என் மலர்
விளையாட்டு
- பாபர் அசாம்- வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
- முகமது ரிஸ்வான் தலையிட்டு சமரசம் செய்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இஸ்லாமாபாத்:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-4 சுற்றில் இலங்கையிடம் தோற்று பாகிஸ்தான் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.
இந்த தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்- வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. முகமது ரிஸ்வான் தலையிட்டு சமரசம் செய்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் இடையே மோதல் இல்லை என்று அங்கு அணியின் மூத்த வீரர் தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக அந்த கூறும்போது, அணியின் ஒரே கவனம் கிரிக்கெட்டில் உள்ளது. விமர்சனங்களை பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை .ஒரு போட்டியில் தோல்வியடைவது விமர்சகர்களுக்கு அவர்களின் கருத்துக்களை சொல்ல வாய்ப்பளிக்கிறது.
அணியின் கூட்டத்தில் அனைவரும் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர். ஆனால் வார்த்தை மோதல் ஏற்பட்டது என்பதில் எந்த உண்மையும் இல்லை. அனைவரும் ஒன்றாக கூட்டத்தை விட்டு வெளியேறினர். பல வீரர்கள் ஒரே விமானத்தில் பாகிஸ்தானுக்கு திரும்பினர் என்றார்.
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினி.
- இவர் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினி. இவர் தன் திறமையினாலும் ஸ்டைலினாலும் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ரசிகர்கள் இவரை 'சூப்பர் ஸ்டார்' என்று அன்போடு அழைத்து வருகின்றனர். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது.
தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இவர் 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. படப்பிடிப்புகளை முடித்த ரஜினி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல அரசியல் தலைவர்களை சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டானது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது. அதாவது, இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா நடிகர் ரஜினிக்கு வழங்கி கவுரவித்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்பு அமிதாப் பச்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கருக்கு இந்த கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.
- இந்திய அணி 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளது.
துபாய்:
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை ஒருநாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவடைந்தன.
இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது.
அதில், பாகிஸ்தான் அணி மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் தோல்வியை தழுவியதால் ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்திற்கு சரிந்தது. அந்த அணி உலக கோப்பை தொடருக்கு முன் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேற இந்தியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்ற வேண்டும்.
இந்திய அணி தற்போது தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளது.
வரவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றினால் உலக கோப்பை தொடரில் இந்திய அணி நம்பர் 1 அணியாக வலம் வரும்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.
- இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
ஆஸ்திரேலிய அணி வரும் 22, 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
கே.எல்.ராகுல் (கேப்டன்), ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், ஆர்.அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது ஷமி, முகம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு முதல் இரண்டு ஆட்டங்களில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்தியா 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது.
- இலங்கை அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகளை சிராஜ் கைப்பற்றினார்.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இந்தியா 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை முகமது சிராஜ் வீசிய அதிரடியான ஸ்விங் பந்துகளை கணிக்க முடியாமல் வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மோசமான உலக சாதனை படைத்தது.
இப்போட்டியில் 4-வது ஓவரை வீசிய முகமது சிராஜ் முதல் பந்தில் நிசங்காவை அவுட்டாக்கி 3, 4 ஆகிய பந்துகளில் முறையே சமரவிக்ரமா மற்றும் அசலங்கா ஆகியோரையும் அவுட்டாக்கினார். அதனால் ஹாட்ரிக் எடுப்பதற்கு வாய்ப்பை பெற்றார். அதனால் அவரே பீல்டிங்கை தெர்வு செய்தார்.
மிட் ஆன் திசையில் யாருமே பில்டிங் விடவில்லை. சிலிப்பில் 4 பேர் நின்றனர். ஹாட்ரிக் வாய்ப்புக்கான பந்தை சிறப்பாக வீசியும் டீ சில்வா மிட் ஆன் திசையில் பவுண்டரி அடித்தார். இருப்பினும் அதை பவுண்டரிக்கு விடக்கூடாது என்ற நோக்கத்தில் வேகமாக ஓடி துரத்திய முகமது சிராஜ் முடிந்தளவுக்கு போராடியும் தடுக்க முடியவில்லை. அதை ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டு பார்த்த விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் வாய் மீது கை வைத்து சிரித்தார்கள். குறிப்பாக ஏற்கனவே 8/4 என இலங்கை சரிந்தும் அந்த பவுண்டரி போனால் போகட்டும் என்று விடாமல் வெறித்தனமாக சிராஜ் துரத்தியதை நினைத்து விராட் கோலி வெளிப்படையாகவே சிரித்தார்.
