என் மலர்
நீங்கள் தேடியது "மகிஹா சர்மா"
- ஹர்திக் காதலியான மஹைகா சர்மா ஒரு ஹோட்டலில் இருந்து வெளிவரும் போது படிக்கட்டில் நடந்து வருவார்.
- கவர்ச்சியான ஆடைகளில் வரும் அவரை கீழ் கோணத்தில் இருந்து தவறான கோணத்தில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவர் நடப்பு ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது காயமடைந்தார். தற்போது காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளார். அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.
முன்னதாக ஹர்திக் பாண்ட்யா மற்றும் மாடல் அழகியான மகிஹா ஷர்மா ஆகிய இருவரும் காதலர்கள். கடந்த அக்டோபர் 2025ல், தனது பிறந்தநாளுக்கு முன்னதாக மகிஹாவுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை பகிர்ந்து ஹர்திக் இந்த காதலை உறுதி செய்தார்.
இந்நிலையில் ஹர்திக் காதலியான மகிஹா சர்மா ஒரு ஹோட்டலில் இருந்து வெளிவரும் போது படிக்கட்டில் நடந்து வருவார். கவர்ச்சியான ஆடைகளில் வரும் அவரை கீழ் கோணத்தில் இருந்து தவறான கோணத்தில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி உள்ளனர்.
இதனை பார்த்த ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் காட்டமாக பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாங்கள் பொது வாழ்க்கையில் இருப்பதால் மக்கள் எங்களை கவனிப்பார்கள், போட்டோ எடுப்பார்கள் என்பதை நான் அறிவேன். அதை ஏற்கிறேன். ஆனால் இன்று நடந்த சம்பவம் எல்லை மீறிய ஒன்று. மகிஹா படிக்கட்டுகளில் சாதாரணமாகத் தான் இறங்கி வந்தார். ஆனால், எந்த பெண்ணையும் புகைப்படம் எடுக்கக்கூடாத ஒரு மோசமான கோணத்தில் அவரை படம் பிடித்துள்ளனர். ஒரு தனிப்பட்ட தருணத்தை வைத்து கேவலமான முறையில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்கள்.
இது யார் எடுத்தது, என்ன தலைப்பு கொடுத்தார்கள் என்பதல்ல பிரச்சனை. இது அடிப்படை மரியாதை சம்பந்தப்பட்டது. பெண்களுக்கு கண்ணியம் உள்ளது. அனைவரும் எல்லைகளை மதிக்க வேண்டும். பத்திரிகை நண்பர்களின் உழைப்பை நான் மதிக்கிறேன். எப்போதும் ஒத்துழைப்பு தருகிறேன். ஆனால் தயவு செய்து கொஞ்சம் மனிதத்தன்மையுடன் நடந்துகொள்ளுங்கள். எல்லாவற்றையும் படம் பிடிக்க வேண்டிய அவசியமில்லை.
என பாண்ட்யா கூறியுள்ளார்.






