என் மலர்
புதுச்சேரி
போக்குவரத்து வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசிடம் இருந்து கவர்னர் மாளிகைக்கு கடந்த 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 32 கோப்புகள் வந்துள்ளன. இதில் பெரும்பாலான கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
போக்குவரத்து வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி செலுத்த டிசம்பர் 31-ந் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2 முதுநிலை பல் மருத்துவர்களுக்கு முதன்மை பல் மருத்துவர் பதவி உயர்வும், 14 தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கு கிரேடு பதவி உயர்வும், புதுவை கடற்கரையில் உள்ள பழைய நீதிமன்ற கட்டிட புனரமைப்புக்கு ரூ.14.65 லட்சத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி விற்பனைக்குழு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.2 கோடியே 62 லட்சம், காரைக்கால் விற்பனைக்குழு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.45.66 லட்சத்திற்கும் அனுமதி, புதுவை கால்நடை மருத்துவக் கல்லூரி ஊழியர்களின் சம்பளத்திற்கு ரூ.3 கோடியே 31 லட்சத்திற்கும், புதுவை கே.வி.கே. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.1 கோடியே 84 லட்சத்திற்கும், காரைக்கால் கே.வி.கே. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.17.57 லட்சத்திற்கு அனுமதி, பள்ளியில் 104 துணை முதல்வர்களுக்கு இறுதி சீனியர் பட்டியல் வெளியீடு, கால்நடை துறையில் மருந்துகள் வாங்க ரூ.73.26 லட்சத்திற்கு அனுமதி அளித்துள்ளார்.
மேற்கண்ட தகவலை கவர்னரின் சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ் தெரிவித்துள்ளார்.
புரட்டாசி விரதம் முடிவடைந்த நிலையில் நேற்று மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. புரட்டாசி மாதம் என்பதால் கடந்த ஒரு மாதமாக இந்துக்கள் அசைவ உணவை தவிர்த்து சைவ உணவுகளை சாப்பிட்டு வந்தனர். இதனால் இறைச்சி கடைகளில் கூட்டம் சற்று குறைவாக இருந்தது.
கடந்த 16-ந் தேதியுடன் புரட்டாசி மாதம் முடிவடைந்தது. அத்துடன் பலர் தங்கள் விரதத்தை முடித்துக்கொண்டனர். புரட்டாசி மாதம் முடிந்து வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று இறைச்சிகள், மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் கூட்டமாக நின்று இறைச்சி வாங்கிச் சென்றனர்.
அப்போது அந்த வழியாக சென்ற போலீசார், சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் கூடி நின்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ஒலிபெருக்கி மூலம் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். புதுவையில் நேற்று ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.750-க்கும், கோழிக்கறி ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
உப்பளம் சாலையில் இருந்து மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் பாதை, சிமெண்டு சாலை உள்பட பல்வேறு இடங்களில் நேற்று காலை பெண்கள் தரையில் கடை விரித்து மீன் வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டனர். பெரியமார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களிலும் பெண்கள் மீன் வியாபாரம் செய்தனர்.
நேற்று காலை லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதை பொருட்படுத்தாமலும், கொரோனா பற்றி கவலைப்படாமலும் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டும் மீன்களை வாங்கிச்சென்றனர். வழக்கத்தை விட நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதன் மூலம் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. அப்போது அங்கு ரோந்து சென்ற போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

புதுவை இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
5-வது கட்ட ஊரடங்கு தளர்வில் பள்ளி, கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து புதுவையில் கடந்த 8-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பெற்றோர் ஒப்புதலுடன், முககவசம் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும். அங்கு அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அவ்வாறே கடந்த சில நாட்களாக மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் புதுவை இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த 2 வகுப்பறைகளும் மூடப்பட்டன. அந்த வகுப்பறைகளில் படித்த மாணவர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். ஆசிரியர் கள், மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுவையில் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மீனவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அரியாங்குப்பம்:
புதுவையை அடுத்த வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் கலைவாணன் (வயது27) மீனவர். இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியிடம் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதை தவறாக புரிந்து கொண்ட கலைவாணன் ஒருகட்டத்தில் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழு தலைவர் ராஜேந்திரனிடம் புகார் செய்தனர். விசாரணையில் மாணவிக்கு கலைவாணன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் தலைமை யிலான போலீசார் கலைவாணன் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி அறிந்ததும் கலைவாணன் தலைமறைவானார். போலீசார் தேடி வந்தநிலையில் நேற்று அவரை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து கலைவாணன் கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை முடிவு வந்தவுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்து சேவை தொடங்க தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது,
புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்து சேவை தொடங்க தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு குறைந்து புதுச்சேரி விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்.
