என் மலர்
புதுச்சேரி
முதலியார்பேட்டையில் பெண்ணை மானபங்கப்படுத்திய தகராறில் இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கம் பேட் அரசு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தினேஷ். டி.வி. மெக்கானிக். இவரது மனைவி நந்தினி (வயது28).
இவர் சம்பவத்தன்று பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு பெண்ணுடன் அங்காளம்மன் நகரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது எதிர்வீட்டை சேர்ந்த விவேக் என்ற விவேகானந்தன் (24), ஜில்பர் மற்றும் விஸ்வா ஆகியோர் மது போதையில் நந்தினியை வழி மறித்து மேலே இடிப்பது போல் வந்ததாக கூறப்படுகிறது.
இதனை நந்தினி தட்டி கேட்டு விவேக்கை தாக்கியதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த விவேக் என்ற விவேகானந்தன் ஆபாசமாக திட்டினார். மேலும் ஜில்பர் மற்றும் விஸ்வா ஆகியோர் நந்தியை மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. உடனே நந்தினியும் பக்கத்து வீட்டு பெண்ணும் அங்கிருந்து செல்ல முயன்றனர்.
ஆனாலும் விவேக் அவர்களை வழிமறித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் நந்தினி தனது கணவர் தினேசிடம் முறையிட்டார். இதில் ஆத்திரமடைந்த தினேஷ் விவேக்கை ஆபாசமாக திட்டி தாக்கினார்.
இதனையறிந்த விவேக்கின் தாய் உமையாள் தினேசிடமிருந்து விவேக்கை மீட்டு வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர் அன்றிரவு தினேஷ் மற்றும் தவளக்குப்பத்தை சேர்ந்த விஷ்ணு(30), முருங்கப்பாக்கம் பேட் பகுதியை சேர்ந்த ரஞ்சித் ஆகிய 3 பேரும் விவேக்கின் வீட்டுக்குள் ஆத்துமீறி நுழைந்து விவேக்கை கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதனை விவேக்கின் சகோதரிகள் விந்தியா, அமுதா ஆகியோர் தடுக்க முயன்றனர். அவர்களையும் அந்த கும்பல் தாக்கியது.
மேலும் விந்தியாவை அந்த கும்பல் மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆத்திரம் தீராத அந்த கும்பல் விவேக்கை மேலும் கடுமையாக தாக்கி அங்கிருந்த ஆற்றின் ஓரம் வீசினர். மேலும் அமுதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அந்த கும்பல் சென்று விட்டது. இந்த தாக்குதலில் அமுதா காயமடைந்தார். மேலும் படுகாயமடைந்த விவேக் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பின்னர் இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாண்டார்கோவில் அருகே மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் சுமை தூக்கும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
திருவாண்டார்கோவில் சின்னபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது40). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (36). பிப்டிக்கில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் குடிபழக்கமுள்ள சத்தியசீலன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவார். அதே போல் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி விட்டு வந்து ரேவதியிடம் தகராறில் ஈடுபட்டார்.
மேலும் மது அருந்த பணம் தருமாறு மனைவியிடம் கேட்டார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் மனவருத்தமடைந்த சத்தியசீலன் அறையின் உள்ளே சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். ரேவதியும் மகள்களை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் உள்ள அன்றாட வேலைகளை பார்க்க தொடங்கினார்.
ஆனால் வெகு நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார் அங்கு சத்தியசீலன் வீட்டின் மின்விசிறியில் சேலையால் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்டு ரேவதி அதிர்ச்சியில் சத்தம் போட்டார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தூக்கில் இருந்து சத்தியசீலனை மீட்டனர்.
இதுகுறித்து ரேவதி திருபுவனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி மாநில எல்லைகளில் கொரோனா சான்றிதழ் வைத்துள்ள சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானால் 2 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். பொதுக்கூட்டம், நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளி, கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி மற்றும் கொரோனா நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்படி பின்பற்றப்படவில்லை எனில் விழா ஒருங்கிணைப்பாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் அரசால் வழங்கப்பட்ட அனுமதியும் ரத்து செய்யப்படும்.
