை (மொத்தம் 9 முறை) தொடர்ந்தது.

    பார்டர் -கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் (2024-2025) நடைபெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.


    இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு (2014-15க்குப் பின்) இந்தத் தொடரை வென்று, கோப்பையை மீட்டெடுத்தது. இந்தியா தொடர்ச்சியாக இரு முறை (2018-19, 2020-21) ஆஸ்திரேலியாவில் வென்றிருந்த நிலையில், இது ஆஸ்திரேலியாவின் வரலாற்று சாதனையாக பார்க்கப்பட்டது.

    • ஹர்திக் காதலியான மஹைகா சர்மா ஒரு ஹோட்டலில் இருந்து வெளிவரும் போது படிக்கட்டில் நடந்து வருவார்.
    • கவர்ச்சியான ஆடைகளில் வரும் அவரை கீழ் கோணத்தில் இருந்து தவறான கோணத்தில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

    இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவர் நடப்பு ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது காயமடைந்தார். தற்போது காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளார். அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.

    முன்னதாக ஹர்திக் பாண்ட்யா மற்றும் மாடல் அழகியான மகிஹா ஷர்மா ஆகிய இருவரும் காதலர்கள். கடந்த அக்டோபர் 2025ல், தனது பிறந்தநாளுக்கு முன்னதாக மகிஹாவுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை பகிர்ந்து ஹர்திக் இந்த காதலை உறுதி செய்தார்.

    இந்நிலையில் ஹர்திக் காதலியான மகிஹா சர்மா ஒரு ஹோட்டலில் இருந்து வெளிவரும் போது படிக்கட்டில் நடந்து வருவார். கவர்ச்சியான ஆடைகளில் வரும் அவரை கீழ் கோணத்தில் இருந்து தவறான கோணத்தில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி உள்ளனர்.

    இதனை பார்த்த ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் காட்டமாக பேசியுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் பொது வாழ்க்கையில் இருப்பதால் மக்கள் எங்களை கவனிப்பார்கள், போட்டோ எடுப்பார்கள் என்பதை நான் அறிவேன். அதை ஏற்கிறேன். ஆனால் இன்று நடந்த சம்பவம் எல்லை மீறிய ஒன்று. மகிஹா படிக்கட்டுகளில் சாதாரணமாகத் தான் இறங்கி வந்தார். ஆனால், எந்த பெண்ணையும் புகைப்படம் எடுக்கக்கூடாத ஒரு மோசமான கோணத்தில் அவரை படம் பிடித்துள்ளனர். ஒரு தனிப்பட்ட தருணத்தை வைத்து கேவலமான முறையில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்கள்.

    இது யார் எடுத்தது, என்ன தலைப்பு கொடுத்தார்கள் என்பதல்ல பிரச்சனை. இது அடிப்படை மரியாதை சம்பந்தப்பட்டது. பெண்களுக்கு கண்ணியம் உள்ளது. அனைவரும் எல்லைகளை மதிக்க வேண்டும். பத்திரிகை நண்பர்களின் உழைப்பை நான் மதிக்கிறேன். எப்போதும் ஒத்துழைப்பு தருகிறேன். ஆனால் தயவு செய்து கொஞ்சம் மனிதத்தன்மையுடன் நடந்துகொள்ளுங்கள். எல்லாவற்றையும் படம் பிடிக்க வேண்டிய அவசியமில்லை.

    என பாண்ட்யா கூறியுள்ளார்.

    • நான் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அபிஷேக் உடன் இணைந்து விளையாடியுள்ளேன்.
    • புதிய பந்தை எடுக்கும் பந்துவீச்சாளருக்கு அவரைச் சீக்கிரம் வீழ்த்துவதுதான் பெரிய சவாலாக இருக்கும்.

    கட்டாக்:

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று (டிசம்பர் 9) கட்டாக்கில் தொடங்குகிறது.

    போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் சந்தித்தார்.