இருப்பினும் தம்முடைய ஓவரில் ஒரு ரன் கூட எக்ஸ்ட்ரா கொடுக்கக் கூடாது என்ற நோக்கத்தில் வேகமாக துரத்திய சிராஜ் நிறைய முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளையும் பெற்றார். அத்துடன் அடுத்த பந்திலேயே டீ சில்வாவை அவுட்டாக்கிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற மாபெரும் சரித்திரம் படைத்து அதிவேகமாக 5 விக்கெட்டுகள் (16 பந்துகளில்) எடுத்த இந்திய பவுலர் என்ற சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.
- ரோகித் தலைமையில் ஆசிய கோப்பையை இந்தியா 2-வது முறையாக வென்றுள்ளது.
- அதிக ஆசிய கோப்பைகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற சச்சின், டோனி உட்பட வேறு யாரும் படைக்காத சாதனை படைத்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் தலைமையில் ஆசிய கோப்பையை இந்தியா 2-வது முறையாக வென்றுள்ளது.
ரோகித் 2008-ம் ஆண்டு முதல் முறையாக ஆசிய கோப்பையில் விளையாடினார். அதன் பின் 2010, 2016 ஆகிய தொடர்களிலும் விளையாடினார். மேலும் 2018 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு ஆசிய கோப்பையை கைப்பற்றினார்.
அந்த வகையில் 2008, 2010, 2016, 2018, 2023* ஆகிய 5 தொடர்களில் விளையாடியுள்ள அவர் வரலாற்றில் அதிக ஆசிய கோப்பைகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற சச்சின், டோனி உட்பட வேறு யாரும் படைக்காத சாதனை படைத்துள்ளார்.
அதே போல ஆசிய கோப்பை வரலாற்றில் 2 சாம்பியன் பட்டங்களை (2018, 2023) வென்ற இந்திய கேப்டன் என்ற முகமது அசாருதீன் மற்றும் எம்எஸ் டோனி ஆகியோரது சாதனைகளையும் ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.
அத்துடன் 2022 ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் ரோஹித் தலைமையில் 10 விக்கெட் வித்யாசத்தில் வென்ற இந்தியா இந்த தொடரில் நேபாளுக்கு எதிரான போட்டியிலும் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த நிலையில் நேற்று 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதால் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 முறை 10 வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற யாராலும் தொட முடியாத சாதனை ரோகித் படைத்துள்ளார்.
ஏனெனில் இதற்கு முன் சீனிவாசன் வெங்கட்ராகவன், சுனில் கவாஸ்கர், சவுரவ் கங்குலி, முகமது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், டோனி, கேஎல் ராகுல் ஆகியோர் தலைமையில் தலா 1 முறை மட்டுமே 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது.
இது போக கடந்த ஜனவரியில் இதே இலங்கைக்கு எதிராக திருவனந்தபுரத்தில் 317 ரன்கள் வித்தியாசத்தில் ரோகித் தலைமையில் வென்ற இந்தியா நேற்று 6.1 ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்து வென்றது.
இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் (317) வித்தியாசத்திலும் அதிக பந்துகள் (263) வித்தியாசத்திலும் அதிவேகத்தில் சேசிங் செய்தும் (6.1 ஓவர்களில்) வெற்றியை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற 3 சரித்திரத்தையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.
- அதிரடியாக விளையாடி சதம் அடித்த சாய் ஹோப் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
- சிபிஎல் தொடரில் தம்முடைய முதல் சதத்தை ஹோப் (41 பந்துகளில்) பதிவு செய்தார்.
வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரீமியர் லீக் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் பார்பிடாஸ் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பார்பர்டாஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
பிளே ஆஃப் சுற்றுக்கு 4-வது அணியாக தகுதி பெறுவதற்கு இந்த போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் களமிறங்கின.
முதலில் பேட்டிங் செய்த கயனா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக சாய் கோப் 106 ரன்கள் குவித்தார். 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பார்பர்டாஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 88 ரன்கள் வித்தியாசத்தில் கயானா அணி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த சாய் ஹோப் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஒரு கட்டத்தில் 53 பந்தில் 69 ரன்கள் எடுத்திருந்த அவர் 16-வது ஓவரில் 4 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசி 32 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சிபிஎல் தொடரில் தம்முடைய முதல் சதத்தை ஹோப் (41 பந்துகளில்) பதிவு செய்தார்.
மேலும் சிபிஎல் தொடரில் அதிவேகமாக சதமடித்து 2-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். முதலிடத்தில் ஆண்ட்ரே ரசல் 2018-ல் 40 பந்துகளில் ட்ரினிடாட் அணிக்கு எதிராக 100 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.
