என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது
    • 2-வது பாதி ஆட்டத்தில் நைஸ் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது

    பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் முன்னணி கால்பந்து தொடர் லீக்-1. இதில் முன்னணி அணியாக பிஎஸ்ஜி திகழ்ந்து வருகிறது. இந்த அணியில் இருந்து மெஸ்சி, நெய்மர் ஆகியோர் வெளியேறிவிட்டனர். நட்சத்திர வீரர் எம்பாப்வே அந்த அணிக்காக விளையாடி வருகிறார்.

    இந்திய நேரப்படி இன்று காலை பிஎஸ்ஜி அணி நைஸ் அணியை எதிர்கொண்டது. இதில் எம்பாப்பே இரண்டு கோல்கள் அடித்த போதிலும், 2-3 என நைஸ் அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

    ஆட்டம் தொடங்கிய 21-வது நிமிடத்தில் நைஸ் அணியின் டெரெம் மொஃப்பி கோல் அடித்தார். இதற்கு எம்பாப்வே 29-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 சமனில் இருந்தது.

    2-வது பாதி நேரத்தில் நைஸ் வீரர்கள் அபாரமாக விளையாடினர். 53-வது நிமிடத்தில் கயேடன் லபோர்டேவும், 68-வது நிமிடத்தில் மொஃப்பியும் கோல் அடித்தனர். இதனால் நைஸ் 3-1 என முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் பிஎஸ்ஜி அணியால் கோல் அடிக்க முயற்சித்தது. ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் எம்பாப்பே மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆனால், அதன்பின் பிஎஸ்ஜி அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதன்காரணமாக பிஎஸ்ஜி 2-3 எனத் தோல்வியை சந்தித்தது.

    இந்தத் தோல்வியால் பிஎஸ்ஜி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளது. மொனாக்கோ முதல் இடத்திலும், நைஸ் 2-வது இடத்திலும் உள்ளது.

    • காயத்தால் விளையாடாமல் இருக்கும் கேன் வில்லியம்சன் கேப்டனாக அணியில் இடம் பிடித்துள்ளார்
    • வீரருக்கு அவரது குடும்பம்தான் முதல் ரசிகர் என்றால் மிகையாகாது

    இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி (அக்டோபர்) உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. நவம்பர் 19-ந்தேதி தொடர் நடைபெற இருக்கிறது.

    இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளும், தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. பொதுவாக வீரர்கள் அறிவிப்பு டுவிட்டர் மூலம் அறிவிக்கப்படும். அல்லது பத்திரிகையாளர் அழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் கிரிக்கெட் போர்டால் அறிவிக்கப்படும்.

    ஆனால், நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு, தங்களது அணி வீரர்கள் அறிவிப்பை வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளது. அவர்கள் சிறந்த ரசிகர்களால் அறிவிக்க வைத்துள்ளனர். ஒரு கிரிக்கெட் வீரருக்கு அவரது குடும்பத்தினர்தான் முதல் ரசிகர் என்றால் அது மிகையாகாது.

    அந்த வகையில் திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ள வீரர்கள் அவர்களும் குழந்தைகளின் மழலை குரல்களிலும், மனைவி மட்டும் இருப்பவர்கள் மனைவி மூலமாகவும், காதலி இருப்பவர்கள் அவர்கள் மூலமாகவும், மனைவி மற்றும் காதலி இல்லாத வீரர்கள் அவர்களின் பெற்றோர் மூலமாகவும் அறிவிக்கப்பட்டனர்.

    இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    • ஒருநாள் போட்டிகளில் 7-வது முறையாக 400 ரன்களை கடந்தது தென் ஆப்பிரிக்கா.
    • தென் ஆப்பிரிக்கா வீரர் கிளாசன் அதிரடியாக ஆடி 174 ரன்கள் குவித்தார்.

    செஞ்சூரியன்:

    தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்தது.

