என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2 பேர் இறந்துள்ளனர்.
புதுச்சேரி:
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;-
“புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,847 பேருக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மொத்தம் 212 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 582 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.72 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,832 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,522 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தம் 4,039 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று புதுச்சேரியில் 195 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29,211 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,78,193 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
தாமரைப் பூ பறிக்க முயன்றபோது குளத்தில் மூழ்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வில்லியனூர்:
கரிக்கலாம்பாக்கம் - பாகூர் சாலையில் உள்ள தனியார் கம்பெனி அருகில் உள்ள குளத்தில் தாமரை பூக்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் பறிப்பது வழக்கம். நேற்று மாலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் தாமரை பூ பறிக்க வந்தபோது 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் குளத்தில் பிணமாக மிதந்தார். இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்த கரிக்கலாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் விரைந்து வந்து குளத்தில் கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த மூதாட்டி மனநிலை பாதிக்கப்பட்டு கரிக்கலாம்பாக்கம் பகுதியில் சுற்றி வந்தவர் என்பது தெரியவந்தது. இவர் தாமரைப்பூ பறிக்க முயன்றபோது குளத்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சண்டே மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கவர்னர் கிரண்பெடி நாள்தோறும் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று வளர்ச்சி ஆணையர் அன்பரசு, சுகாதாரத்துறை செயலாளர் அருண், சிறப்பு செயலாளர் பங்கஜ்குமார் ஜா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
இதன்பின் கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சண்டே மார்க்கெட்டானது குறுகிய தெருக்களில் செயல்படுகிறது. எனவே கடைக்காரர்களுடன் கூட்டம் நடத்தி கூட்டத்தை சண்டே மார்க்கெட்டிற்கு வரும்வழி, வெளியேறும் வழி ஆகியவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும்.
அடுத்த வாரம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்தின் குழுவானது புதுவைக்கு வர உள்ளது. அப்போது அவர்கள் புதுவையில் ஆய்வு நடத்தி தங்களது பரிந்துரைகளை வழங்குவார்கள்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களான ஷாப்பிங் மால்கள், மார்க்கெட்டுகள், மதவழிபாட்டு தலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான செயல்பாட்டு வழிமுறைகளை உருவாக்கிட வேண்டும்.
சுகாதாரம் மற்றும் பொதுமக்கள் நலனுக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும். இதற்கான திட்டத்தை உள்ளாட்சித்துறை செயலாளர், ஸ்மார்ட் சிட்டி திட்ட இணை தலைமை செயல் அதிகாரி, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் உருவாக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளின் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தனியார் செக்யூரிட்டிகளை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வானூர் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது ஷேர் ஆட்டோ மோதியதில் சிறுமி உள்பட 2 பேர் பலியானார்கள். 11 பேர் படுகாயமடைந்தனர்.
வானூர்:
வானூர் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது ஷேர் ஆட்டோ மோதியதில் சிறுமி உள்பட 2 பேர் பலியானார்கள். 11 பேர் படுகாயமடைந்தனர். இந்த பயங்கர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
புதுவை மேட்டுப்பாளையத்தில் தனியார் அட்டை கம்பெனி உள்ளது. இங்கு விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அண்ணாநகரை சேர்ந்த மாணிக்கவாசகம் மகள் அங்காளபரமேஸ்வரி (வயது 14), உதயன் மனைவி ஞானவள்ளி (22), ஸ்ரீமதி (18), பிரபாவதி (20), சிவபுஷ்னம் (33) ஆகியோர் உள்பட 12 பேர் வேலை பார்த்து வந்தனர்.
நேற்று மாலை வேலை முடிந்து இவர்கள் அனைவரும் ஷேர் ஆட்டோவில் கிளியனூருக்கு புறப்பட்டனர். ஷேர் ஆட்டோவை பாப்பாஞ்சாவடியை சேர்ந்த அய்யப்பன் (20) என்பவர் ஓட்டினார். புதுச்சேரி - திண்டிவனம் நான்கு வழிச்சாலையில் தைலாபுரம் மெயின்ரோடு அருகே சென்றபோது, சாலையோரம் நின்ற லாரி மீது ஷேர் ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோதியது.
