என் மலர்
விளையாட்டு
- 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்துள்ளது.
- சதீரா மற்றும் சரீத் அசலங்கா, தசுன் ஷனாகா ஆகியோரும் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 3 மணியளவில் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மழையால் தாமதமானது.
இதைதொடர்ந்து, 3.40 மணியளவில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. முதலாவதாக களமிறங்கிய குசல் பெரேரா முதல் பந்திலேயே அவுட்டானார். தொடர்ந்து, பதும் நிசான்கா 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
சதீரா மற்றும் சரீத் அசலங்கா, தசுன் ஷனாகா ஆகியோரும் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தனர். தனஞ்சயா டி சில்வா 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குசல் மெடிஸ் 17 ரன்களில் அவுட்டானார்.
இந்நிலையில், ஆசிய கோப்பை போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறி வருகிறது.
12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்துள்ளது. ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் என மொத்தம் 6 விக்கெட்டுகளை சாய்த்து இந்திய பந்து வீச்சாளர் சிராஜ் அசத்தியுள்ளார்.
12.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்களை எடுத்து இலங்கை அணி விளையாடி வருகிறது.
- ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா, தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.
- இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா?
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா, தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.
இன்றைய போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தேர்வு செய்தது.
ஆட்டம் தொடங்க சில நிமிடங்கள் இருந்த நிலையில் மழை பெய்ய தொடங்கியது. இதனால், ஆட்டம் தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.
கள ஆய்வுக்கு பிறகு இன்னும் சில நிமிடங்களில் போட்டி ஆரம்பித்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் இடையே, மீண்டும் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டால் ரிசர்வ் டேவான நாளை போட்டி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா, தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.
- இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா?
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா, தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் ஆசிய கோப்பையை கைப்பற்றி இருந்தது. நடப்பு தொடரில் இந்திய அணி சிறப்பாகவே ஆடி வருகிறது.
லீக் சுற்றில் நேபாளம், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கையை வீழ்த்தி இருந்தது. வங்காளதேசத்திடம் மட்டும் தோற்று இருந்தது. இலங்கையை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும். பேட்டிங்கில் சுப்மன் கில் (275 ரன்), லோகேஷ் ராகுல் (169 ரன்), விராட் கோலி (129 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ் (9 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (6 விக்கெட்), ஷர்துல் தாக்கூர் (5 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இதேபோல், நடப்பு சாம்பியனான இலங்கை அணி 7-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி 1986, 1997, 2004, 2008, 2014, 2022-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது. இலங்கை அணியின் பேட்டிங்கில் குஷால் மெண்டீஸ் (253 ரன்), சமர வீரா (215 ரன்) ஆகியோரும், பந்துவீச்சில் பதிரனா (11 விக்கெட்டும்), நெதமிகா வெல்லலகே (10 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளும் இன்று மோதுவது 167-வது ஆட்டமாகும்.
இதுவரை நடந்த 166 போட்டியில் இந்தியா 97-ல், இலங்கை 57-ல் வெற்றி பெற்றுள்ளனர். 11 போட்டி முடிவு இல்லை. ஒரு ஆட்டம் 'டை' ஆனது.
இன்றைய போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தேர்வு செய்துள்ளது.
அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்குகிறது. இந்திய அணி பந்து வீச உள்ளது. இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
- ஐ.பி.எல். போட்டியில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.
புதுடெல்லி:
19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள ஹாங்சாவில் வருகிற 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது.
மொத்தம் 40 விளை யாட்டுகள் 481 பிரிவுகளில் நடக்கிறது. கிரிக்கெட் போட்டியும் ஆசிய விளையாட்டில் இடம் பெற்றுள்ளது. ஆண்கள், பெண்களுக்கு போட்டி நடத்தப்படுகிறது.
ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஐ.பி.எல். போட்டியில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.
இந்நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று இருந்த வேகப்பந்து வீரர் ஷிவம்மவி விலகியுள்ளார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஆகாஷ்தீப் இடம் பெற்றுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி வருமாறு:-
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஜெய்ஷ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, பிரப் சிம்ரன்சிங், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ்கான், அர்தீப்சிங், முகேஷ்குமார், ஆகாஷ்தீப்.
