என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  ஆட்டோ டிரைவர் வீடு முன் வெடிகுண்டு வீசியவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவையில் ஆட்டோ டிரைவர் வீடு முன் வெடிகுண்டு வீசியவரை போலீசார் கைது செய்தனர்.
  புதுச்சேரி:

  முத்தியால்பேட்டை சின்னையாபுரம்ரோடு வ.உ.சி. நகர் அக்காசாமி மடத்து வீதியை சேர்ந்தவர் ராஜா(வயது 41). ஆட்டோ டிரைவர். கடந்த 11-ந் தேதி அந்த பகுதியில் போலீசார் விரட்டிய சிலரை ராஜா பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ராஜாவை மிரட்டும் வகையில் அவரது வீடு முன் வெடிகுண்டு வீசப்பட்டது.

  இதுகுறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில், ஆட்டோ டிரைவர் ராஜா வீட்டு முன்பு நாட்டு வெடிகுண்டை வீசியது வாழைக்குளம் பகுதியைச் சேர்ந்த பவி என்கிற அய்யனார்(வயது 20) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
  Next Story
  ×