என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சிராஜின் 21 ரன்னுக்கு 6 விக்கெட், ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக ஒரு பவுலரின் மிகச்சிறந்த பந்துவீச்சாக பதிவானது.
    • முகமது சிராஜ் தனது 2-வது ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை வேட்டையாடினார்.

    இலங்கையின் பேட்டிங் முதுகெலும்பை சுக்குநூறாக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 7 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். அவர் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும்.

    மேலும் சில சாதனை விவரம் வருமாறு:-

    * முகமது சிராஜியின் 21 ரன்னுக்கு 6 விக்கெட், ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக ஒரு பவுலரின் மிகச்சிறந்த பந்துவீச்சாக பதிவானது. இதற்கு முன்பு பாகிஸ்தானின் வாக்கர் யூனிஸ் 1990-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த இலங்ைகக்கு எதிரான ஆட்டத்தில் 26 ரன்னுக்கு 6 விக்கெட் சாய்த்ததே சிறந்த பந்து வீச்சாக இருந்தது.

    * அற்புதமாக பந்து வீசிய இந்திய பவுலர்களில் ஸ்டூவர்ட் பின்னி (4 ரன்னுக்கு 6 விக்கெட், வங்காளதேசம் எதிராக), அனில் கும்பிளே (12-6, வெஸ்ட் இண்டீஸ் எதிராக), பும்ரா (19-6, இங்கிலாந்துக்கு எதிராக) ஆகியோருக்கு அடுத்த இடத்தை முகமது சிராஜின் பந்து வீச்சு பிடித்துள்ளது.

    * முகமது சிராஜ் தனது 2-வது ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை வேட்டையாடினார். பந்து வாரியாக சாதனை விவரம் கணக்கிடப்பட்ட 2002-ம் ஆண்டில் இருந்து ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை அறுவடை செய்த 4-வது பவுலராக முகமது சிராஜ் திகழ்கிறார். ஏற்கனவே இலங்கையின் சமிந்தா வாஸ் (2003-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக), பாகிஸ்தானின் முகமத் சமி (2003-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக), இங்கிலாந்தின் அடில் ரஷித் (2019-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) ஆகியோர் ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்கள்.

    * 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் 6 விக்கெட் வீழ்த்தினார். அதன் பிறகு ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் 6 விக்கெட் எடுத்த வீரர் சிராஜ் தான்.

    * இலங்கையின் 50 ரன், ஒரு நாள் போட்டி இறுதிப்போட்டிகளில் ஒரு அணியின் மோசமான ஸ்கோராக அமைந்துள்ளது. இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான இறுதிசுற்றில் இந்தியா 54 ரன்னில் ஆல்-அவுட் ஆகி இருந்ததே இந்த வகையில் சொதப்பல் ஸ்கோராக இருந்தது.

    * இந்தியாவுக்கு எதிராக ஒரு அணியின் குறைந்த ஸ்கோரும் இது தான். 2014-ம் ஆண்டு மிர்புரில் நடந்த ஆட்டத்தில் வங்காளதேசம் 58 ரன்னில் அடங்கியதே முந்தைய தாழ்ந்த ஸ்கோராகும்.

    • இந்திய அணி இலங்கையை 50 ரன்னில் சுருட்டியது.
    • இந்திய அணி 8-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இலங்கையை 50 ரன்னில் சுருட்டி சூப்பர் வெற்றியுடன் கோப்பையை 8-வது முறையாக சொந்தமாக்கியது.