    ஹென்ரிச் கிளாசென் 83 பந்துகளில் 13 பவுண்டரி, 13 சிக்சர் உள்பட 174 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 45 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வான்டெர் டுசன் அரை சதமடித்து 62 ரன்னில் அவுட்டானார்.

    5-வது விக்கெட்டுக்கு கிளாசன், மில்லர் ஜோடி 94 பந்துகளில் 222 ரன்கள் குவித்து அசத்தியது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் போட்டிகளில் 7-வது முறையாக 400 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

    மேலும், அதிக முறை 400 ரன்கள் எடுத்த பட்டியலில் இந்தியாவின் சாதனையை தென் ஆப்பிரிக்கா முறியடித்தது.

    • 4வது ஒருநாள் போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது.
    • நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.

    லண்டன்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்று விளையாடியது. முதல் 3 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி 2 வெற்றிகளும் நியூசிலாந்து 1 வெற்றியும் பெற்றிருந்தன.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 311 ரன்கள் சேர்த்தது. டேவிட் மலான் சிறப்பாக ஆடி சதம் விளாசினார். அவர் 127 ரன்களில் அவுட்டானார். ஜோஸ் பட்லர் 36 ரன்னும், ஜோ ரூட் 29 ரன்னும், ஜோ ரூட் 29 ரன்னும், லிவிங்ஸ்டோன் 28 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்து சார்பில் ரச்சின் ரவிச்சந்திரா 4 விக்கெட்டும், டேரில் மிட்செல், மேட் ஹென்றி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 312 என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் ரச்சின் ரவிச்சந்திரா சற்று நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தார். அவர் 61 ரன்னிலும், ஹென்றி நிக்கோல்ஸ் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், நியூசிலாந்து அணி 38.2 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது டேவிட் மலானுக்கு வழங்கப்பட்டது. ஏற்கனவே நடந்து முடிந்த டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது நினைவிருக்கலாம்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 416 ரன்கள் குவித்தது.
    • தென் ஆப்பிரிக்கா 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    செஞ்சூரியன்:

    தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது. 3-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா தொடக்கத்தில் நிதானமாக ஆடியது. வான்டெர் டுசன் அரை சதமடித்து 62 ரன்னில் அவுட்டானார். அப்போது 34.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்திருந்தது.

    ஒருபுறம் ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக ஆடி பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

    அதன்பின், ஹென்ரிச் கிளாசனுடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் ரன்களை குவித்தனர். தொடர்ந்து சிக்ஸர் மழை பொழிந்த கிளாசென் சதம் கடந்து அசத்தினார். மறுபுறம் மில்லர் அதிரடி காட்டி அரைசதம் அடித்தார்.

    5-வது விக்கெட்டுக்கு கிளாசன், மில்லர் ஜோடி 94 பந்துகளில் 222 ரன்கள் குவித்து அசத்தியது.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்தது. கிளாசென் 83 பந்துகளில் 13 பவுண்டரி, 13 சிக்சர் உள்பட 174 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 45 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 417 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

    அந்த அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி மட்டும் பொறுப்புடன் ஆடினார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்னில் அவுட்டானார். டிம் டேவிட் 35 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடர் 2-2 என சமனிலை வகிக்கிறது.

    தென் ஆப்பிரிக்க சார்பில் நிகிடி 4 விக்கெட்டும், ரபாடா 3 விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது கிளாசனுக்கு வழங்கப்பட்டது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகனஸ்பெர்கில் நாளை நடைபெறுகிறது.

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 265 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 259 ரன்களை எடுத்தது.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்4 சுற்றில் இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா, வங்காளதேச அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய வங்காளதேசம் 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் 80 ரன்னும், தௌஹித் ரிடோய் 54 ரன்னும், நசும் அகமது 44 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மா டக் அவுட்டானார். திலக் வர்மா 5 ரன்னிலும், இஷான் கிஷன் 5 ரன்னிலும், கே.எல்.ராகுல் 19 ரன்னிலும் அவுட்டாகினர்.

