search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி உயிரிழப்பு"

    • கண்மாயிலிருந்து வெளியேறும் நீர் செல்ல வழி இல்லாமல் ஓடையில் நிரம்பி வழிவதால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது.
    • வாகைக்குளம்பட்டி பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரம், சத்திரப்பட்டி, வாகைகுளம் பகுதிகளில் உள்ள கண்மாய்களில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று இரண்டாவது நாளாக அடை மழை பெய்து வரும் நிலையில் கண்மாயிலிருந்து வெளியேறும் நீர் செல்ல வழி இல்லாமல் ஓடையில் நிரம்பி வழிவதால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது.

    வாகைக்குளம்பட்டி பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சங்கிலியூர் என்ற 80 வயது மூதாட்டி வீட்டில் திடீரென மழை நீர் வீட்டுக்குள் புகுந்ததால் தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் அதே பகுதியில் 2 வீடுகளும் இடிந்து சேதமடைந்தது. சேதமடைந்த வீடுகளுக்கும், மழைநீர் புகுந்து பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாந்தம்மாளின் மகன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
    • பூட்டி இருந்த சாந்தம்மாளின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வெண்மனம்புதுார் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தம்மாள்(வயது80). இவர் மகனுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சாந்தம்மாளின் மகன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதனால் வீட்டில் சாந்தம்மாள் மட்டும் தனியாக இருந்தார்.

    இந்த நிலையில் பூட்டி இருந்த சாந்தம்மாளின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் கடம்பத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் சாந்தம்மாள் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தன்னை பாம்பு கடித்துள்ளதை உணர்ந்த குணசுந்தரி லேசான மயக்கமடைந்தார்.
    • ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதமானது. சுமார் 1 மணி நேரமாக குணசுந்தரி காத்திருந்தார்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள முத்தனேரி பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 60). இவரது மனைவி குணசுந்தரி (55). இவர் நேற்று காலை ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் இவரை பாம்பு கடித்துள்ளது. இதனை அறியாத அவருக்கு நேரம் செல்லச்செல்ல உடலில் விஷம் பரவி சோர்வானார்.

    அதன்பிறகே தன்னை பாம்பு கடித்துள்ளதை உணர்ந்த குணசுந்தரி லேசான மயக்கமடைந்தார். இருப்பினும் அவர் சுய நினைவுடன் இருந்தார். இதனையடுத்து உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு நரிக்குடி அரசு மருத்துவமனைக்கு மதியம் 1 மணிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை நடந்தது.

    அப்போது வரை குணசுந்தரி சுயநினைவுடன் உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்த நிலையில் அவரை மேல்சிகிச்சைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் பரிந்துரைத்தனர். அதற்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதமானது. சுமார் 1 மணி நேரமாக குணசுந்தரி காத்திருந்தார். இதற்கிடையில் அவருக்கு உடல் முழுவதும் விஷம் பரவி உயிருக்கு போராடினார். பின்னர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் கதறித்துடித்தனர்.

    சமீப காலமாக நரிக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்க கூட மருத்துவர்கள் இல்லையென, சிகிச்சைக்காக வந்து இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்தநிலையில் தற்போது மருத்துவர்கள் பரிந்துரை செய்த 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பரிதாபமாக ஒரு உயிர் போய்விட்டதே என அனைவரும் ஆதங்கப்பட்டனர்.

    முன்னதாக குணசுந்தரியை நரிக்குடிக்கு அழைத்து வந்த மருத்துவமனை ஊழியர்களிடம் பாம்பு கடித்து விட்டது என்று உறவினர்கள் பதட்டத்துடன் கூறியபோது, அங்கு பணியில் இருந்தவர்கள் மருத்துவமனையில் உள்ள சீட்டு பதியும் இடத்தில் நோட்டு வாங்கி வா, முதலில் பெயரை பதிவு செய்ய வேண்டுமென மிகவும் அலட்சியத்துடன் நடந்து கொண்டதாகவும் உறவினர்கள் கூறினர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இருஞ்சிறை பகுதியை சேர்ந்த அஞ்சலகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர் மணிகண்டன் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது இதே நரிக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்க கூட மருத்துவர்கள் இல்லாததால் தான் பரிதாபமாக உயிரிழந்ததாக அவரது மனைவியும், உறவினர்கள் கோபமடைந்து மருத்துவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தற்போதும் இந்த நிலை தொடர்வதால் பொதுமக்கள் உயிருக்கு பயந்து நாளைடைவில் நரிக்குடி அரசு மருத்துவமனை பக்கமே நோயாளிகள் வராமல் போகும் சூழ்நிலை கூட மிக விரைவில் ஏற்படும் என ஆவேசத்துடன் தெரிவித்தனர். எனவே மாவட்ட கலெக்டர் உயிருக்கு போராடும் மனித உயிர்களை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தீக்காயம் அடைந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
    • இவருக்கு திருமணம் ஆகவில்லை

    கரூர்

    கடவூர் அருகே உள்ள மாவத்தூரை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 70). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் விறகு அடுப்பில் பழனியம்மாள் சமைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பழியம்மாளின் சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. இதனால் அவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பழனியம்மாளின் அக்காள் மகன் குமரேசன் கொடுத்த புகாரின்பேரில் பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • கடந்த மாதம் 29-ந்தேதி தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் எதிரே உள்ள மணல் திட்டில் வயதான தம்பதி இருவர் மயங்கி கிடந்தனர்.
    • கணவர் பெரியண்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மதுரை:

    இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக, அங்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.

    இதையடுத்து அங்கு வாழ்ந்து வந்த தமிழர்கள் பலர் குடும்பத்துடன் அகதிகளாக தமிழகத்திற்கு வர தொடங்கினர். கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த சுமார் 100 பேர் அதிகளாக வந்திருக்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் எதிரே உள்ள மணல் திட்டில் வயதான தம்பதி இருவர் மயங்கி கிடந்தனர். அவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார், ஹோவர்கிராப்ட் கப்பல் மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    அவர்கள் யார்? என்று விசாரித்தபோது இலங்கை மன்னார் மாவட்டம் பிருங்கன்பட்டியை சேர்ந்த பெரியண்ணன் (வயது 82), அவரது மனைவி பரமேஸ்வரி (75) என்பதும், இலங்கையில் கூலிவேலை பார்த்து வந்த வயதான தம்பதி இருவரும், அங்கு நிலவிய பொருளாதார நெருக்கடியில் வாழ வழியின்றி தமிழகத்திற்கு வந்ததும் தெரியவந்தது.

    இரவு நேரத்தில் கடல் நீரில் அதிக நேரம் நின்றபடி இருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர்கள் தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருந்தனர். இதனால் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 29-ந்தேதி முதல் அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மூதாட்டி பரமேஸ்வரி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார். அவரது கணவர் பெரியண்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதியாக கணவருடன் வந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×