- ஹாரிஸ் ரவூப், நசீம்ஷா ஆகியோரின் காயம் பாகிஸ்தான் அணிக்கு ஆசிய கோப்பையில் பின்னடைவை ஏற்படுத்தியது.
- தோல்விக்கு பிறகு அணி வீரர்கள் மத்தியில் பேசிய பாபர் ஆசம் சீனியர் வீரர்களின் ஆட்டத்திறன் குறித்து கேள்வி எழுப்பினார்.
கொழும்பு:
ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி கொழும்பில் இன்று நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா-தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி 8-வது முறையாக ஆசிய கோப்பை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. இலங்கை 7-வது தடவையாக சாம்பியன் பட்டம் பெறும் வேட்கையில் உள்ளது.
பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதால் வாய்ப்பை இழந்தது.
ஹாரிஸ் ரவூப், நசீம்ஷா ஆகியோரின் காயம் பாகிஸ்தான் அணிக்கு ஆசிய கோப்பையில் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாகர் ஆசமும், வேகப்பந்து வீரர் ஷகின்ஷா அப்ரிடியும், வார்த்தைகளால் மோதிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தோல்விக்கு பிறகு அணி வீரர்கள் மத்தியில் பேசிய பாபர் ஆசம் சீனியர் வீரர்களின் ஆட்டத்திறன் குறித்து கேள்வி எழுப்பினார். சூப்பர் ஸ்டார்களாக இருப்பதை நிறுத்துங்கள். உலக கோப்பையை நீங்கள் இழந்தால் யாரும் உங்களை சூப்பர் ஸ்டாராக கருதமாட்டார்கள் என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஷகீன்ஷா அப்ரிடி குறுக்கிட்டு பொதுவாக பேச வேண்டாம். நன்றாக ஆடுபவர்களை விமர்சனம் செய்வது ஏன்? வீரர்களின் செயல் திறனை குறைந்தபட்சம் பாராட்ட வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த பாபர் ஆசம் யார் நன்றாக விளையாடினார்கள். யார் சரியாக ஆடவில்லை என்பது தெரியும் என்று தெரிவித்தார்.
உலக கோப்பையில் தங்கள் செயல்திறனில் கவனம் செலுத்துமாறு வீரர்களிடம் அவர் அறிவுறுத்தினார். மேலும் தோல்விக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்புக்கு சென்ற பாபர் ஆசம் ஓட்டலுக்கு செல்லும் வழியில் யாருடனும் பேசவில்லை.
முகமது ரிஸ்வான் உள்ளிட்ட மூத்த வீரர்கள் ஓட்டலுக்கு செல்வதற்கு முன்பு பாபர் ஆசமை சமாதானப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- இன்று நடைபெறும் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, இலங்கை மோதுகின்றன.
- இலங்கையை ஏற்கனவே வீழ்த்தியுள்ளதால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.
கொழும்பு:
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா, தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் ஆசிய கோப்பையை கைப்பற்றி இருந்தது.
நடப்பு தொடரில் இந்திய அணி சிறப்பாகவே ஆடி வருகிறது. லீக் சுற்றில் நேபாளம், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கையை வீழ்த்தி இருந்தது. வங்காளதேசத்திடம் மட்டும் தோற்று இருந்தது.
இலங்கையை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.
பேட்டிங்கில் சுப்மன் கில் (275 ரன்), லோகேஷ் ராகுல் (169 ரன்), விராட் கோலி (129 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ் (9 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (6 விக்கெட்), ஷர்துல் தாக்கூர் (5 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இதேபோல், நடப்பு சாம்பியனான இலங்கை அணி 7-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி 1986, 1997, 2004, 2008, 2014, 2022-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.
இலங்கை அணியின் பேட்டிங்கில் குஷால் மெண்டீஸ் (253 ரன்), சமர வீரா (215 ரன்) ஆகியோரும், பந்துவீச்சில் பதிரனா (11 விக்கெட்டும்), நெதமிகா வெல்லலகே (10 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் இன்று மோதுவது 167-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 166 போட்டியில் இந்தியா 97-ல், இலங்கை 57-ல் வெற்றி பெற்றுள்ளனர். 11 போட்டி முடிவு இல்லை. ஒரு ஆட்டம் 'டை' ஆனது.