    அப்போது அபிஷேக் சர்மா விக்கெட்டை வீழ்த்துவதுதான் எங்களுடைய இலக்கு என கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அபிஷேக் உடன் இணைந்து விளையாடியுள்ளேன். அவர் ஒரு அற்புதமான பையன் மற்றும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். என்பதில் சந்தேகமே இல்லை. அவர் தான் எங்களுக்கு பெரிய விக்கெட்.

    புதிய பந்தை எடுக்கும் பந்துவீச்சாளருக்கு அவரைச் சீக்கிரம் வீழ்த்துவதுதான் பெரிய சவாலாக இருக்கும். அவர் ஒரு மேட்ச் வின்னர். அவரை விரைவாக அவுட் ஆக்குவது எங்களுக்கு மிக முக்கியம்.

    முதல் பந்திலிருந்தே அடித்து ஆட அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. இதுதான் நவீன கிரிக்கெட். இது பார்ப்பதற்கு என்டர்டெயின்மென்ட்டாக இருக்கிறது. மேலும் டி20 லீக் போட்டிகளில் வாய்ப்பு பெறவும் இது அவர்களுக்கு உதவுகிறது

    என்று மார்க்ரம் கூறினார்.

    ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ரவுண்ட்-ராபின் ஸ்டேஜின் 5-வது சுற்று ஆட்டத்தில் அர்ஜுன் எரிகைசி, மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.
    • இந்த வெற்றியால் அர்ஜுன், போட்டியின் குரூப் ஸ்டேஜில் 4.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

    ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் பைனல் 2025 போட்டி தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இந்த

    போட்டியின் ரவுண்ட்-ராபின் ஸ்டேஜின் 5-வது சுற்று ஆட்டத்தில் இந்திய செஸ் வீரர் அர்ஜுன் எரிகைசி, உலகின் முன்னணி வீரரான மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் எரிகைசி வெற்றி பெற்றார். இந்த வெற்றியால் அர்ஜுன், போட்டியின் குரூப் ஸ்டேஜில் 4.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். கார்ல்சனும் 4.5 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.

    உஸ்பெகிஸ்தானின் நொதிர்பெக் சிந்தரோவ் 5.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், லெவன் அரோனியன் 5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். போட்டியின் அடுத்த கட்டங்கள் நாக்அவுட் சுற்றுகளாக தொடரும். அர்ஜுன் காலிறுதி ஆட்டத்தில் கீமருடன் மோதவுள்ளார்.

    இந்த வெற்றி அர்ஜுனின் செஸ் வாழ்க்கையில் ஒரு முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது. ஏனெனில் கார்ல்சன் போன்ற அனுபவமிக்க வீரரை ஃப்ரீஸ்டைல் செஸ் போன்ற வடிவத்தில் வீழ்த்தியது சிறப்பு வாய்ந்தது.

    • ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹெசில்வுட் காயம் காரணமாக ஆஷஸ் தொடரில் இருந்து விலகினார்.
    • அவரை தொடர்ந்து இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளரும் விலகி உள்ளார்.

    அடிலெய்டு:

    இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இதனையடுத்து இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர வலை பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹெசில்வுட் காயம் காரணமாக ஆஷஸ் தொடரில் இருந்து விலகிய நிலையில் இங்கிலாந்து அணியிலும் ஒரு வீரர் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    அதன்படி இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடாத நிலையில் மீதமுள்ள போட்டியில் இருந்து மார்க் வுட் விலகி உள்ளார். அவருக்கு மாற்று வீரராக மேத்யூ ஃபிஷர் எச் இங்கிலாந்து அணியில் இணைகிறார்.

    • இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
    • ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    அடிலெய்டு:

    இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இதனையடுத்து இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர வலை பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடதா ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் இந்த போட்டியில் விளையாடுவார் என உறுதி செய்துள்ளார். அதே நேரத்தில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் எஞ்சிய டெஸ்டில் இருந்து விலகி உள்ளார்.

    ×