search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    டேவிஸ் கோப்பை: மொராக்கோவை வீழ்த்தியது இந்தியா - வெற்றியுடன் விடைபெற்றார் போபண்ணா
    X

    டேவிஸ் கோப்பை: மொராக்கோவை வீழ்த்தியது இந்தியா - வெற்றியுடன் விடைபெற்றார் போபண்ணா

    • இந்தியாவின் ரோகன் போபண்ணா, யுகி பாம்ப்ரி ஜோடி மொராக்கோ ஜோடியை வென்றது
    • 43 வயதான ரோகன் போபண்ணாவுக்கு இதுவே கடைசி டேவிஸ் கோப்பை போட்டியாகும்.

    லக்னோ:

    டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் 2 சுற்றில் இந்தியா, மொராக்கோ அணிகள் இடையிலான ஆட்டம் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் தொடங்கியது.

    முதல் நாளில் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்களில் சுமித் நாகல் வெற்றி பெற்றார். சசிகுமார் முகுந்த் காயத்தால் பாதியில் விலகினார்.

    இந்நிலையில், 2-வது நாளான நேற்று இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் ரோகன் போபண்ணா, யுகி பாம்ப்ரி ஜோடி 6-2, 6-1 என்ற நேர் செட்டில் மொராக்கோவின் பென்செட்ரிட், யுனெஸ் லலாமி லாரோசி ஜோடியை எளிதில் வென்றது.

    பெங்களூருவைச் சேர்ந்த 43 வயதான ரோகன் போபண்ணாவுக்கு இதுவே கடைசி டேவிஸ் கோப்பை போட்டி ஆகும். இந்தப் போட்டியில் இருந்து அவர் வெற்றியோடு விடைபெற்றார்.

    இதையடுத்து, நடந்த மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் சுமித் நாகல் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் யாசினே டிலிமியையும், இந்தியாவின் திக்விஜய் பிரதாப் சிங் 6-1, 5-7, 10-6 என்ற செட் கணக்கில் மொராக்கோவின் வேலிட் அஹோடாவையும் வீழ்த்தினர். முடிவில் இந்தியா 4-1 என்ற கணக்கில் மொராக்கோவை தோற்கடித்தது.

    Next Story
    ×