மோதிய வேகத்தில் ஆட்டோ உருக்குலைந்து போனது. விபத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் அதில் பயணம் செய்த 12 பெண்கள் படுகாயமடைந்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். சாலையில் காயமடைந்து கிடந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதில் அங்காளபரமேஸ்வரி, ஞானவள்ளி ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 11 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக கிளியனூர் மெயின்ரோடு பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை பார்க்க அவரது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் ஜிப்மர் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
விபத்து குறித்து கிளியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிடுவதற்கான மானியத் தொகைக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றபின் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது விவசாயிகள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கான தொகையை வேளாண்துறையானது மின்துறைக்கு செலுத்தி விடும்.
இதுதொடர்பாக முதல்- அமைச்சர் நாராயணசாமியின் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் மேலாண்மையை பெருக்கவும், விவசாயிகளின் நலன் காக்கவும், அவர்களின் வருமானத்தை பெருக்கவும், அரசு விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பம் என்கிற திட்டத்தின் மூலமாக இலவச மின்சாரம் வழங்கி வருகிறது.
கடந்த 2017-18ம் ஆண்டு காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளை சேர்ந்த 623 விவசாயிகளின் மின் மோட்டார்களுக்கான 3-வது மற்றும் 4-வது காலாண்டுகளுக்கு மானியத்தொகையான ரூ.6 லட்சத்து 57 ஆயிரத்து 37 மற்றும் 2018-19 ஆண்டு புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 139 விவசாயிகளின் மின் மோட்டார்களுக்கான 4 காலாண்டுகளுக்கான மானியத்தொகை ரூ.3 கோடியே 46 லட்சத்து 62 ஆயிரத்து 366 என மொத்தம் ரூ.3.53 கோடியினை வேளாண்துறை மூலமாக மின்துறைக்கு வழங்குவதற்கான செலவின ஒப்புதலை முதல்-அமைச்சர் நாராயணசாமி அளித்துள்ளார்.
இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 762 விவசாயிகளின் நலன் அரசால் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் சந்தை கூட அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று மீண்டும் மதகடிப்பட்டு வார சந்தை கூடியது.
மதகடிப்பட்டு:
புதுச்சேரி அருகே மதகடிப்பட்டு பகுதியில் வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் சந்தை நடப்பது வழக்கம். இது பிரெஞ்சு காலத்திலிருந்து புகழ்பெற்ற மாட்டு சந்தை. இந்த சந்தையில் காய்கறி உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களும் கிடைக்கிறது.
ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் சந்தை கூட அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று மீண்டும் மதகடிப்பட்டு வார சந்தை கூடியது. எனினும் குறைந்த அளவிலேயே வியாபாரிகளும், பொதுமக்களும் சந்தைக்கு வந்தனர்.

தமிழகத்தோடு புதுச்சேரி இணைப்பு என அரசியல் ஆதாயத்துக்காக ஆதாரமின்றி பொய் பிரசாரம் செய்வதாக அன்பழகன் எம்எல்ஏ தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் புதுவை யூனியன் பிரதேச முதல்-அமைச்சர் அரசியல் சுயநலத்துக்காக தமிழகத்துடன் புதுவையை இணைக்க முயற்சிப்பதாக விமர்சித்து மாநில மக்களுக்கு தீங்கு இழைத்து வருகிறார். புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அதற்கான அதிகாரம் அனைத்தும் மத்திய அரசிடம்தான் உள்ளது. அப்படி இருக்க மற்றொரு மாநிலத்திடம் மத்திய அரசு புதுவையை ஏன் இணைக்கப் போகிறது?
இதுபற்றி முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆதாரமின்றி தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருகிறார். இதனால் மத்திய அரசுக்கு என்ன ஆதாயம்? ஒரு மாநில முதல்-அமைச்சர் ஆதாரத்துடன்தான் எதையும் பேசவேண்டும்.