- உலகக் கோப்பைக்கு முன்பு சோர்வு ஏற்படும்.
- இதனால் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்பது சிறந்ததாக இருக்காது.
புதுடெல்லி:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் விளையாடும் முடிவை பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
உலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவது தேவையற்றது. ஏனென்றால் இது இந்திய வீரர்களுக்கு கூடுதல் சோர்வை ஏற்படுத்தி விடும். ஆகஸ்டு மாதத்தில் இருந்து இந்திய அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.
உலகக்கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய தொடர் இடையே இந்திய வீரர்களுக்கு ஓய்வு எடுக்க சிறிது நேரமே இருக்கிறது. இதனால் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்பது சிறந்ததாக இருக்காது.
உலகக்கோப்பையில் இந்திய அணி வெவ்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணம் செய்யவே ஒருநாள் ஆகிவிடும். இதனால் உலகக்கோப்பையில் ஆற்றலுடன் இருப்பது முக்கியம். இந்த நேரம் ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவது ஏன்? என தெரியவில்லை.
இவ்வாறு வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
- இந்தியா இலங்கையை இப்படி தோற்கடிக்கும் என்று நான் கற்பனை செய்யவில்லை.
- ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
கராச்சி:
6 அணிகள் பங்கேற்ற 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்திய இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியாவும், இலங்கையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது. இதில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வீழ்த்தி 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில் எதிர்வரும் உலகக்கோப்பையில் இந்தியா மிகவும் ஆபத்தான அணியாக இருக்கும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ரோகித் சர்மாவின் கேப்டன்சி மேம்பட்டுள்ளது. அவரும் அணி நிர்வாகமும் சிறப்பான முடிவுகளை எடுத்து வருகின்றனர். இந்தியா இலங்கையை இப்படி தோற்கடிக்கும் என்று நான் கற்பனை செய்யவில்லை.
இங்கிருந்து, உலகக்கோப்பையில் இந்தியா மிகவும் ஆபத்தான அணியாக இருக்கலாம். நல்ல வேலை செய்தீர்கள் சிராஜ். நீங்கள் இந்தியாவின் வெற்றிக்கு உதவி செய்தீர்கள். உங்கள் பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்குக் கொடுத்து நீங்கள் சிறப்பாகச் செய்தீர்கள்.
இந்தியா உலகக்கோப்பைக்கு அவர்களின் நம்பிக்கையை உயர்த்திய பிறகு செல்கிறது. இந்தியா பின்தங்கிய நிலையில் தொடங்கியது. ஆனால் இப்போது இந்திய அணியின் செயல்பாடு பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, பல நாடுகளுக்கும் கவலையாக இருப்பதாக உணர்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்து ஒன்றரை ஆண்டுகளாக நான் என்னுடைய பந்துவீச்சில் பெரிய அளவில் முன்னேற்றத்தை கண்டு வருகிறேன்.
- நான் இவ்வளவு சிறப்பாக பந்து வீச ரோஹித் சர்மாவும் ஒரு காரணம்.
ஆசிய கோப்பை தொடரின் இறுதிபோட்டியில் இந்தியா இலங்கை மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 6.1 ஓவரில் 51 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இஷான் கிஷன் 23 ரன்களும், சுப்மன் கில் 27 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் ஒரு ஓவர் வீசிய சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 1 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இந்த போட்டியில் அவருக்கு விக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் இந்த தொடர் முழுவதுமே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு இந்த ஆசிய கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த போட்டி முடிந்து பரிசளிப்பு விழாவின் போது பேசிய தொடர் நாயகன் குல்தீப் யாதவ் கூறியதாவது:-
கடந்து ஒன்றரை ஆண்டுகளாக நான் என்னுடைய பந்துவீச்சில் பெரிய அளவில் முன்னேற்றத்தை கண்டு வருகிறேன். அதற்காக கடினமாக உழைத்தும் வருகிறேன். தற்போது நான் மேலும் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் வகையில் பந்துவீசி வருவதாக நினைக்கிறேன்.
டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை லென்த் மிகவும் முக்கியம். அதேபோன்று ஒருநாள் போட்டிகளிலும் லென்த் மிகவும் முக்கியமான ஒன்று. இப்போது எல்லாம் நான் விக்கெட்டைப் பற்றி யோசிக்காமல் என்னுடைய லைன் மற்றும் லென்த்தில் கவனம் வைத்து அப்படியே பந்துவீசி வருகிறேன். மேலும் என்னுடைய இந்த சிறப்பான பந்துவீச்சுக்காக நான் பெரிய அளவில் பயிற்சி செய்து வருகிறேன்.
