என் மலர்
புதுச்சேரி
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள முடிவை முதல்-அமைச்சர் ரங்கசாமி மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் இதுவரை ஒமைக்ரான் தொற்று இல்லை. இதனால் நாம் மெத்தனமாக இருந்து விடக்கூடாது. அண்டை மாநிலமான தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு அனுமதி அளித்தது. இதனால் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் அதிகளவில் குவிந்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாடுவதன் மூலம் ஒமைக்ரான் வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் புதுச்சேரி மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். எனவே புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள முடிவை முதல்-அமைச்சர் ரங்கசாமி மறுபரிசீலனை செய்யவேண்டும்.
பிரதமர் மோடி நல்லாட்சி தினம் கொண்டாடுகிறார். இந்திய நாட்டில் அந்தநிலை இருக்கிறதா என்றால் இல்லை. புதுச்சேரி மாநிலத்தில் கூட நல்லாட்சி என்று கூறுகிறார்கள். நல்லாட்சி எங்கே நடக்கிறது. நல்லாட்சி தினம் கொண்டாட பா.ஜ.க.வுக்கு தகுதி இல்லை.
புதுச்சேரியில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. கொலை, கொள்ளை, நில அபகரிப்பு, மாமூல் வேட்டை நடக்கிறது. இதனை முதல்-அமைச்சர் வேடிக்கை பார்த்து வருகிறார்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைகள், வீடுகள் தோறும் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் தடுப்பூசியை கட்டாயமாக்கி சட்டவிரோதமாக திணிக்கக்கூடாது, விரும்புவோருக்கு மட்டுமே தடுப்பூசியை செலுத்த வேண்டும், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எந்தவித உரிமைகளையும் மறுக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்தேசிய பேரியக்கம் சார்பில் காமராஜர் சிலையருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் தேசிய பேரியக்க புதுவை செயலாளர் வேல்சாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் அருணபாரதி உள்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
வம்பாகீரப்பாளையத்தில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுந்தரம் (வயது58). இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், சிரஞ்சீவி என்ற மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
பாலசுந்தரமும், அவரது மகன் சிரஞ்சீவியும் மீன்பிடி தொழில் வருகின்றனர். இவர்கள் வசித்த வீடு சேதமடைந்து இருந்ததால் கடந்த 6 மாதமாக அதே பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.
இதற்கிடையே பாலசுந்தரத்துக்கு மஞ்சள் காமாலை, நீரழிவு நோய் மற்றும் கல்லீரல் பாதிப்பு இருந்து வந்தது. இதற்காக அவர் மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார். ஆனாலும் நோய் குணமடையாததால் அவ்வப்போது பாலசுந்தரம் வலியால் துடிப்பார்.
இந்த நிலையில் நேற்று காலை பாலசுந்தரம் மீன் பிடி தொழிலுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அப்போது தனக்கு வயிற்று வலி அதிகமாக இருப்பதாக மனைவியிடம் பாலசுந்தரம் கூறினார்.
இதையடுத்து விஜயலட்சுமி மருந்து, மாத்திரைகளை கணவருக்கு கொடுத்துவிட்டு வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பாலசுந்தரம் வீட்டை விட்டு வெளியே சென்றார். மதியம் சாப்பாட்டுக்கு கணவரை விஜயலட்சுமி பழைய வீட்டுக்கு சென்று தேடிய போது அங்கு கணவர் மின்விசிறி கொக்கியில் நைலான் கயிற்றால் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாஸ்பேட்டையில் மனைவியை குடும்பம் நடத்த அனுப்ப மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் மாமனார்-மாமியாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை தாகூர்நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் லலிதா குமாரி. இவரை கூனிமேடு பகுதியை சேர்ந்த ஷேக்சுல்தான் என்பவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் ஆரோவில் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர். லலித்குமாரியை அவரது கணவர் அடிக்கடி அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்ததால் கடந்த தீபாவளியன்று லலித்குமாரி தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷேக்சுல்தான் மாமனார் வீட்டுக்கு வந்து லலித்குமாரியை குடும்பம் நடத்த அழைத்தார். ஆனால் லலித்குமாரியின் பெற்றோர் மகளை அனுப்ப மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஷேக்சுல்தான் தகாத வார்த்தைகளால் திட்டி மாமனார் விஜயக்குமார் மற்றும் மாமியார் லதா ஆகியோரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
இதனால் பயந்து போன விஜயக்குமார் தனது மனைவி மற்றும் மகள் லலித்குமாரியுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கியிருந்து வந்தார். ஆனாலும் ஷேக்சுல்தான் அங்கும் சென்று மாமனார் மற்றும் மாமியாரை மிரட்டினார்.
