என் மலர்
விளையாட்டு
- இந்திய வீராங்கனைகள் 15 ஓவரில் 173 ரன்கள் குவித்தனர்
- மலேசியா 2 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட நிலையில், மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது
ஆசிய விளையாட்டு போட்டி 2023 இன்னும் அதிகாரப்பூர்வமாக தொடங்கவில்லை என்றாலும் கைப்பந்து, கிரிக்கெட் போன்ற போட்டிகளின் தொடக்க சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கிரிக்கெட் போட்டி டி20-யாக நடத்தப்படுகிறது.
இன்று பெண்கள் கிரிக்கெட்டிற்கான முதல் காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா- மலேசியா அணிகள் மோதின. முதலில் இந்தியா பேட்டிங் செய்தது. 5.4 ஓவரில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருக்கும்போது, மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
மழை நின்றதும் ஆட்டம் 15 ஓவராக குறைக்கப்பட்டது. இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா 39 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 67 ரன்கள் குவித்தார். ரோட்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 47 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய பெண்கள் அணி 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது.
பின்னர் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மலேசியா அணி களம் இறங்கியது. இரண்டு பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மழை மீண்டும் குறுக்கிட்டது. அதன்பின் போட்டியை நடத்த சாத்தியமில்லை என கருதிய போட்டி நிர்வாகிகள், ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். போட்டியில் முடிவு கிடைக்காத போதிலும், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
- சாத்விக் வால்டன் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 57 பந்தில் 80 ரன்கள் குவித்தார்
- 18.1 ஓவரிலேயே இலக்கை எட்டியது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்
கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர்-1, இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசான் வாரியர்ஸ் 20 ஒவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க வீரர் சாய்ம் ஆயுப் 39 பந்தில் 49 ரன்களும், விக்கெட் கீப்பர் அசாம் கான் 27 பந்தில் 36 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. இந்த அணியின் தொடக்க வீரர் சாத்விக் வால்டன் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 57 பந்தில் 80 ரன்கள் விளாச, டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
நாளை மறுநாள் (22-ந்தேதி) இந்திய நேரப்படி 23-ந்தேி அதிகாலை 4.30 மணிக்கு ஜமைக்கா தல்லாவாஸ்- கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான குவாலிபையர்-2 போட்டி நடைபெற இருக்கிறது. எலிமினேட்டரில் ஜமைக்கா தல்லாவாஸ் அணியை செயின்ட் லூசியாக கிங்ஸ் வீழ்த்தியிருந்தது.
- உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது.
- அடிடாஸ் நிறுவனம் இந்திய அணியின் உலகக்கோப்பை ஜெர்சியை வடிவமைத்துள்ளது.
இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலக கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8ம் தேதி சென்னையில் மோதுகிறது.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. அடிடாஸ் நிறுவனம் இந்திய அணியின் உலகக்கோப்பை ஜெர்சியை வடிவமைத்துள்ளது.
இந்திய அணியின் புதிய ஜெர்சியின் அறிமுக வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டது.
- ஆசிய விளையாட்டில் இதுவரை இந்தியா 672 பதக்கங்களை வென்று மொத்த வெற்றியாளர்கள் லிஸ்டில் 5-வது இடத்தில் உள்ளது.
- இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 1-5 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோற்றது. இருந்தது.
ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951 முதல் நடைபெற்று வருகிறது. இதனை ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு முதன்முதலாக உருவாக்கப்பட்ட பிறகு இந்த தொடர் நடைபெற்றது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட இந்த விளையாட்டுகள் ஓலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஆசிய விளையாட்டில் இதுவரை இந்தியா 672 பதக்கங்களை வென்று மொத்த வெற்றியாளர்கள் லிஸ்டில் 5-வது இடத்தில் உள்ளது.
இந்த ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ம் தேதி தொடங்குகின்றன.
ஆனால் துவக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் இன்று ஆரம்பமாகின.
இதில் கால்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 21 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.
'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 1-5 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோற்றது. இருந்தது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் 2-வது லீக்கில் இந்திய அணி, வங்காளதேசத்துடன் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி களம் காணுகிறது.