இன்று நான் இவ்வளவு சிறப்பாக பந்து வீச ரோஹித் சர்மாவும் ஒரு காரணம். அவரின் என்கரேஜ்மென்ட் தான் என்னுடைய பந்துவீச்சில் என்னுடைய வேகத்தை மாற்றி அமைக்க உதவியது. எப்போதுமே வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டியின் ஆரம்பத்திலேயே இரண்டு விக்கட்டுகளை எடுத்துக் கொடுத்தால் ஸ்பின்னர்களுக்கு இன்னும் அது உதவிகரமாக இருக்கும் என குல்தீப் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.
- சிராஜின் 21 ரன்னுக்கு 6 விக்கெட், ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக ஒரு பவுலரின் மிகச்சிறந்த பந்துவீச்சாக பதிவானது.
- முகமது சிராஜ் தனது 2-வது ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை வேட்டையாடினார்.
இலங்கையின் பேட்டிங் முதுகெலும்பை சுக்குநூறாக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 7 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். அவர் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும்.
மேலும் சில சாதனை விவரம் வருமாறு:-
* முகமது சிராஜியின் 21 ரன்னுக்கு 6 விக்கெட், ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக ஒரு பவுலரின் மிகச்சிறந்த பந்துவீச்சாக பதிவானது. இதற்கு முன்பு பாகிஸ்தானின் வாக்கர் யூனிஸ் 1990-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த இலங்ைகக்கு எதிரான ஆட்டத்தில் 26 ரன்னுக்கு 6 விக்கெட் சாய்த்ததே சிறந்த பந்து வீச்சாக இருந்தது.
* அற்புதமாக பந்து வீசிய இந்திய பவுலர்களில் ஸ்டூவர்ட் பின்னி (4 ரன்னுக்கு 6 விக்கெட், வங்காளதேசம் எதிராக), அனில் கும்பிளே (12-6, வெஸ்ட் இண்டீஸ் எதிராக), பும்ரா (19-6, இங்கிலாந்துக்கு எதிராக) ஆகியோருக்கு அடுத்த இடத்தை முகமது சிராஜின் பந்து வீச்சு பிடித்துள்ளது.
* முகமது சிராஜ் தனது 2-வது ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை வேட்டையாடினார். பந்து வாரியாக சாதனை விவரம் கணக்கிடப்பட்ட 2002-ம் ஆண்டில் இருந்து ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை அறுவடை செய்த 4-வது பவுலராக முகமது சிராஜ் திகழ்கிறார். ஏற்கனவே இலங்கையின் சமிந்தா வாஸ் (2003-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக), பாகிஸ்தானின் முகமத் சமி (2003-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக), இங்கிலாந்தின் அடில் ரஷித் (2019-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) ஆகியோர் ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்கள்.
* 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் 6 விக்கெட் வீழ்த்தினார். அதன் பிறகு ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் 6 விக்கெட் எடுத்த வீரர் சிராஜ் தான்.
* இலங்கையின் 50 ரன், ஒரு நாள் போட்டி இறுதிப்போட்டிகளில் ஒரு அணியின் மோசமான ஸ்கோராக அமைந்துள்ளது. இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான இறுதிசுற்றில் இந்தியா 54 ரன்னில் ஆல்-அவுட் ஆகி இருந்ததே இந்த வகையில் சொதப்பல் ஸ்கோராக இருந்தது.
* இந்தியாவுக்கு எதிராக ஒரு அணியின் குறைந்த ஸ்கோரும் இது தான். 2014-ம் ஆண்டு மிர்புரில் நடந்த ஆட்டத்தில் வங்காளதேசம் 58 ரன்னில் அடங்கியதே முந்தைய தாழ்ந்த ஸ்கோராகும்.
- இந்திய அணி இலங்கையை 50 ரன்னில் சுருட்டியது.
- இந்திய அணி 8-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இலங்கையை 50 ரன்னில் சுருட்டி சூப்பர் வெற்றியுடன் கோப்பையை 8-வது முறையாக சொந்தமாக்கியது.
ஆசிய கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்காக களத்தில் நின்று கொண்டு பேசி வந்தனர். அப்போது இஷான் கிஷன், விராட் கோலி போல நடந்து காட்டினார். அதை பார்த்த விராட் கோலி என்னை மாதிரி நடப்பதாக கூறி, பின்னாடி தூக்கி கொண்டு நடக்கிறாய் என கிண்டலாக அவரும் நடந்து காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தண்ணீர் கொடுக்க வந்த வீடியோ ஒன்று வைரலாகி வந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.