இதையடுத்து விஜயக்குமார் லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மது குடித்து விட்டு ரகளை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை குயவர்பாளையம் வாஞ்சிநாதன் வீதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு வாலிபர் மது குடித்து விட்டு அவ்வழியே செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்து கொண்டிருந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் அதேபகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற மண்ணாங்கட்டி (வயது24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்தனர்.
இதுபோல் வில்லியனூர்-ஒதியம்பட்டு ரோடு கணுவாய்பேட்டை 4 முனை சாலை சந்திப்பில் ஒரு வாலிபர் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசி ரகளை செய்வதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் வில்லியனூர் கணுவாய்பேட்டை சாமியார்தோப்பு மல்லிகா தியேட்டர் வீதியை சேர்ந்த மணிகண்டன் என்கி ஸ்பீடு மணி(21) என்பது தெரியவந்தது. தொடர்ந்து மணிகண்டனை கைது செய்தனர்.
புதுவை நகர கூட்டுறவு வங்கியில் கையாடல் செய்த 410 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. இதுதொடர்பாக கைதான காசாளர்கள் போலீசில் பரபரப்பு தகவல்களை தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டையில் உள்ள நகர கூட்டுறவு வங்கியில் பல்வேறு தேவைகளுக்காக வாடிக்கையாளர்கள் குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுள்ளனர். குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்ப வருபவர்களிடம் நகைகளை திருப்பித் தராமல் ஊழியர்கள் இழுத்தடித்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்து விசாரித்ததில் நகை மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. இதையடுத்து வங்கி உயர் அதிகாரிகள் அங்கு வந்து வாடிக்கையாளர்களின் நகைகளை ஆய்வு செய்தனர். சுமார் 700-க்கும் மேற்பட்ட பைகளில் வைத்து இருந்த நகைகளை ஒவ்வொன்றாக சரி பார்த்தனர். இதில் 80 பைகளில் இருந்த நகைகள் கவரிங் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்ததில், வாடிக்கையாளர்களின் ஒரிஜினல் நகைகளை எடுத்துக்கொண்டு கவரிங் நகைகளை வைத்து 410 பவுன் வரை (3 கிலோ 200 கிராம்) ரூ.1 கோடியே 19 லட்சம் கையாடல் செய்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கூட்டுறவு வங்கியின் பரிசோதனை பிரிவு மேலாளர் அன்பழகன் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஷ் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர்.
இந்த மோசடியில் தொடர்புடைய வங்கியின் தலைமை காசாளர் சுதானா நகரை சேர்ந்த கணேசன் (வயது 56), உதவி காசாளர் விஜயகுமார் (42) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நகைகளை மோசடி செய்தது எப்படி என்பது குறித்து விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
அதாவது, வங்கியில் மோசடியாக நகைகளை எடுத்து வந்து வெளியில் உள்ள அடகு கடைகளில் அதிக தொகைக்கு மறு அடமானம் வைத்து கணேசனும், விஜயகுமாரும் பணம் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்தும் சுயலாபத்துக்கும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள் கடன் தொகையை செலுத்தி விட்டு தங்களது நகைகளை கேட்டால் 2 மணி நேரம் கழித்து வருமாறும் 2 நாட்கள் கழித்து வருமாறும் அனுப்பி வந்துள்ளனர். சர்வர் வேலை செய்யவில்லை என்று திருப்பி அனுப்பியும் வாடிக்கையாளர்களை அலைக்கழித்துள்ளனர்.
அதற்குள் வேறொரு வாடிக்கையாளரின் நகையை வங்கியில் இருந்து எடுத்து அடகு வைத்து அந்த பணத்தை வைத்து சம்பந்தப்பட்டவரின் நகையை மீட்டு கொடுத்து வந்துள்ளனர். நீண்ட நாட்களாகவே இந்த மோசடி பரிமாற்றத்தில் இருவரும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதுதொடர்பாக எந்த புகாரும் வராத நிலையில் வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் வரவில்லை. இந்தநிலையில் ஒரு வாடிக்கையாளர் அவசரமாக நகைகளை உடனே கேட்டு அடம்பிடித்ததால் நகை மோசடி அம்பலத்துக்கு வந்தது.