புதுச்சேரியில் இறப்பு விகிதம் குறைவு என்பதால் மக்கள் மெத்தனமாக இல்லாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
மருத்துவப் படிப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீகிதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரலாற்று துரோகம் என்று கூறியுள்ளார்.
புதுச்சேரி, தேத்தாம்பாக்கத்தில் உள்ள துணைமின் நிலையத்தில் அதிகாலை 4 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி, தேத்தாம்பாக்கத்தில் உள்ள துணைமின் நிலையத்தில் அதிகாலை 4 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பழுதாகிய மின்மாற்றியில் ஏற்பட்ட தீ, கொழுந்துவிட்டு எரிந்தது. இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதற்கிடையே அங்கு பெய்த மழையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் 6 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைப்பட்டது.

கொரோனா ஆஸ்பத்திரிக்குள் நோயாளிகளை தவிர வேறு நபர்களை அனுமதிக்கக் கூடாது என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமம் அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கொரோனா பரிசோதனைக்காக வந்திருந்தவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். முகக்கவசம் அணிவதுடன் போதிய இடைவெளி விட்டு அமர்ந்து இருக்க வேண்டும் என்று அவர்களை அறிவுறுத்தினார். பரிசோதனைக்கு வருபவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் விரைந்து முடித்து அவர்களை அனுப்பி வைக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
அந்த சமயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை அவர்களது உறவினர்கள் எந்தவித தடையுமின்றி தாராளமாக சென்று சந்தித்து வருவதை பார்த்து அவர்களை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் கண்டித்தார்.
நோயாளிகளை தவிர வார்டு பகுதிக்குள் வெளிநபர்கள் வந்து செல்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது மருத்துவமனை இயக்குனர் மாணிக்கதீபன், மருத்துவ கண்காணிப்பாளர் சைமன், மக்கள் தொடர்பு அதிகாரி ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
இதேபோல் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்திலும் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விளையாட்டு வீரர்களில் சிலர் முகக்கவசம் அணியாமல் பயிற்சி மேற்கொள்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கொரோனா பரவாமல் தடுக்க கட்டாயம் அனைவரும் முகக்கவசம் அணிந்துதான் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று அவர்களை அமைச்சர் அறிவுறுத்தினார்.
புதுவை அருகே தனியார் நிறுவன காவலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டை பிரான்சுவாதோப்பை சேர்ந்தவர் ரிஷார் ராஜேஷ் (வயது 35). இன்னும் திருமணமாகவில்லை. தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கு சர்க்கரை நோயும் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவதிப்பட்டு வந்த அவர் தனது காலில் காயமடைந்த புண் ஆறாத நிலையில் மனஉளைச்சலில் இருந்து வந்தார். இதனால் வெறுப்படைந்த ராஜேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் காரைக்கால் மாவட்ட வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தப்படு கிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
காரைக்கால்:
காரைக்கால் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நேரு மார்க்கெட் ரூ.11.86 கோடி செலவில் பழமை மாறாமல் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி, மார்க்கெட் கட்டிடத்தை திறந்து வைத்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், கந்தசாமி, ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி., மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
பழமை வாய்ந்த நேரு மார்க்கெட்டை புதிதாக கட்டி முடிப்பதற்கு யாருடைய தடைப்பட்ட முயற்சிகளும் கிடையாது. இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டவுடன் அப்படியே போட்டு விடாமல் ஏற்கனவே யாரெல்லாம் இங்கு கடை வைத்திருந்தார்களோ அவர்களுக்கு கடைகளை முறைப்படி வழங்க வேண்டும்.
