என் மலர்

  நீங்கள் தேடியது "10th class student suicide"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மூலகுளத்தில் சரியாக படிக்கவில்லை என தந்தை கண்டித்ததால் 10-ம்வகுப்பு மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  புதுச்சேரி:

  புதுவை மூலகுளம் ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் பெரியமார்க்கெட்டில் கறிவேப்பிலை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் சதீஷ்குமார். இவர் ரெட்டியார்பாளையம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

  நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து வீட்டுக்கு வந்த கிருஷ்ணன், சதீஷ்குமாரிடம் சரியாகபடி, உனது அக்காவை போல் குறைவான மார்க் எடுக்க கூடாது என கண்டித்தார். பின்னர் கிருஷ்ணன் தூங்கி விட்டார். தந்தை கண்டித்ததால் விரக்தி அடைந்த சதீஷ்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நள்ளிரவில் வீட்டின் அருகில் உள்ள ஆஸ்பெட்டால் கூரையில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  நேற்று அதிகாலை வியாபாரத்துக்கு செல்ல கிருஷ்ணன் தூங்கி எழுந்த போது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

  இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், ஏட்டு இரிசப்பன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  ×