    ஆசிய கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்காக களத்தில் நின்று கொண்டு பேசி வந்தனர். அப்போது இஷான் கிஷன், விராட் கோலி போல நடந்து காட்டினார். அதை பார்த்த விராட் கோலி என்னை மாதிரி நடப்பதாக கூறி, பின்னாடி தூக்கி கொண்டு நடக்கிறாய் என கிண்டலாக அவரும் நடந்து காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

    சில தினங்களுக்கு முன்பு நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தண்ணீர் கொடுக்க வந்த வீடியோ ஒன்று வைரலாகி வந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


    • எங்களிடம் உள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் வெவ்வேறு திறமையுடன் வித்தியாசமாக பந்து வீசக்கூடியவர்கள்.
    • ஸ்லிப்பில் நின்றபடி முகமது சிராஜ் பந்து வீசிய விதத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    இது போன்று வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசுவதை பார்க்கும் போது எனக்கு மிகவும் மனநிறைவை தருகிறது. எங்களிடம் உள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் வெவ்வேறு திறமையுடன் வித்தியாசமாக பந்து வீசக்கூடியவர்கள். ஸ்லிப்பில் நின்றபடி முகமது சிராஜ் பந்து வீசிய விதத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒட்டுமொத்தத்தில் இது ஒரு அற்புதமான செயல்பாடு. அதுவும் இறுதிப்போட்டியில் இது மாதிரி அசத்துவது நீண்ட காலம் மனதில் நிலைத்து நிற்கும்.

    சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேலுக்கு லேசான தசைகிழிவு தான். ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு ஆட்டங்களில் ஆடுவது சந்தேகம் தான். ஸ்ரேயாஸ் அய்யர் நன்றாக இருக்கிறார். பயிற்சியில் ஈடுபடுகிறார். கிட்டத்தட்ட அவர் 99 சதவீதம் உடல்தகுதியை எட்டிவிட்டார்' என்றார்.

    • இலங்கை 50 ரன்னில் சுருண்டது. சிராஜ் 6 விக்கெட் சாய்த்தார்
    • இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

    ஆசிய கோப்பை இறுதிப் போட்டி நேற்று கொழும்பில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இலங்கை 50 ரன்னில் சுருண்டது. பின்னர், இந்தியா விக்கெட் இழப்பின்றி சேஸிங் செய்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    100 ஓவர்கள் கொண்ட இந்த போட்டி 21.3 ஓவர்களிலேயே முடிவடைந்தது. போட்டி முன்னதாகவே முடிந்த நிலையில், இந்திய வீரர்கள் உடனடியாக இந்தியா திரும்பினர். அவர்கள் இன்று காலை மும்பையில் உள்ள கலினா விமான நிலையம் வந்தடைந்தனர். அதன்பின், சொகுசு காரில் தங்களது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா போன்றோர் தங்களது சொகுசு காரில் புறப்பட்டுச் சென்றனர். வெறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள், மும்பையில் இருந்து விமானங்கள் மூலம் தங்களது சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

    • இந்தியாவின் ரோகன் போபண்ணா, யுகி பாம்ப்ரி ஜோடி மொராக்கோ ஜோடியை வென்றது
    • 43 வயதான ரோகன் போபண்ணாவுக்கு இதுவே கடைசி டேவிஸ் கோப்பை போட்டியாகும்.

    லக்னோ:

    டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் 2 சுற்றில் இந்தியா, மொராக்கோ அணிகள் இடையிலான ஆட்டம் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் தொடங்கியது.

    முதல் நாளில் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்களில் சுமித் நாகல் வெற்றி பெற்றார். சசிகுமார் முகுந்த் காயத்தால் பாதியில் விலகினார்.

    இந்நிலையில், 2-வது நாளான நேற்று இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் ரோகன் போபண்ணா, யுகி பாம்ப்ரி ஜோடி 6-2, 6-1 என்ற நேர் செட்டில் மொராக்கோவின் பென்செட்ரிட், யுனெஸ் லலாமி லாரோசி ஜோடியை எளிதில் வென்றது.

    பெங்களூருவைச் சேர்ந்த 43 வயதான ரோகன் போபண்ணாவுக்கு இதுவே கடைசி டேவிஸ் கோப்பை போட்டி ஆகும். இந்தப் போட்டியில் இருந்து அவர் வெற்றியோடு விடைபெற்றார்.