இங்கு நான் வரும்போதெல்லாம் காரைக்கால் புறக்கணிக்கப்படுகிறது என சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். முந்தைய ஆட்சிக்காலத்தில் காரைக்கால் புறக்கணிக்கப்பட்டது உண்மை. ஆனால் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சியில் காரைக்கால் மாவட்டத்தின் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில், மாவட்ட வளர்ச்சிக்காக, இந்த அரசு மேலும் பாடுபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் திட்ட துணை இயக்குனர் ஆஷிஸ்கோயல் நன்றி கூறினார்.
இந்த விழாவில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் நேரு மார்க்கெட் வாசல் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக காரைக்காலை அடுத்த நெடுங்காடு மேலபொன்பேற்றி கிராமத்தில் ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியை முதல்-அமைச்சர் நாராயணசாமி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
விழாவில் சந்திரிகா பிரியங்கா எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட், முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, முன்னாள் சேர்மேன் சிங்காரவேல், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வில்லியனூர் அருகே ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். போதையில் நண்பரை கொலை செய்த விரக்தியில் விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றார்.
வில்லியனூர்:
வில்லியனூரை அடுத்த உறுவையாறு பேட் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). ஆட்டோ டிரைவர். ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழிலும் செய்து வந்தார். இவர் தனது நண்பரான அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவரான நண்பர் பிரபு என்பவருடன் சேர்ந்து வீட்டு மனைகள் வாங்கி விற்பனை செய்து வந்தார்.
இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறத்தில் வெங்கடேசனும், பிரபுவும் நேற்று முன்தினம் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கமிஷன் தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரபு தன்னிடம் இருந்து கத்தியை எடுத்து வெங்கடேசனை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். கத்திக்குத்து காயமடைந்த வெங்கடேசன் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து விட்டு இதுகுறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதலில் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் ரத்த வாந்தி எடுத்து வெங்கடேசன் இறந்து இருக்கலாம் என்று கருதி 174-வது பிரிவின்படி தற்கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெங்கடேசன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் வெங்கடேசனும், பிரபுவும் சேர்ந்து மதுகுடித்ததும், அவரை தேடி வீட்டிற்கு சென்றபோது பிரபு தலைமறைவானதும் தெரியவந்ததையடுத்து அவரை போலீசார் தேடிவந்தனர்.
இதற்கிடையே நேற்று காலை போதை தெளிந்த நிலையில் நண்பரை குத்திக் கொலை செய்தது குறித்து வேதனை அடைந்த பிரபு அரளி விதையை அரைத்து தின்று விட்டு விழுப்புரம் கோர்ட்டில் சரண் அடைவதற்காக சென்றார். அங்கிருந்தவர்களிடம் நடந்த விவரத்தை தெரிவித்தபோது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கருதி பிரபுவை கோர்ட்டில் இருந்து விரட்டி விட்டனர்.
இந்த நிலையில் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற பஸ்சில் பிரபு ஏறினார். பஸ் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது சிறிதுநேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனே பிரபுவை திருவண்ணாமலை அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பிரபுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுப்பற்றி மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் போலீசார் திருவண்ணாமலைக்கு விரைந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பிரபுவின் உடல்நிலை சீரானதும் அவரிடம் வெங்கடேசனை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
புதுவை அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மீனவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியாங்குப்பம்:
புதுவையை அடுத்த வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 27), மீனவர். இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியிடம் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவியின் பெற்றோர், குழந்தைகள் நல பாதுகாப்பு குழு தலைவர் ராஜேந்திரனிடம் புகார் செய்தனர். விசாரணையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கலைவாணன் மீது போக்சோ சட்டப்பிரிவில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுவையில் அரசுப்பள்ளி ஆசிரியை மற்றும் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
5-வது கட்ட ஊரடங்கு தளர்வில் பள்ளி, கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து புதுவையில் கடந்த 8-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதாவது அன்று முதல் ஒரு நாள் விட்டு ஒருநாள் 10, 12-ம் வகுப்புகளும், 12-ந்தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களும் சந்தேகம் கேட்கும் விதமாக பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சந்தேகம் கேட்க பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோர்கள் ஒப்புதலுடன் வரவேண்டும், முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அவ்வாறே கடந்த சில நாட்களாக மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜீவானந்தம் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் சுசீலாபாய் அரசு பெண்கள் பள்ளி ஆசிரியை ஒருவருக்கும், வாதானூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர்கள் இருந்த வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளன. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.