கால்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் கலந்து கொண்டுள்ள 16 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று சீன தைபேயை மாலை 5 மணிக்கு சந்திக்கிறது.
- ஆசிய விளையாட்டு போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி இருக்கிறது.
- சமீபத்தில் சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் நமது அணி நன்றாக விளையாடி கோப்பையை வென்றது.
பெங்களூரு:
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகுவதற்காக பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் பயிற்சி பெற்று வந்த இந்திய ஹாக்கி அணி நேற்று விமானம் மூலம் சீனாவுக்கு புறப்பட்டு சென்றது.
முன்னதாக இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அளித்த பேட்டியில், 'ஆசிய விளையாட்டு போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் நமது அணி நன்றாக விளையாடி கோப்பையை வென்றது. அத்தகைய சிறந்த செயல்பாட்டை தொடர வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்களது பிரிவில் சில கடினமான அணிகள் இடம் பெற்று இருக்கின்றன. இருப்பினும் நாங்கள் சிறப்பாக தயாராகி இருப்பதால் பதக்கம் வெல்ல முடியும் என்று நம்புகிறோம்' என்றார்.
இதேபோல் துணைகேப்டன் ஹர்திக் சிங் கூறுகையில், 'ஆசிய போட்டிக்காக கடுமையான பயிற்சியை மேற்கொண்டு இருப்பதுடன் எல்லோரும் ஒரே இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம். நாங்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நல்ல நிலையில் போட்டிக்கு செல்கிறோம். கடந்த சில மாதங்களை போல் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதுடன் சீனாவில் இருந்து பதக்கத்துடன் திரும்புவதே எங்களது இலக்கு' என்றார்.
ஆண்கள் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. சிங்கப்பூர், ஜப்பான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வங்காளதேசம் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். 'பி' பிரிவில் தென்கொரியா, மலேசியா, சீனா, ஓமன், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 24-ந் தேதி உஸ்பெகிஸ்தானை (காலை 8.45 மணி) சந்திக்கிறது. அடுத்த ஆட்டங்களில் 26-ந் தேதி சிங்கப்பூரையும் (காலை 6.30 மணி), 28-ந் தேதி ஜப்பானையும் (மாலை 6.15 மணி), 30-ந் தேதி பாகிஸ்தானையும் (மாலை 6.15 மணி), அக்டோபர் 2-ந் தேதி வங்காளதேசத்தையும் (பகல் 1.15 மணி) எதிர்கொள்கிறது.
ஆசிய விளையாட்டில் இந்திய ஹாக்கி அணி 3 முறை தங்கப்பதக்கமும், 9 முறை வெள்ளிப்பதக்கமும், 3 தடவை வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளது. இதில் கடைசியாக 2018-ம் ஆண்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்றதும் அடங்கும்.
ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி வருமாறு:-
கோல்கீப்பர்கள். ஸ்ரீஜேஷ், கிரிஷன் பஹதுர் பதக், பின்களம்: வருண்குமார், அமித் ரோஹிதாஸ், ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், சஞ்சய், நடுகளம்: நீலகண்ட ஷர்மா, ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், சுமித், ஷாம்ஷெர் சிங், முன்களம்: அபிஷேக், குர்ஜந்த் சிங், மன்தீப் சிங், சுக்ஜீத் சிங், லலித்குமார் உபாத்யாய்.
- 31 வயதான நசிர் ஹூசைன் வங்காளதேச அணிக்காக 19 டெஸ்ட் மற்றும் 65 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
- அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துபாய்:
அபுதாபி 10 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அமீரகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2021-ம் ஆண்டு நடந்த டி10 லீக்கில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது அம்பலமாகியுள்ளது. ஆட்டத்தை முன்கூட்டியே நிர்ணயம் செய்ய முயற்சி (மேட்ச் பிக்சிங்), ரகசிய தகவல் பரிமாற்றம், சூதாட்டம் நோக்கில் சந்தேக நபர்கள் அணுகியதை தெரிவிக்காதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் புனே டெவில்ஸ் அணியின் இணை உரிமையாளர்களான இந்தியாவின் கிரிஷன் குமார் சவுத்ரி, பராக் சங்வி, உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ரிஸ்வான் ஜாவித், சலியா சமன், பேட்டிங் பயிற்சியாளர் அசார் ஜாய்தி, உதவி பயிற்சியாளர் சன்னி தில்லான், அணி மேலாளர் ஷதப் அகமத் மற்றும் வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் நசிர் ஹூசைன் ஆகியோர் சிக்கியுள்ளனர்.