இந்த நூதன மோசடியில் வங்கி தலைமை காசாளர் கணேசன், உதவி காசாளர் விஜயகுமார் ஆகியோருக்கு மட்டுமே தொடர்பா? அல்லது வேறு யாரும் உடந்தையாக இருந்தார்களா? என்பது குறித்து கோரிமேடு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
கைதான கணேசன், விஜயகுமார் ஆகியோர் தெரிவித்த தகவலின்பேரில் வெளியே பல்வேறு இடங்களில் அடகு வைக்கப்பட்டு இருந்த நகர கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களின் 410 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
இந்த மோசடி பற்றி தெரியவந்ததும் கூட்டுறவு வங்கியில் நகைகளை அடமானம் வைத்து இருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களது அடமான நகைகளை வங்கியில் இருந்து மீட்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
அன்பு, சகோதரத்துவம், அமைதி, தியாகம், எளிமை, ஈகை ஆகியவற்றை உலகுக்கு போதித்த ஏசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடுகிறோம். இந்த திருநாளில் புதுச்சேரியில் உள்ள கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். புதியவகை கொரோனா பரவி வரும் சூழலில் பாதுகாப்பு நடைமுறைகளை அனைவரும் பின்பற்றி கிறிஸ்துமஸ் தினவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு எனது உள்ளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சுயநலமில்லாத அன்பு, கைமாறு கருதாத உழைப்பு, எதிர்பார்ப்பு இல்லாத தியாகம் போன்றவை நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் உதிக்கவேண்டும் என்பதுதான் ஏசு பிறப்பின் அடிப்படை உண்மை ஆகும். பகைவருக்கும் அருளுகின்ற நல்லிதயம் கொண்ட புனிதர் ஏசு பிரான் பிறந்த இத்திருநாள் கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் இல்லங்களில் எல்லா வளங்களையும் நலன்களையும் கொண்டுவந்து சேர்ப்பதாக அமையட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி:-
அன்பு என்ற பண்பு உலக மக்களிடையே வளர ஏசுபிரான் தனது ஆயுளையே அர்ப்பணித்தார். கிறிஸ்தவ மதத்தின் அடிப்படையே அன்பும், கருணையும், இரக்கமும்தான் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இந்த நாளில் நம்மிடையே உள்ள மனமாச்சரியங்களை மறந்து அவற்றை விட்டொழித்து ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி இந்த கொரோனா காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் உதவியாய் இருந்து பண்டிகை நாளை சிறப்பாக்குவோம். அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன்:
அனைத்து மக்களிடமும் பரிவு, பாசத்துடன் வாழவேண்டும் என்று போதித்த ஏசுவின் அருள்வாக்கை பின்பற்றி நாம் அனைவரும் அமைதி வாழ்க்கை வாழ வேண்டும் என்று இந்நன்னாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்.
மேற்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர்:
மனித இனத்திற்கு கருணை வெள்ளமாக திகழும் ஏசு பிரானின் போதனைகளை நினைவு கூர்ந்து மகிழ்ச்சி அடையும் இந்த இனிய தருணத்தில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்

புதுவை அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ மூலம் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க இடெண்டர் கோரப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2018-ம் ஆண்டு முதல் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தீபாவளிக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இதன்படி ரேசன் கடைகள் மூலம் சர்க்கரை, இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் சமீபத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டாவது புதுவையில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில் புதுவை அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ மூலம் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க இடெண்டர் கோரப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் மஞ்சள்-100 கிராம், பச்சரிசி- 2 கிலோ, கடலை பருப்பு- 1/2 கிலோ, துவரம்பருப்பு- 1/2 கிலோ, உளுந்து- 1/2 கிலோ, பச்சைப்பயறு- 1/2 கிலோ, வெல்லம் -1 கிலோ, முந்திரி-50 கிராம், திராட்சை- 50 கிராம், ஏலக்காய்-10 கிராம் வீதம் 19 பொருட்கள் 3 லட்சத்து 31 ஆயிரம் ரேசன்கார்டுகளுக்கு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இந்த டெண்டர் வருகிற 30-ந் தேதி மதியம் ஒரு மணியோடு முடிவடைகிறது. கடந்த காலங்களில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும்போது பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு 7 பைகள் எடுத்துவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது அதுபோன்ற நிலையை ஏற்படுத்தாமல், 10 பரிசு பொருட்களையும் தனித்தனியாக பார்சல் செய்து அதை ஒட்டுமொத்தமாக ஒரே பையாக வழங்க திட்டமிட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு சிரமமின்றி பெற்றுச்செல்ல வசதியாக இதுபோன்ற ஏற்பாடுகளுடன் டெண்டர் விடப்பட்டுள்ளது.