மத்திய அரசு இதுசம்பந்தமாக கடிதப்போக்குவரத்தை ஆரம்பித்துள்ளதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மாறாக எங்களது அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கிறது, அதனால் தமிழகத்தோடு புதுச்சேரியை இணைக்கிறது என்று கூறுவது முதல்-அமைச்சருக்கு அழகல்ல.
வரும் தேர்தலில் காங்கிரசும், தி.மு.க.வும் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே எண்ணத்திற்காக பொய்செய்தியை மக்கள் மனதில் விதைக்கிறார். தேசவிரோத பொய்யை முன்னிறுத்தி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள புதுவை மாநில காங்கிரசும், தி.மு.க.வும் முன்வந்துள்ளது.
இதுதொடர்பாக தலைமைக் கழகத்தின் அனுமதி பெற்று புதுச்சேரி அ.தி.மு.க. சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம். முதல்-அமைச்சர் நாராயணசாமி இப்போது இணைப்பு என்ற பொய்பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். இதை நம்புவதற்கு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என்பதை வரும் சட்டமன்ற தேர்தல் இவருக்கு புரிய வைக்கும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
பாகூர் அருகே கோவிலுக்கு சென்ற கல்லூரி மாணவி வீடு திரும்பாதது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாகூர்:
பாகூரை அடுத்த நிர்ணயப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 48), விவசாயி. இவரது மகள் அகிலா (18). காரைக்கால் வேளாண் கல்லூரியில் படித்து வந்தார். தற்போது வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் படித்தார்.
கடந்த 16-ந் தேதி காலை கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற அகிலா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின்பேரில் பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பாகூர் அருகே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2 குழந்தைகளுடன் பெண் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.
பாகூர்:
பாகூரை அடுத்த சேலியமேடு வாணிதாசன் வீதியை சேர்ந்தவர் சுசீலா (வயது 50). இவர் தனது மகள் வாசுகி (29) என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்புபாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி (37) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு மூன்று வயதில் தயாநிதி என்ற மகனும், ஒரு வயதில் லோகப்பிரியா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் வாசுகி மற்றும் ராமமூர்த்தி இடையே கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. கடந்த 15-ந் தேதி ராமமூர்த்தியின் தந்தை தனசேகரன், சுசீலாவிடம் வாசுகி மற்றும் குழந்தைகளை காணவில்லை என்று கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சுசீலா உறவினர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து பாகூர் போலீஸ் நிலையத்தில் சுசீலா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாசுகி மற்றும் அவரது குழந்தைகளை தேடி வருகின்றனர்.
பாகூர்-மாஞ்சாலை ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்துகள் நடக்கிறது. இதை சரிசெய்ய என்னால் ஆன முயற்சியை செய்து வருகிறேன் என்று முதியவர் கூறினார்.
பாகூர்:
பாகூர் பகுதியில் பல்வேறு இடங்களில் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் அந்த சாலைகள் மேலும் மோசமாகி வருகிறது. குறிப்பாக பாகூர்- கன்னியக்கோவில் சாலை, பரிக்கல்பட்டு - குருவிநத்தம் சித்தேரி சாலை, பாகூர் - மாஞ்சாலை ரோட்டில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு, சாலையில் கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. இந்த சாலைகளை சீரமைக்கக்கோரி அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தரப்பில் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை.
இந்த நிலையில் குருவிநத்தம் பாரதி நகரை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 83) என்ற முதியவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் சாலை வழியாக பாகூருக்கு நடந்தே வந்து செல்வார். இந்த சாலையில் நடக்கும் விபத்துகளை பார்த்து மிகவும் வருந்தினார். காயமடைந்தவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும், விபத்து ஏற்படாமல் தடுக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
அதன் விளைவாக பாகூர் மாஞ்சாலையில் உள்ள பள்ளங்களை, சாலையோரமுள்ள மண், கற்கள் மூலம் நிரப்பி சரிசெய்து வருகிறார்.