இன்றைய போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
- டைமண்ட் லீக் தடகளத்தின் இறுதிச்சுற்று போட்டி அமெரிக்காவின் யூஜின் நகரில் நடந்தது.
- இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 83.80 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2வது இடம் பிடித்தார்.
வாஷிங்டன்:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகளத்தின் இறுதிச்சுற்று போட்டி அமெரிக்காவில் உள்ள யூஜின் நகரில் இன்று நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.
இதில் நீரஜ் சோப்ரா 83.80 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2-வது இடம் பிடித்தார்.
செக் குடியரசின் ஜாகுப் வால்டிச் முதல் இடம் பிடித்தார். பின்லாந்து வீரர் ஹாலெண்டர் 3ம் இடம் பிடித்தார்.
- நாடு முழுவதும் இருந்து வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.
- சப்- ஜூனியர் 59 கிலோ பிரிவில் சென்னையை சேர்ந்த அபிஷேக் பால்ஜோஸ்வா தங்கம் வென்றார்.
ஜாம்ஷெட்பூர்:
இந்திய வலுதூக்குதல் சம்மேளனம் சார்பில் தேசிய சீனியர், சப்- ஜூனியர் வலுதூக்குதல் போட்டி ஜாம்ஷெட்பூரில் 3 தினங்கள் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் தமிழக அணிக்கு 2 பதக்கம் கிடைத்தது. சப்- ஜூனியர் 59 கிலோ பிரிவில் சென்னையை சேர்ந்த அபிஷேக் பால்ஜோஸ்வா தங்கம் வென்றார்.
சீனியர் 59 கிலோ பிரிவில் நந்தகோபால் வெண்கல பதக்கம் பெற்றார். பதக்கம் வென்ற இருவரையும் தமிழ்நாடு வலுதூக்குதல் சங்க பொதுச் செயலாளர் இளங்கோவன், சென்னை மாவட்ட வலுதூக்குதல் சங்க செயல் தலைவர் விஜயபாஸ்கர் ஆகியோர் பாராட்டினார்கள்.
- வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தின்போது காயம் அடைந்ததாக தகவல்
- பேக்-அப் வீரராக வாஷிங்டன் சுந்தர் அழைக்கப்பட்டுள்ளார்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த போட்டியின்போது அக்சார் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. அவரது காயத்தின் வீரியம் குறித்து சரியான தகவல் வெளியாத நிலையில், வாஷிங்டன் சுந்தர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அக்சார் பட்டேலுக்கு இரண்டிற்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு தொடைப்பகுதியில் ஏற்படும் காயம் (hamstring) ஏற்பட்டுள்ளதாகவும், உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு மூன்று வாரங்களே உள்ளதால் பிசிசிஐ கவலை அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஹாம்ஸ்டிரிங் காயம் ஏற்பட்டால் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் ஓய்வு தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தர், கடைசியாக ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா 6 ரன்னில் தோல்வி
- சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தும்
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 30-ந்தேதி தொடங்கியது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் 'லீக்' முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 நாடுகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. நேற்றுடன் 'சூப்பர் 4' சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன.
இதன் முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முதல் 2 இடங்களை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன.
இன்று ஓய்வு நாளாகும். இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா- தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் ஆசிய கோப்பையை கைப்பற்றி இருந்தது.
இந்தப் போட்டி தொடரில் இந்திய அணி சிறப்பாகவே ஆடி வருகிறது. 'லீக்' சுற்றில் நேபாளம் 'சூப்பர் 4' சுற்றில் பாகிஸ்தான், இலங்கையை வீழ்த்தி இருந்தது. வங்காளதேசத்திடம் மட்டும் தோற்று இருந்தது.
இறுதிப்போட்டிக்கு இந்தியா நுழைந்துவிட்டதால் வங்காளதேசத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இலங்கையை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.
பேட்டிங்கில் சுப்மன் கில் (275 ரன்), லோகேஷ் ராகுல் (169 ரன்), விராட் கோலி (129 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ் (9 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (6 விக்கெட்), ஷர்துல் தாக்கூர் (5 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
நடப்பு சாம்பியனான இலங்கை அணி 7-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி 1986, 1997, 2004, 2008, 2014, 2022-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.
