என் மலர்
புதுச்சேரி
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி பள்ளிகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கடைகள், சுற்றுலாதலங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதன்பின் அடுத்தடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன.
இதையடுத்து கடைகள், ஓட்டல்கள், கடற்கரை திறக்கப்பட்டன. போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டு மாமூல் வாழ்க்கை திரும்பியது. இந்தநிலையில் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி திருவள்ளுவர் சாலையில் உள்ள ஷண்முகா, அண்ணா சாலையில் உள்ள ராஜா ஆகிய தியேட்டர்கள் மட்டும் நேற்று திறக்கப்பட்டன. ஆங்கிலப் படங்கள் திரையிடப்பட்டன.
ஊரடங்கு தளர்வுக்குப்பின் முதல்நாள் முதல் காட்சியில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந் தது. இளைஞர்கள், இளம்பெண்கள் வந்து இருந்தனர். ஷண்முகா தியேட்டருக்கு வந்த அனைவருக்கும் முகக்கவசமும், 3டி படம் என்பதால் கண்ணாடியும் வழங்கப்பட்டது.
சமூக இடைவெளி விடப்பட்டு இருக்கைகளில் ரசிகர்கள் உட்கார வைக்கப்பட்டனர். வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் கட்டணம் குறைக்கப்பட்டு இருந்தது. புதிய படங்கள் வராததால் மற்ற தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. தீபாவளிக்கு முன் மற்ற தியேட்டர்களும் திறக்கப்பட்டு படங்கள் திரையிடப்படும் என்று தெரிகிறது.
புதுச்சேரி தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் பேரிடர் மேலாண்மை குழு சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது எப்படி? என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில பேரிடர் மேலாண்மைக்குழு தலைவரும், முதல்-அமைச்சருமான நாராயணசாமி தலைமை தாங்கினார்.
இதில் அமைச்சர்கள் நமச் சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான் மற்றும் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், மாவட்ட கலெக்டர் அருண் உள்பட அனைத்து துறை செயலர்கள் மற்றும் வருவாய், பொதுப்பணி, உள்ளாட்சி, மின்சாரம், காவல், தீயணைப்பு, கடலோர காவல்படை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
26-ந் தேதி முதல் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதனை எதிர்கொள்வது குறித்து புதுவையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு தேவையான இருப்பிடம், உணவு, மருந்து, குடிநீர், மின்சாரம் ஆகிய அடிப்படை வசதிகள் கிடைக்க ஆலோசிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவும், தேங்கிய மழைநீரை மோட்டார்கள் மூலமாக அகற்றவும், குடிநீர், மின்சாரம் தடைபட்டால் 24 மணி நேரத்தில் சரி செய்யவும் உத்தரவிடப்பட்டது.
அனைத்து துறைகளின் தொலைபேசி எண்களும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவும், துறைவாரியாக கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் பரவும் டெங்கு, காலராவை தடுக்க மருந்துகள், தடுப்பூசிகளை இருப்பு வைக்க அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து பகுதியிலும் கிருமிநாசினி தெளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை தடுக்க அவர்களது செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலோர காவல்படை, காவல்துறையினர் உஷார் நிலையில் வைக்கப்பட உள்ளனர். இந்த பணிகளை கண்காணிக்க 3 அரசு செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த பணியில் நான், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் களத்தில் இறங்கி வேலை செய்ய தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் திட்ட மறுஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், நிதித்துறை செயலாளர் சுர்பீர் சிங் மற்றும் அரசுத்துறை செயலாளர்கள், இயக்குனர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அடுத்தடுத்து பல்வேறு கட்டங்களாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன்படி கடைகள், ஓட்டல்கள், கடற்கரை, போக்குவரத்து, பள்ளிகள் திறப்பு என மாமூல் வாழ்க்கைக்கு திரும்பின. பொழுதுபோக்கு அம்சமான தியேட்டர்கள் திறக்கப்படுவது எப்போது? என்ற எதிர்பார்ப்பில் அனைத்து தரப்பு மக்களும் இருந்து வந்தனர்.
இந்தநிலையில் தற்போது மத்திய அரசு கடந்த 30-ந் தேதி வெளியிட்ட 5-வது கட்ட தளர்வில் கொரோனா விதிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்றி தியேட்டர்களை திறக்கலாம் என்பது உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
அதன்படி புதுவையில் ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் தீர்வு அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் புதுவையில் இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டு சினிமா காட்சிகள் திரையிடப்பட்டன.
நாள் ஒன்றுக்கு 3 காட்சிகள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான டிக்கெட்டுகளே விநியோகம் செய்யப்படுகிறது.