கடைசியாக 2021-ம் ஆண்டு தொடரில் பங்கேற்ற புனே டெவில்ஸ் அணி 6 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டிருந்தது.
31 வயதான நசிர் ஹூசைன் வங்காளதேச அணிக்காக 19 டெஸ்ட் மற்றும் 65 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவர் சந்தேகத்துக்குரிய நபரிடம் இருந்து பெற்ற விலைஉயர்ந்த பரிசுப்பொருள் விவரத்தை மறைத்து ஊழல் தடுப்பு விதியை மீறியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) குற்றம் சுமத்தியுள்ளது. அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி பிரேசிலில் நடைபெற்றது.
- இதில் இந்திய வீராங்கனை நிஸ்செல் 458 புள்ளிகள் குவித்து வெள்ளி வென்றார்.
பிரசிலியா:
உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டிஜெனீரோவில் நடந்தது. இதில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை நிஸ்செல் 458 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அவர் தனது முதலாவது உலகக் கோப்பை போட்டியிலேயே பதக்கம் வென்று இருப்பதுடன் தகுதிச்சுற்றில் 592 புள்ளிகள் குவித்ததன் மூலம் சக வீராங்கனை அஞ்சும் மோட்ஜிலின் (591 புள்ளி) தேசிய சாதனையையும் தகர்த்தார்.
நார்வே வீராங்கனை ஜியானெட்டி ஹிக் டஸ்டாட் 461.5 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
இந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற 16 பேர் கொண்ட இந்திய அணி ஒரு தங்கம், ஒரு வெள்ளியுடன் பதக்கப்பட்டியலில் 7-வது இடம் பெற்றது.
தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த பதிவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
- இந்திய அணிக்காக 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 390 ரன்கள் எடுத்துள்ளார்.
புதுடெல்லி:
நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடர், எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலகக்கோப்பை என எந்தவொரு தொடரிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் இது குறித்து சஞ்சு சாம்சன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "நான் தொடர்ந்து முன்னோக்கி நகர்வேன்"என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்திய அணிக்காக 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 390 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 55.71 என்பது குறிப்பிடத்தக்கது. 24 டி20 போட்டிகளில் விளையாடி 374 ரன்களும் எடுத்துள்ளார்.
- அவர் ஒரு சிறப்புத்திறன் கொண்டவர்.
- ஒவ்வொரு வீரருக்கும் நம்பிக்கை காட்டப்பட வேண்டும்.
மும்பை:
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 5-ந் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. உலகக்கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
உலகக்கோப்பை போட்டிக்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் உள்ளன. இந்திய மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஒவ்வொரு அணியும், சுழற்பந்து வீச்சாளர்களை கூடுதலாக சேர்த்துள்ளன. இந்த நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இருப்பார் என்று இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
குல்தீப் யாதவுடன் ஐ.பி.எல். போட்டியில் நேரத்தை செலவிட்டுள்ளேன். அவர் ஒரு சிறப்புத்திறன் கொண்டவர். ஒவ்வொரு வீரருக்கும் நம்பிக்கை காட்டப்பட வேண்டும். அதை இந்திய அணி நிர்வாகம் செய்திருக்கிறது.
குல்தீப் யாதவ் எங்களுக்கு (இந்திய அணி) ஒரு துருப்பு சீட்டாக இருப்பார். அவரை பெரும்பாலான அணிகள் சவாலாக கருதுகின்றன.
இவ்வாறு அவர் கூறினர்.
சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் குல்தீப் யாதவ் 5 ஆட்டத்தில் 9 விக்கெட் வீழ்த்தினார்.
இதற்கிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் முதல் 2 ஆட்டங்களுக்கு கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரோகித் சர்மா கூறும்போது, "குல்தீப் யாதவ் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நாங்கள் நிறைய விஷயங்களை யோசித்தே குல்தீப் யாதவுக்கு ஓய்வு அளிக்கும் முடிவை எடுத்தோம்.