பாப்ஸ்கோ நிறுவனம் சார்பில் புதுவை, காரைக்கால், மாகி ஆகிய பிராந்தியங்களுக்கு இந்த பொங்கல் பரிசு பொருட்கள் ரேசன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக இந்த பொருட்களை ரேசன் கடைகள் மூலம் வழங்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதையும் படியுங்கள்...தமிழகத்தில் ஒமைக்ரான் அச்சுறுத்தல்- அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர்
புதுவை நகர கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 410 பவுன் நகைகளை கையாடல் செய்ததாக 2 அதிகாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவையில் அரசு சார்பில் கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
லாஸ்பேட்டை நகர கூட்டுறவு வங்கி கிளையில் பல்வேறு தேவைகளுக்காக வாடிக்கையாளர்கள் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். அதை திருப்ப வந்தபோது நகையை தராமல் வங்கி ஊழியர் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்து விசாரித்ததில் அந்த ஊழியர் மோசடியில் ஈடுபட்ட விவரம் அறிந்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றிய விவரம் தெரியவந்ததும் அதிகாரிகள் வங்கிக்கு நேரடியாக வந்து அடகு நகைகளை சரிபார்க்கும் பணிகளை மேற்கொண்டனர். லாக்கரில் 500க்கும் மேற்பட்ட பைகளில் வைக்கப்பட்டிருந்த நகைகளை ஒவ்வொன்றாக சோதனையிட்டனர்.
அப்போது 28 வாடிக்கையாளர்களின் 80 அடகு நகைகள் பைகளில் கவரிங் நகைகளை வைத்து இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்ததில் சம்பந்தப்பட்ட பொறுப்பு அதிகாரியே தங்க நகைகளை எடுத்து விட்டு அதற்கு பதில் கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்து இருப்பது அம்பலமானது.
இந்த வகையில் மொத்தம் 411 பவுன் நகைகள் கையாடல் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 19 லட்சம் ஆகும்.
இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது லாக்கர் சாவியை வைத்திருந்த வங்கி தலைமை காசாளர் கணேசன் (வயது 56), உதவி காசாளர் விஜயகுமார் என்ற சரவணன் (42) ஆகியோர் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து புதுச்சேரி கூட்டுறவு வங்கி கடன் பிரிவு மேலாளரும், கண்காணிப்பு அதிகாரியுமான அன்பழகன் கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், வெங்கடாஜலபதி ஆகியோர் மோசடி உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து வங்கி அதிகாரிகளை தேடி வந்தனர்.
இந்தநிலையில் தங்களது வீடுகளில் பதுங்கியிருந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் நகர கூட்டுறவு வங்கியில் கையாடல் செய்த நகைகளை வேறு இடத்தில் அடகு வைத்திருந்ததை கண்டுபிடித்து அவற்றை போலீசார் மீட்டனர். தொடர்ந்து மேலும் சில நகைகளை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நகர கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களின் நகைகளை கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்ட 2 அதிகாரிகள் கைதான சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா 100 சதவீத தடுப்பூசியை எட்டும் இலக்கில் அரசின் செயல்பாடு இருப்பதால் சட்டசபைக்குள் செல்வதற்கும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
தடுப்பூசி போடாதவர்கள் புதுவை சட்டசபைக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தகவல் மற்றும் பணிகளுக்காக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை சந்திக்க புதுவை சட்டசபைக்கு நாள்தோறும் ஏராளமானவர்கள் வருகின்றனர்.
தற்போது கொரோனா 100 சதவீத தடுப்பூசியை எட்டும் இலக்கில் அரசின் செயல்பாடு இருப்பதால் சட்ட சபைக்குள் செல்வதற்கும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி சட்டசபைக்கு வருபவர்களிடம் அங்கு பணியில் உள்ள சுகாதார ஊழியர்கள் கொரோனா சான்றிதழ் உள்ளதா? என்று கேட்டு அதன்பிறகே அனுமதித்து வருகின்றனர்.