தியேட்டர்களுக்கு வரும் பார்வையாளர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் வழங்கப்படுகிறது. ஒரு இருக்கை இடைவெளி விட்டு பார்வையாளர்கள் அமர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தியேட்டர்கள் 25-30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அளவுடன் ஏசி பயன்படுத்தப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகங்கள் மாநில அரசு பரிந்துரைகளை ஏற்காமல் கடந்த 2017-ம் ஆண்டு தன்னிச்சையாக மாணவர்களை சேர்த்தது. அப்போது இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு முதல்-அமைச்சர் என்ற முறையில் தவறு செய்யும் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க நான் கடிதம் எழுதினேன்.
அதே நேரத்தில் தனக்கு வந்த புகாரின் அடிப்படையில் தன்னிச்சையாக கவர்னர் கிரண்பேடி சென்டாக் கலந்தாய்வுக்கு சென்று அதிகாரிகளை மிரட்டினார். சி.பி.ஐ. விசாரணைக்கும் பரிந்துரைத்தார். சி.பி.ஐ. புதுவைக்கு வந்து அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர்.
இதுதொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு 6 மருத்துவ கல்லூரிகளுக்கு அபராதம் விதித்துள்ளது. அபராத தொகையை முதல்- அமைச்சர் நிவாரண நிதிக்கு தர உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் எந்த தவறும் செய்யவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
நாணயமான அதிகாரிகளை ஊழல் பேர்வழிகள் என்று சி.பி.ஐ.க்கு புகார் கொடுத்து கவர்னர் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். தற்போது தீர்ப்பை வரவேற்று புதுவை மக்களுக்கு கிடைத்த தீபாவளி பரிசு என கிரண்பேடி தெரிவிக்கிறார். உண்மையில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதே கிரண்பேடிக்கு நோக்கம்.
தவறான தகவல்களை தருவது கிரண்பேடிதான். ஆதாரமற்ற புகாரைக் கொடுத்து அதிகாரிகளுக்கு தொல்லை கொடுத்தார்.
புதுவை மக்கள் மத்தியில் ஒரு பெரும் குழப்பத்தை கவர்னர் உருவாக்குகிறார். பண்டிகை காலங்களில் ஏழைகளுக்கு துணி, ரேசனில் அரிசி தருவதற்கு பதிலாக பயனாளிகளுக்கு பணம் தர கிரண்பேடி அறிவுறுத்தினார்.
மத்திய உள்துறையும் இதை செய்ய சொல்கிறது. ரேசனில் அரிசி வழங்குவதை தடுத்து விட்டு ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டத்தை எவ்வாறு நிறைவேற்ற முடியும்?ரேசனில் அரிசி தருவதும், ஏழைகளுக்கு பண்டிகை காலங்களில் இலவச துணி தருவதும் அரசின் கொள்கை முடிவு. அதை மாற்றும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை.
அரிசியை ரேசனில் வழங்குவது தொடர்பான வழக்கு மேல்முறையீட்டில் உள்ளது. கவர்னர் மாளிகையான ராஜ் நிவாஸ் என்பது பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமாக மாறி விட்டது. அதேபோல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நசுக்கும் வேளையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
இதனை தொடர்ந்து, ரேசனில் அரிசியும் தரவில்லை. வங்கியில் பணமும் பயனாளிகளுக்கு வழங்க வில்லையே என்று நிருபர்கள் கேட்டதற்கு, “வழக்கு முடியும் வரை அரிசிக்கு பதிலாக பணம் வழங்க உள்ளோம்“ என்று குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றால் பள்ளிக்கு வந்த மாணவர் பாதிக்கப்பட்டுள்ளாரே.? என்று கேட்டதற்கு, “ஒரு மாணவனுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகுப்பறையை மூடியுள்ளோம். இதர வகுப்புகள் தொடரும்.” என்றார்.
புதுவை அருகே உள்ள அபிஷேகப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் (வயது 30).
புதுவை அரசின் மின்துறை ஊழியரான இவர் வீடு, வீடாக சென்று மின் மீட்டர் ரீடிங் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதன்படி வினோத் பாகூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வீடுகளில் மீட்டர் ரீடிங் கணக்கெடுக்கும் பணியில் கடந்த 15.5.2019-ல் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் வினோத் மின் மீட்டர் ரீடிங் எடுத்தபோது அந்த வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது பற்றி கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டி விட்டு வினோத் அங்கிருந்து சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த பெற்றோரிடம் நடந்த விவரத்தை கூறி சிறுமி அழுதுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வினோத்தை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தனபால் முன்பாக நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில் நீதிபதி தனபால் பாலியல் குற்றத்திற்கு வினோத்துக்கு 10 ஆண்டுகளும், அத்து மீறி வீட்டிற்குள் நுழைந்த குற்றத்திற்கு 7 ஆண்டுகளும், தப்ப முயன்ற சிறுமியை தடுத்து அடைத்த குற்றத்திற்கு 6 மாத ஜெயில் தண்டனையும், ரூ 2 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
ஜெயில் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.