இது குறித்து முதியவர் புருஷோத்தமனிடம் கேட்டபோது, ‘பாகூர் - மாஞ்சாலை ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்துகள் நடக்கிறது. இதை சரிசெய்ய என்னால் ஆன முயற்சியை செய்து வருகிறேன். கடந்த 3 நாட்களாக தனி ஆளாக சாலையோரம் உள்ள மண் மற்றும் கற்களை கொட்டி பள்ளங்களை மூடி வருகிறேன். அரசு செய்யும் என எதிர்பார்த்தால் இப்போதைக்கு ஆகாது. அதனால் நானே முடிந்ததை செய்து வருகிறேன்’ என்று கூறினார்.

கிருமாம்பாக்கம் பகுதியில் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது.
பாகூர்:
மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்கள் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி புதுவையின் புறநகர் பகுதியான கிருமாம்பாக்கம், தவளக்குப்பம், பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது.
பலத்த மழையால் தாழ்வான குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. கிருமாம்பாக்கம் சிந்தாமணி நகரில் மழைநீர் செல்லும் பாதைகள் அடைபட்டதால், அந்த பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர்.
குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை உடனே வெளியேற்றக்கோரியும், இதற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் நேற்று காலை சிந்தாமணி நகர் மக்கள் மறியல் செய்வதற்காக புதுச்சேரி - கடலூர் சாலை சந்திப்பில் திரண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகர் ஆகியோர் அங்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்படி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், மின்சார மோட்டார் மூலமாக தண்ணீரை வெளியேற்றினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன் தொல்லையில் வியாபாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வில்லியனூர்:
புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36). தனியார் செல்போன் ரீசார்ஜ் கூப்பன் வினியோகஸ்தர் தொழில் செய்துவந்தார். இவருக்கு மதுமிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டம் பற்றி அறிந்த விஜயகுமார் அதில் விளையாட தொடங்கினார்.
தொடக்கத்தில் விஜய குமார் வெற்றி பெற்று பணம் சம்பாதித்ததால் சூதாட்டத்தின் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதனை விளையாடி வந்ததில் சிறுகச்சிறுக பணத்தை இழந்தார். ஒரு கட்டத்திற்கு சூதாட்டத்தில் இருந்து வெளியே வர முடியாமல் அடிமையானார். வீட்டில் இருந்த மனைவியின் நகைகள் மற்றும் வியாபாரத்திற்கு வைத்திருந்த பணத்தை அதில் இழந்தார். மேலும் பலரிடம் கடன் பெற்று சூதாட்டத்தில் ஈடுபட்டார். இவ்வாறு பல லட்சங்களை ஆன்லைன் சூதாட்டத்தில் விஜயகுமார் இழந்தார்.
இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள், பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர். அதனை திருப்பி கொடுக்க முடியாமல் தவித்தார். பணம் இல்லாததால் தொழிலை சரியாக நடத்த முடியவில்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே மனைவியிடம் கோபித்துகொண்டு விஜயகுமார் வீட்டைவிட்டு வெளியே சென்றார்.
நீண்ட நேரமாகியும் அவர் வராததால், குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். அவரது செல்போனை தொடர்பு கொண்டும், பேச முடியவில்லை. கணவர் பற்றிய தகவல் தெரியாததால் கவலை அடைந்த மதுமிதா நேற்று காலை கரிக்கலாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார்.
அப்போது கோர்க்காடு அருகே உள்ள நத்தமேடு ஏரிக்கரையில் ஆண் பிணம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பிணத்தின் அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று நின்றது.
அதனுடைய பதிவு எண் கொண்டு விசாரித்தபோது, அது விஜயகுமாருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்தது. எனவே எரிந்த நிலையில் பிணமாக கிடப்பது விஜயகுமார் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதன்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயகுமாரின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதனால் ஏற்பட்ட கடன் தொல்லையால் அவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.
மேலும் விஜயகுமார், கடைசியாக தனது செல்போனில் வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யுமாறு பதிவிட்டு இருந்தார். அவரது மனைவிக்கு கடைசியாக அனுப்பிய வாட்ஸ் அப்பில், என்னுடைய பிணத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் நிற்கும் என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன் தொல்லையில் வியாபாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.