உலகக்கோப்பைக்கு முன்னதாக குல்தீப் யாதவை அதிகம் வெளிப்படுத்த விரும்பாததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1½ ஆண்டுகளாக அவரை பார்த்து கொண்டிருக்கிறோம்.
அதனால்தான் அவரை அதிகம் வெளிப்படுத்த விரும்பவில்லை. அவர் இரண்டு ஆட்டங்களுக்கு வெளியே அமர்ந்து 3-வது ஆட்டத்தில் விளையாடுவது எங்களுக்கு சிறந்த முடிவாகும்" என்றார்.
- ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
- உலகக்கோப்பைக்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா, மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.
அகமதாபாத்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட், அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான் முன்னேறும் என்று நினைக்கிறேன். அதேபோல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
உலகக்கோப்பைக்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா, மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதனால் ஆஸ்திரேலியா, கொஞ்சம் முழு வலிமை கொண்ட அணியை உலகக்கோப்பைக்கு பெறுவார்கள்.
ஆடம் ஜம்பா உலக தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர். அவர் 20 ஓவர் கிரிக்கெட்டில் தனது முழு திறமையை காட்டி உள்ளார். தற்போது அவருக்கு 50 ஓவர் உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி தனது அனுபவத்தை, எதிரணி பேட்டிங் வரிசைக்கு எதிராக பயன்படுத்த வேண்டும். பயமின்றி விளையாட வேண்டும். டேவிட் வார்னர், முன் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்றே நினைக்கிறேன். அவர் எப்போதும் ஆக்ரோஷமான ஆட்டத்தை கொண்டவர். அவர் நன்றாக விளையா டினால் எதிரணியினர் பயப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆசிய விளையாட்டில் இதுவரை இந்தியா 672 பதக்கங்களை வென்று மொத்த வெற்றியாளர்கள் லிஸ்டில் 5-வது இடத்தில் உள்ளது.
- இந்த ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ம் தேதி தொடங்குகின்றன.
ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951 முதல் நடைபெற்று வருகிறது. இதனை ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு முதன்முதலாக உருவாக்கப்பட்ட பிறகு இந்த தொடர் நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட இந்த விளையாட்டுகள் ஓலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஆசிய விளையாட்டில் இதுவரை இந்தியா 672 பதக்கங்களை வென்று மொத்த வெற்றியாளர்கள் லிஸ்டில் 5-வது இடத்தில் உள்ளது.
இந்த ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ம் தேதி தொடங்குகின்றன. ஆனால் துவக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன.
ஆடவருக்கான வாலிபால் போட்டியில் இந்திய அணி இன்று கம்போடியா அணியை எதிர்கொள்கிறது. இதை போல கால்பந்து போட்டியில் இந்திய அணி சீனாவை எதிர்கொள்கிறது.
- பாபர் அசாம்- வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
- முகமது ரிஸ்வான் தலையிட்டு சமரசம் செய்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இஸ்லாமாபாத்:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-4 சுற்றில் இலங்கையிடம் தோற்று பாகிஸ்தான் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.
இந்த தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்- வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. முகமது ரிஸ்வான் தலையிட்டு சமரசம் செய்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் இடையே மோதல் இல்லை என்று அங்கு அணியின் மூத்த வீரர் தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக அந்த கூறும்போது, அணியின் ஒரே கவனம் கிரிக்கெட்டில் உள்ளது. விமர்சனங்களை பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை .ஒரு போட்டியில் தோல்வியடைவது விமர்சகர்களுக்கு அவர்களின் கருத்துக்களை சொல்ல வாய்ப்பளிக்கிறது.
அணியின் கூட்டத்தில் அனைவரும் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர். ஆனால் வார்த்தை மோதல் ஏற்பட்டது என்பதில் எந்த உண்மையும் இல்லை. அனைவரும் ஒன்றாக கூட்டத்தை விட்டு வெளியேறினர். பல வீரர்கள் ஒரே விமானத்தில் பாகிஸ்தானுக்கு திரும்பினர் என்றார்.