    இதையடுத்து, நடந்த மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் சுமித் நாகல் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் யாசினே டிலிமியையும், இந்தியாவின் திக்விஜய் பிரதாப் சிங் 6-1, 5-7, 10-6 என்ற செட் கணக்கில் மொராக்கோவின் வேலிட் அஹோடாவையும் வீழ்த்தினர். முடிவில் இந்தியா 4-1 என்ற கணக்கில் மொராக்கோவை தோற்கடித்தது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 315 ரன்கள் சேர்த்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 193 ரன்னில் ஆல் அவுட்டானது.

    ஜோகனஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், அடுத்த இரு போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்தது.

    அந்த அணியின் மார்க்ரம் 93 ரன்னும், டேவிட் மில்லர் 63 ரன்னும், ஜேன்சன் 47 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் சாம்பா 3 விக்கெட்டும், அபாட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 71 ரன்னில் அவுட்டானார். லபுசேன் 44 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி 34.1 ஓவரில் 193 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 122 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 3-2 என கைப்பற்றியது.

    டி20 தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஒருநாள் தொடரை வென்றது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ஜேன்சன் 5 விக்கெட்டும், மகராஜ் 4 விக்கெட் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகன் விருது ஜேன்சனுக்கும், தொடர் நாயகன் விருது மார்க்ரமுக்கும் வழங்கப்பட்டது.

    • இந்திய அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
    • சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.

    டாஸ் வென்ற இலங்கை அணி தொடக்கம் முதலே தடுமாறியது. இறுதியில், இலங்கை அணி 15.2 ஓவரில் 50 ரன்னில் சுருண்டது.

    இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்திய அணி 6.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் நடப்பு சாம்பியன் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

    இந்நிலையில், ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆசிய கோப்பையை வென்றதற்கு வாழ்த்துகள். போட்டியின் மூலம் நமது வீரர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

    • உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி பிரேசிலில் நடைபெற்றது.
    • இதில் தமிழ்நாட்டு வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.

    பிரசிலியா:

    உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் பங்கேற்றார்

    நேற்று நடந்த இறுதிப்போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்றார். அவர் 252.2 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார்.

    பிரேசிலில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணி பெறும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 6 விக்கெட் வீழ்த்திய முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
    • அதற்கான பரிசுத்தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கினார்.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா இலங்கை அணிகள் மோதின.

    முதலில் ஆடிய இலங்கை அணி 50 ரன்னில் சுருண்டது. முகமது சிராஜ் ஒரே ஓவரில் 4 விக்கெட் உள்பட 6 விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார்.

    இறுதியில், இந்தியா 8-வது முறையாக ஆசிய கோப்பை வென்று சாம்பியன் ஆனது.

    இந்நிலையில், 6 விக்கெட் வீழ்த்திய முகமது சிராஜ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. பரிசு பெற்ற சிராஜ், அந்தத் தொகையை கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு வழங்குவதாக அறிவித்தார்.

    இதுதொடர்பாக, சிராஜ் கூறுகையில், இந்த ரொக்கப் பரிசை மைதான வீரர்களுக்கு வழங்க விரும்புகிறேன். அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் என தெரிவித்தார்.

    முகமது சிராஜின் இந்த செயலுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கினர்.
    • இந்திய அணி 6.1 ஓவரில் 51 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றிப்பெற்றது.

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    3 மணியளவில் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மழையால் தாமதமானது. இதைதொடர்ந்து, 3.40 மணியளவில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

    முதலாவதாக களமிறங்கிய குசல் பெரேரா முதல் பந்திலேயே அவுட்டானார். தொடர்ந்து, பதும் நிசான்கா 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    சதீரா மற்றும் சரீத் அசலங்கா, தசுன் ஷனாகா ஆகியோரும் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தனர். தனஞ்சயா டி சில்வா 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    குசல் மெடிஸ் 17 ரன்களில் அவுட்டானார்.