    சூர்யகுமார் யாதவ் 26 ரன்னும், ஜடேஜா 7 ரன்னிலும் வெளியேறினர்.

    தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.அவர் 121 ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்சர், 8 பவுண்டரிகள் அடங்கும்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய அக்சர் படேல் 42 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.

    இறுதியில், இந்திய அணி 259 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் ஆறுதல் வெற்றி பெற்றது.

    வங்காளதேசம் சார்பில் முஸ்தபிர் ரகுமான் 3 விக்கெட்டும், மெஹதி ஹசன், தன்சிம் ஹசன் சாகிப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • சென்னை ரசிகர்கள் எப்போதும், நல்ல போட்டியை ரசித்துள்ளனர்.
    • சென்னையில் ஐந்து உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன.

    2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 4-ம் தேதி துவங்கி, நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. முன்னணி வீரர்களும் தங்களின் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

    இதனிடையே கிரிக்கெட் உலகக் கோப்பை உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் 50 ஓவர் உலகக் கோப்பை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

     

    இதற்கான நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி கூறியதாவது..,

    "சென்னை சேப்பாக்கம் மைதானம், உலகக் கோப்பை தொடருக்காக சிறப்பான முறையில் தயார்படுத்தப்பட்டு இருக்கிறது. இங்குள்ள புதிய பெவிலியன் தற்போது திறக்கப்பட்டு இருக்கிறது. இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. ஐ.பி.எல். தொடரின் போதே, இந்த பெவிலியனை பலரும் வெகுவாக பாராட்டி இருந்தனர். மழை இல்லையெனில், சிறப்பான கிரிக்கெட்டை இந்த முறை ரசிக்க முடியும்."

    "சென்னை ரசிகர்கள் எப்போதும், நல்ல போட்டியை ரசித்துள்ளனர். சென்னையில் ஐந்து உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான போட்டி நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனைக்கு எப்போதும் போல் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது."

    "பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் சென்னையில் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. சேப்பாக்கம் மைதானம் போட்டிக்கு தயார் நிலையில் உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழ்நாடு வீரர்கள் இல்லாதது வருத்தமாகவே உள்ளது," என்று தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது.
    • முதலில் ஆடிய வங்காளதேசம் 265 ரன்களை எடுத்தது.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்4 சுற்றில் இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா, வங்காளதேச அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய வங்காளதேசம் 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் 80 ரன்னும், தௌஹித் ரிடோய் 54 ரன்னும், நசும் அகமது 44 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் பொறுப்புடன் ஆடினார். முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    ஆனாலும் சுப்மன் கில் நிதானமாக ஆடி சதமடித்தார்.இதில் 4 சிக்சர், 6 பவுண்டரிகள் அடங்கும்.

    • தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஆடம் சாம்பா இன்றைய போட்டியில் சோபிக்கவில்லை.
    • ஹென்ரிச் கிளாசென் 83 பந்துகளில் 174 ரன்களை குவித்து அசத்தினார்.

    தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், இன்று இரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஆடம் சாம்பா இன்றைய போட்டியில் சோபிக்கவில்லை. மாறாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மோசமான சாதனையை படைத்திருக்கிறார். பத்து ஓவர்கள் பந்து வீசிய ஆடம் சாம்பா 113 ரன்களை வாரி வழங்கினார்.

    ஆடம் சாம்பா பந்துவீச்சில் மட்டும் 8 பவுண்டரிகள், 9 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. இதன் மூலம் ஒரே ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை ஆடம் சாம்பா படைத்து இருக்கிறார். 50 ஓவர் கிரிக்கெட் தொடர்களில் இத்தகைய மோசமான சாதனையை இதுவரை யாரும் படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு குயிண்டன் டி காக் மற்றும் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 45 மற்றும் 28 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரசி வேன் டெர் டுசென் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 62 ரன்களை குவித்து அசத்தினார்.

    இவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்க்ரம் எட்டு ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென் 83 பந்துகளில் 174 ரன்களை குவித்து அசத்தினார். இதில் 13 பவுண்டரிகளும், 13 சிக்சர்களும் அடங்கும். இவருடன் ஆடிய டேவிட் மில்லர் 45 பந்துகளில் 82 ரன்களை குவித்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்கள் இழப்பிற்கு 416 ரன்களை குவித்து உள்ளது.

    • இந்திய அணி ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.
    • கடைசி லீக் போட்டியில் விராட் கோலி ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை.

    கிரிக்கெட் களத்தில் ஆடும் லெவனில் இருந்தாலும், இல்லை என்றாலும் விராட் கோலி ரசிகர்களை மகிழ்விக்காமல் இருந்ததே இல்லை என்லாம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனக்குள் இருக்கும் காமெடியை வெளிப்படுத்த விராட் கோலி தவறியதே இல்லை.

    அந்த வகையில், இன்று இந்தியா மற்றம் வங்காளதேசம் அணிகள் இடையே நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் விராட் கோலி ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை. இந்திய அணி ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால், இன்றைய போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.

    அந்த வகையில், போட்டியின் முதல் பாதி ஆட்டத்தின் போது, "வாட்டர் பாய்"-ஆக களத்தில் இருந்த இந்திய அணி வீரர்களுக்கு நீராகாரம் கொண்டு வந்தார். அப்போது விராட் கோலி வேகவேகமாக ஓடி வந்தார். திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை விராட் கோலி ஓடிய விதம் அனைவரையும் சிரிப்பலையில் மூழ்க செய்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    • வங்காளதேச அணிக்கு கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 80 ரன்களை குவித்தார்.
    • இந்தியா சார்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்4 சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளும் மோதுகின்றன. தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.

    அதே சமயம் பாகிஸ்தான், இலங்கையிடம் உதை வாங்கிய வங்காளதேசம் இறுதி சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. எனவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இது வெறும் சம்பிரதாய மோதல் என்பதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

     

    அதன்படி முதலில் ஆடிய வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்களை இழந்து 265 ரன்களை குவித்துள்ளது. வங்காளதேச அணிக்கு கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 80 ரன்களையும், தௌஹித் ரிடோய் 54 ரன்களையும் நசும் அகமது 44 ரன்களையும் குவித்தனர்.

    இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்களை கைப்பற்றினார். இவர்தவிர முகமது ஷமி இரண்டு விக்கெட்களையும், பிரசித் கிருஷ்ணா, அக்சர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • இலங்கை பெண் ரசிகை ஒருவர் விராட் கோலி மீதான தனது அன்பை புதுமையான முறையில் வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    • ரசிகையின் பரிசை பெற்றுக்கொண்ட கோலி அவருக்கு நன்றி தெரிவித்தார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் ரசிகை ஒருவர் விராட் கோலியை பாராட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

    இந்நிலையில் இலங்கை பெண் ரசிகை ஒருவர் விராட் கோலி மீதான தனது அன்பை புதுமையான முறையில் வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்று வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா மோதும் ஆட்டத்திற்கு இந்திய வீரர்கள் தயாராகி கொண்டு இருந்த வேளையில் கொழும்பை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விராட் கோலியை சந்தித்துள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த பெண், கடந்த 14 வருடங்களாக உங்களிடம் பேச காத்திருந்தேன். இத்தனை வருடங்களுக்கு பிறகு எனது கனவு நனவாகி விட்டது என கூறினார்.

    மேலும் அந்த பெண் ரசிகை தான் வரைந்த விராட் கோலியின் ஓவியத்தை அவருக்கு பரிசாக கொடுத்தார். அந்த ரசிகையின் பரிசை பெற்றுக்கொண்ட கோலி அவருக்கு நன்றி தெரிவித்தார். இதே போல ஏராளமான இலங்கை ரசிகர்களும் கோலியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×