சான்றிதழ் இல்லாமல் வருபவர்களிடம் அவர்கள் ஊசி போட்டுள்ளார்களா? என்பதை அறிய செல்போன் எண்ணை வைத்து ஊசி போட்டுள்ளதை தெரிந்துகொண்டு சட்டசபைக்குள் அனுமதிக்கிறார்கள்.
தடுப்பூசி போடாதவர்களை சட்டசபைக்குள் செல்ல அனுமதி மறுத்து இதுவரை ஊசி போடாதவர்களை அங்கேயே ஊசிபோடுமாறு அறிவுறுத்துகிறார்கள். அதேபோல் 2-வது தவணைக்கான கெடு முடிந்த நிலையிலும் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. சுகாதார ஊழியர்களின் அதிரடி நடவடிக்கையால் புதுவை சட்டசபை வளாகத்தில் நேற்று பரபரப்பு நிலவியது. சட்டசபை வளாகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியினை சபாநாயகர் செல்வம் ஆய்வு செய்தார்.

பறவைகள் வேட்டையாடுவதை தடுக்கவும், அலையாத்தி காடுகளில் உள்ள முட்செடிகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்கால்:
காரைக்கால் கடற்கரை சாலையையொட்டி சுமார் 25 ஏக்கர் சதுப்பு நிலத்தில் அலையாத்தி காடுகள் உள்ளன. இந்த வகை காடுகள் சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தின்போது, நகர் பகுதியில் தண்ணீர் புகாமல் தடுத்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 1996-ம் ஆண்டு ரூ.6 லட்சம் செலவில் அலையாத்தி செடிகள் நடப்பட்டன. அந்த செடிகள் வளர்ந்து காடுகளாக மாறியதால் அங்கு சைபீரியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் தங்கி இரை இளைப்பாறி சென்றன.
இதைத்தொடர்ந்து, அலையாத்தி காட்டை சுற்றியுள்ள கடற்கரை பகுதியை அரசு சுற்றுலா தலமாக அறிவித்து, பல லட்சம் செலவில் நடைபாதை, பூங்கா, அமரும் வித்தியாசமான நாற்காலிகளை அமைத்தது. இதனால் காரைக்காலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை வெளிநாட்டு பறவைகளை கண்டு களித்தனர்.
இந்தநிலையில் அலையாத்தி காடுகளில் பறவைகள் வேட்டையாடுவது அதிகரித்தது. மேலும் காடுகளின் மத்தியில் முட்செடிகள் அதிக அளவில் வளர தொடங்கியதால் செடிகளில் அமர முடியாத பறவைகள் வேறு இடத்துக்கு செல்ல தொடங்கின. இதனால் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு பறவைகளின் வரத்து குறைந்தது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அலையாத்தி காட்டின் மேற்கே சேறும், சகதியுமான இடத்தில் 100-க்கும் மேற்பட்ட செங்கால் நாரைகளும், வெள்ளை கொக்குகளும் தங்கி இளைப்பாறி செல்கின்றன. சில அரிய வகை வெளிநாட்டு பறவைகளும் படையெடுத்து வருகின்றன. இந்த பறவைகள் ஜனவரி மாதம் வரை தங்கியிருந்து இளைப்பாறும் என்று கூறப்படுகிறது.
எனவே பறவைகள் வேட்டையாடுவதை தடுக்கவும், அலையாத்தி காடுகளில் உள்ள முட்செடிகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுவையில் ஒமைக்ரான் தொற்று தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. மழை பெய்த போது சம்பந்தப்பட்ட அதிகாரி பெயரில் போலி உத்தரவுகளை தயாரித்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாகவும் தகவல் பரவியது.
இதுதொடர்பாக கல்வித்துறை சார்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை இந்த செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. யாரையும் போலீசார் கைது செய்யவும் இல்லை.
இந்தநிலையில் நேற்று மீண்டும் தவறான தகவல் பரப்பப்பட்டது. அதாவது புதுவையில் 3 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், இதைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாகவும் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வருவதுபோல் தகவல்கள் பரவின.
இந்த காட்சிகள் வைரலானது. இதனால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதன் உண்மை தன்மையை அறிய பலரும் சுகாதாரத்துறை, கல்வித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். அப்போது தான் அது வதந்தி என்பது தெரிய வந்தது.
இதுபோன்ற அதிகாரபூர்வமற்ற தகவல்களால் பெற்றோர் மத்தியில் கடும் குழப்பம் நிலவி வருகிறது. இதுதொடர்பாக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கல்வி மற்றும் காவல்துறையை கைவசம் வைத்துள்ள உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.