    இந்நிலையில், ஆசிய கோப்பை போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறி வருகிறது. 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்துள்ளது. ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் என மொத்தம் 6 விக்கெட்டுகளை சாய்த்து இந்திய பந்து வீச்சாளர் சிராஜ் அசத்தியுள்ளார்.

    12.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்களை எடுத்து இலங்கை அணி விளையாடி வந்தது.

    தொடர்ந்து, துணித் வெல்லாலகே 8 ரன்களும், பிரமோத் மதுஷான் ஒரு ரன்னும் ஆட்டமிழந்தனர். மதீஷா பதிரனா ரன் எடுக்கால் ஆட்டமிழந்தார். துஷன் ஹேமந்த் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கமல் இருந்தார்.

    இறுதியில்,15.2 ஓவரில் 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இலங்கை அணி சுருண்டது. 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கினர்.

    முதலாவதாக பேட்டிங் செய்ய களமிறங்கிய இஷான் கிஷான் 17 பந்துகளில் 23 ரன்களும், ஷூப்மன் கில் 19 ரன்களில் 27 ரன்களும் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தனர்.

    இறுதியில், இந்திய அணி 6.1 ஓவரில் 51 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றிப்பெற்றது.

    இதன்மூலம், இந்திய அணி 8வது முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது.

    • 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்துள்ளது.
    • சதீரா மற்றும் சரீத் அசலங்கா, தசுன் ஷனாகா ஆகியோரும் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 3 மணியளவில் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மழையால் தாமதமானது.

    இதைதொடர்ந்து, 3.40 மணியளவில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. முதலாவதாக களமிறங்கிய குசல் பெரேரா முதல் பந்திலேயே அவுட்டானார். தொடர்ந்து, பதும் நிசான்கா 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    சதீரா மற்றும் சரீத் அசலங்கா, தசுன் ஷனாகா ஆகியோரும் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தனர். தனஞ்சயா டி சில்வா 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குசல் மெடிஸ் 17 ரன்களில் அவுட்டானார்.

    இந்நிலையில், ஆசிய கோப்பை போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறி வருகிறது.

    12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்துள்ளது.

    ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் என மொத்தம் 6 விக்கெட்டுகளை சாய்த்து இந்திய பந்து வீச்சாளர் சிராஜ் அசத்தியுள்ளார்.

    12.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்களை எடுத்து இலங்கை அணி விளையாடி வந்தது.

    தொடர்ந்து, துணித் வெல்லாலகே 8 ரன்களும், பிரமோத் மதுஷான் ஒரு ரன்னும் ஆட்டமிழந்தனர். மதீஷா பதிரனா ரன் எடுக்கால் ஆட்டமிழந்தார். துஷன் ஹேமந்த் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கமல் இருந்தார்.


    இந்நிலையில், 15.2 ஓவரில் 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இலங்கை அணி சுருண்டது.

    51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்துள்ளது.
    • சதீரா மற்றும் சரீத் அசலங்கா, தசுன் ஷனாகா ஆகியோரும் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 3 மணியளவில் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மழையால் தாமதமானது.

    இதைதொடர்ந்து, 3.40 மணியளவில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. முதலாவதாக களமிறங்கிய குசல் பெரேரா முதல் பந்திலேயே அவுட்டானார். தொடர்ந்து, பதும் நிசான்கா 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    சதீரா மற்றும் சரீத் அசலங்கா, தசுன் ஷனாகா ஆகியோரும் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தனர். தனஞ்சயா டி சில்வா 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குசல் மெடிஸ் 17 ரன்களில் அவுட்டானார்.

    இந்நிலையில், ஆசிய கோப்பை போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறி வருகிறது.

    12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்துள்ளது. ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் என மொத்தம் 6 விக்கெட்டுகளை சாய்த்து இந்திய பந்து வீச்சாளர் சிராஜ் அசத்தியுள்ளார்.

    12.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்களை எடுத்து இலங்கை அணி விளையாடி வருகிறது.

    ×