search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Repairing"

    • தட்டார்மடத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பில் பஜாரில் ரவுண்டா அருகில் 4 கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டது
    • கண்காணிப்பு காமிராவில் காட்சிகள் பதிவாகாமல் காட்சி பொருளாக உள்ளது.

    சாத்தான்குளம்:

    தட்டார்மடத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பில் பஜாரில் ரவுண்டா அருகில் நான்கு திசையிலும் காட்சிகளை பதிவு செய்யும் வகையில் 4 கண்காணிப்பு காமிராக் கள் அமைக்கப்பட்டன.

    இந்த கண்காணிப்பு காமிரா காட்சிகள் போலீசார் கண்காணிப்பில் பஜாரில் உள்ள தனி–யார் கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. தட்டார்மடம் பஜாரில் அசம்பாவிதம் ஏதும் நடந்தால் கண்காணிப்பு காமிராவில் கோப்புகளை வைத்து கண்டுபிடிக்க ஏதுவாக இருந்து வந்தது. இந்த கண்காணிப்பு காமிரா பதிவு செய்யும் கணினி முன்புள்ள கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் கண்காணிப்பு காமிரா கட்டுபாட்டு அறைக்கு செல்லும் வயர் அப்பகுதியில் சென்ற லாரியால் அறுந்து போனது. இதனால் கண்காணிப்பு காமிராவில் காட்சிகள் பதிவாகாமல் காட்சி பொருளாக உள்ளது. அதனால் சேதமாகி காணப்படும் கண்காணிப்பு காமிராவை சீரமைத்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தாங்கைகுளம் முழுமையாக நிரம்பினால் சுமார் 2,000 ஏக்கர்விவசாய நிலங்களை பாதுகாக்கும்
    • மழை பெய்து குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு முன்பே பணிகளை முடிக்க வேண்டும்

    உடன்குடி:

    உடன்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கட் ராமானுஜபுரம் ஊராட்சியில் 224.8 ஏக்கர் பரப்பளவில் தாங்கைகுளம் உள்ளது. இது ஒரு நீர்பிடிப்பு குளமாகும். இந்த குளத்திலிருந்து எந்தவிதமான கால்வாய் பாசனமும் கிடையாது.

    இந்த குளம் முழுமையாக நிரம்பினால் சுமார் 2,000 ஏக்கர்விவசாய நிலங்களை பாதுகாக்கும். கடல் நீர்மட்டம் விவசாய விளைநிலங்களில் ஊடுருவாமல் தடுக்கப்படும். இந்த குளத்தின் மூன்று புறமும் கரையை உயர்த்த வேண்டும் என்றும், குளம் நிரம்பி மறுகால் பாயும் கலுங்கை 2 அடி உயர்த்த வேண்டும் என்றும், தற்போது பழுதாகி உடைந்து கிடக்கும் கலுங்கை உடனடியாக சீர் படுத்த வேண்டும் என்றும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் மழை பெய்து இக்குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு முன்பே இந்த பணிகளை முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    ×