வெளி மாநில சுற்றுலா பயணிகளுக்காக ஓட்டல்கள், ரிசார்ட் மற்றும் பிற இடங்களில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும்போது வரவேற்பு அறையில் இருப்பவர்கள் பங்கேற்பாளர்களின் கொரோனா தடுப்பூசி சான்றிதழை கட்டாயம் கேட்டு பெற்றிருக்க வேண்டும். இது ஆய்வுக்கு உட்பட்டது. ஆய்வின்போது சான்றிதழின் நகல் இல்லாத ஓட்டல்கள், ரிசார்டுகளுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் அனுமதியும் ரத்து செய்யப்படும்.
புதுவை மாநில எல்லைகளில் சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுவர். தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும், 10-ந் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போட உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி:
உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானின் பரவல் வேகமெடுத்து வரும் நிலையில் இந்தியாவில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி ஜனவரி 3-ந்தேதி முதல் போடப்படும். அதேபோல் ஜனவரி 10-ந் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி கடந்த 26-ந் தேதி அறிவித்தார்.
அதன்படி தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் செய்து வந்தன. இதுதொடர்பாக முன்பதிவு செய்து கொள்வது குறித்தும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் நலவழித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி அரசின் சுகாதாரம் மற்றும் நலவழித்துறை சார்பில் வருகிற 3-ந் தேதியில் இருந்து 15 முதல் 18 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்-சிறுமிகளுக்கும் (அதாவது 2007 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களுக்கு) கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின் தடுப்பூசி பயன்படுத்தப்பட உள்ளது.
தடுப்பூசி போட ஆன்லைன் அல்லது தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களில் முன்பதிவு செய்யலாம். இதற்காக கோவின் செயலி ஏற்கனவே உள்ள கணக்கு மூலம் சுயபதிவு செய்யலாம். அல்லது செல்போன் எண்ணை கொண்டு புதிய கணக்கை உருவாக்கியும் பதிவு செய்யலாம். நேரடியாக தடுப்பூசி போட செல்லும்போது அங்குள்ள சரி பார்ப்பவர்கள், தடுப்பூசி போடுபவர் மூலம் ஆன்சைட்டிலும் பதிவு செய்யலாம்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனவரி 10-ந் தேதி முதல் சுகாதார பணியாளர்களுக்கும், களப்பணியாளர்களுக்கும் (தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டிய பணியாளர்கள் உள்பட) மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்ட நாளில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு அல்லது 39 வாரங்களுக்கு பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
ஆன்லைன் மற்றும் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களிலும் கோவின் செயலி மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த செயலி மூலமாக மேலே குறிப்பிட்ட பயனாளிகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பெறுவதற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்ட விவரம் ஏற்கனவே வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ்களில் இணைத்து தரப்படும்.

புதுவையில் ஒமைக்ரான் தொற்று பரவியது எப்படி? என்பது தொடர்பாக சுகாதாரத்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் புதிய அச்சுறுத்தலாக ஒமைக்ரான் தொற்று 2 பேரை பாதித்துள்ளது. 80 வயது முதியவர், 20 வயது கல்லூரி மாணவி என 2 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் முதியவர் கொரோனா நோயாளியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
கல்லூரி மாணவி வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளார். அவர்களுக்கு கொரோனா தொற்று எவ்வாறு பரவியது என்பது தொடர்பாக இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை குழு தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.
தொற்று பாதிக்கப்பட்ட 2 பேரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் எந்தவித நேரடி தொடர்பிலும் இல்லை. மேலும் இருவரும் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள். அதுமட்டுமின்றி அவர்களது குடும்பத்தினர் யாரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
அவர்களுக்கு தொற்று பாதிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதனால் ஒமைக்ரான் தொற்று சமூக பரவலாக மாறியிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்கனவே கோரிமேடு நெஞ்சக நோய் மருத்துவமனையில் 180 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி மேலும் படுக்கைகளை தயார் செய்ய ரோடியர் மில் வளாகத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் பார்வையிட்டு சென்றுள்ளார்.
தொற்று பாதிப்பு அதிகம் ஏற்படும் நிலையில் மேலும் படுக்கை வசதி, ஆக்சிஜன் செலுத்தும் வசதி உள்ளிட்டவைகளை செய்யவும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள சுகாதாரத்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் புதுவையில் கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கேளிக்கை நிகழ்ச்சிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றினால் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

புதுச்சேரியில் இரவு 12.30 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்றும் சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரி:
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவையில் சில கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதி அளித்துள்ளது.
