என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SAvsAus"

    • முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
    • அதைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.

    ஆஸ்திரேலியா அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

    அதைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் டர்பன், கெபெர்ஹா மற்றும் கேப் டவுன் ஆகிய இடங்களில் நடக்கிறது.

    2018-ல் கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது நடந்த 'பந்து சேதப்படுத்தும்' (Ball-tampering scandal) சர்ச்சை உலக கிரிக்கெட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு 8 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும்.

    2018-ம் ஆண்டு நடந்த டெஸ்டில் balltampering-ல் ஈடுபட்டதாக வார்னர், ஸ்டீவ் ஸ்மித், பான்கிராஃப்ட் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அந்த சர்ச்சையில் சிக்கிய ஸ்டீவ் ஸ்மித், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் மீண்டும் அதே மைதானத்திற்கு டெஸ்ட் போட்டிக்காகத் திரும்ப உள்ளனர். டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர்.

    இந்தத் தொடர் அடுத்த ICC World Test Championship இறுதிப் போட்டிக்கு யார் தகுதி பெறுவார்கள் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். தற்போது ஆஸ்திரேலியா புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஆடம் சாம்பா இன்றைய போட்டியில் சோபிக்கவில்லை.
    • ஹென்ரிச் கிளாசென் 83 பந்துகளில் 174 ரன்களை குவித்து அசத்தினார்.

    தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், இன்று இரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஆடம் சாம்பா இன்றைய போட்டியில் சோபிக்கவில்லை. மாறாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மோசமான சாதனையை படைத்திருக்கிறார். பத்து ஓவர்கள் பந்து வீசிய ஆடம் சாம்பா 113 ரன்களை வாரி வழங்கினார்.

    ஆடம் சாம்பா பந்துவீச்சில் மட்டும் 8 பவுண்டரிகள், 9 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. இதன் மூலம் ஒரே ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை ஆடம் சாம்பா படைத்து இருக்கிறார். 50 ஓவர் கிரிக்கெட் தொடர்களில் இத்தகைய மோசமான சாதனையை இதுவரை யாரும் படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு குயிண்டன் டி காக் மற்றும் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 45 மற்றும் 28 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரசி வேன் டெர் டுசென் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 62 ரன்களை குவித்து அசத்தினார்.

    இவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்க்ரம் எட்டு ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென் 83 பந்துகளில் 174 ரன்களை குவித்து அசத்தினார். இதில் 13 பவுண்டரிகளும், 13 சிக்சர்களும் அடங்கும். இவருடன் ஆடிய டேவிட் மில்லர் 45 பந்துகளில் 82 ரன்களை குவித்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்கள் இழப்பிற்கு 416 ரன்களை குவித்து உள்ளது.

    ×