இலங்கை அணியின் பேட்டிங்கில் குஷால் மெண்டீஸ் (253 ரன்), சமர வீரர் (215 ரன்) ஆகியோரும், பந்துவீச்சில் பதிரனா (11 விக்கெட்டும்), நெதமிகா வெல்லலகே (10 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 167-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 166 போட்டியில் இந்தியா 97-ல், இலங்கை 57-ல் வெற்றி பெற்றுள்ளனர். 11 போட்டி முடிவு இல்லை. ஒரு ஆட்டம் 'டை' ஆனது.
நாளைய போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது
- 2-வது பாதி ஆட்டத்தில் நைஸ் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் முன்னணி கால்பந்து தொடர் லீக்-1. இதில் முன்னணி அணியாக பிஎஸ்ஜி திகழ்ந்து வருகிறது. இந்த அணியில் இருந்து மெஸ்சி, நெய்மர் ஆகியோர் வெளியேறிவிட்டனர். நட்சத்திர வீரர் எம்பாப்வே அந்த அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்திய நேரப்படி இன்று காலை பிஎஸ்ஜி அணி நைஸ் அணியை எதிர்கொண்டது. இதில் எம்பாப்பே இரண்டு கோல்கள் அடித்த போதிலும், 2-3 என நைஸ் அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
ஆட்டம் தொடங்கிய 21-வது நிமிடத்தில் நைஸ் அணியின் டெரெம் மொஃப்பி கோல் அடித்தார். இதற்கு எம்பாப்வே 29-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 சமனில் இருந்தது.
2-வது பாதி நேரத்தில் நைஸ் வீரர்கள் அபாரமாக விளையாடினர். 53-வது நிமிடத்தில் கயேடன் லபோர்டேவும், 68-வது நிமிடத்தில் மொஃப்பியும் கோல் அடித்தனர். இதனால் நைஸ் 3-1 என முன்னிலைப் பெற்றது.
அதன்பின் பிஎஸ்ஜி அணியால் கோல் அடிக்க முயற்சித்தது. ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் எம்பாப்பே மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆனால், அதன்பின் பிஎஸ்ஜி அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதன்காரணமாக பிஎஸ்ஜி 2-3 எனத் தோல்வியை சந்தித்தது.
இந்தத் தோல்வியால் பிஎஸ்ஜி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளது. மொனாக்கோ முதல் இடத்திலும், நைஸ் 2-வது இடத்திலும் உள்ளது.
- காயத்தால் விளையாடாமல் இருக்கும் கேன் வில்லியம்சன் கேப்டனாக அணியில் இடம் பிடித்துள்ளார்
- வீரருக்கு அவரது குடும்பம்தான் முதல் ரசிகர் என்றால் மிகையாகாது
இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி (அக்டோபர்) உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. நவம்பர் 19-ந்தேதி தொடர் நடைபெற இருக்கிறது.
இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளும், தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. பொதுவாக வீரர்கள் அறிவிப்பு டுவிட்டர் மூலம் அறிவிக்கப்படும். அல்லது பத்திரிகையாளர் அழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் கிரிக்கெட் போர்டால் அறிவிக்கப்படும்.
ஆனால், நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு, தங்களது அணி வீரர்கள் அறிவிப்பை வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளது. அவர்கள் சிறந்த ரசிகர்களால் அறிவிக்க வைத்துள்ளனர். ஒரு கிரிக்கெட் வீரருக்கு அவரது குடும்பத்தினர்தான் முதல் ரசிகர் என்றால் அது மிகையாகாது.
அந்த வகையில் திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ள வீரர்கள் அவர்களும் குழந்தைகளின் மழலை குரல்களிலும், மனைவி மட்டும் இருப்பவர்கள் மனைவி மூலமாகவும், காதலி இருப்பவர்கள் அவர்கள் மூலமாகவும், மனைவி மற்றும் காதலி இல்லாத வீரர்கள் அவர்களின் பெற்றோர் மூலமாகவும் அறிவிக்கப்பட்டனர்.
இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.






