தீக்காயம் அடைந்த மூதாட்டி உயிரிழப்பு

தீக்காயம் அடைந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.இவருக்கு திருமணம் ஆகவில்லை
தீக்காயம் அடைந்த மூதாட்டி உயிரிழப்பு
Published on

கரூர்

கடவூர் அருகே உள்ள மாவத்தூரை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 70). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் விறகு அடுப்பில் பழனியம்மாள் சமைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பழியம்மாளின் சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. இதனால் அவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பழனியம்மாளின் அக்காள் மகன் குமரேசன் கொடுத்த புகாரின்பேரில் பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

X

Maalai Malar
www.maalaimalar.com