50 சதவீதம் பேர் மட்டுமே கேளிக்கை நிகழ்ச்சிகளில் அனுமதிக்கப்படும். 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து புத்தாண்டை கொண்டாடலாம் என தெரிவித்தது. இதனால் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளரும், கரிக்கலாம்பாக்கம் முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ஜெகநாதன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், அண்டை மாநிலமான தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், புதுச்சேரியில் டிசம்பர் 31-ம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1-ம் தேதி அதிகாலை 1 மணி வரை மதுபானம் விற்கக்கூடாது என உத்தரவிட்டது. இரவு 12.30 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தீர்ப்பளித்துள்ளது.
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
உலகம் முழுவதும் உருமாறிய வைரஸ் கொரோனாவான ஒமைக்ரான் தொற்று பரவத்தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவையில் புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதி அளித்துள்ளது.
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டை கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேளிக்கை நிகழ்ச்சிகளில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து புத்தாண்டை கொண்டாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில் புதுவையில் கல்லூரி மாணவி மற்றும் முதியோர் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதற்கிடையே புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடைவிதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளரும், கரிக்கலாம்பாக்கம் முன்னாள் பஞ்சாயத்தலைவருமான ஜெகநாதன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். ஜெகநாதன் சார்பில் அவரது வக்கீல் ஸ்ரீதரன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அண்டை மாநிலமான தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீது இன்று பிற்பகல் விசாரணை நடத்துவதாக நீதிபதிகள் வைத்தியநாதன், பரதன் சக்கரவர்த்தி ஆகியோர் அறிவித்துள்ளனர். விசாரணையின் போது புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா? என்பது தெரியவரும்.
இதையும் படியுங்கள்... கோவாவில் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு பிரமாண்ட சிலை
காதல் தோல்வியால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை கோவிந்தசாலை பகத்சிங் வீதியை சேர்ந்தவர் ஆயிஷா (வயது 50). இவரது மகன் செய்யது ரியாசுதீன் (வயது 28). ஆட்டோ டிரைவர். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதால் இருவரும் பிரிந்துவிட்டனர். காதல் தோல்வி காரணமாக செய்யது ரியாசுதீன் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று அவர் பஸ்நிலைய பகுதியில் வைத்து எலிமருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுவையில் புத்தாண்டை கொண்டாட ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. நகரமெங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் புதுவையில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில சுற்றுலா பயணிகள் 2 தடுப்பூசிகள் செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்கவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி புத்தாண்டை கொண்டாட வெளிமாநிலத்தவர்கள் புதுச்சேரியில் குவிந்தவண்ணம் உள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வந்த பலர் தொடர்ந்து இங்கேயே முகாமிட்டுள்ளனர். கேளிக்கை நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு கொண்டாட தனியார் ஓட்டல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுவை சீகல்ஸ் ஓட்டல், பழைய துறை முகம், சுண்ணாம்பாறு படகு குழாம், பாரடைஸ் பீச் போன்றவற்றிலும் புத்தாண்டு கொண்டாட தனியார் நிறுவனங்களை அரசு அனுமதித்துள்ளது.
மதுவிருந்து, உணவு என தனிநபருக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பழைய துறைமுக வளாகத்தில் பிரபல இந்தி நடிகை சன்னிலியோன் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.
புத்தாண்டு தினத்தன்று பல்லாயிரக்கணக்கானோர் கூடுவார்கள் என்பதால் கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒயிட் டவுண் கடற்கரை சாலை-சுப்பையா சாலை, பட்டேல் சாலை, செஞ்சி சாலைக்கு இடைப்பட்ட பகுதி) பகுதியில் 31-ந்தேதி போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் கூடுபவர்கள் கடலுக்குள் இறங்கி குளிப்பதை தடுக்கும் விதமாக அங்கு தடுப்புக்கட்டைகள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துமீறல்களை தடுக்கும் விதமாகவும் கூட்டத்தை கண்காணிக்கவும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை விரைவில் அடையாளம் காணும் வகையிலும் 40 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
புத்தாண்டை கொண்டாட வருவோர் எங்கெங்கு வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புத்தாண்டு நெருங்கிய நிலையில் வெளியூர் சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வந்து முகாமிட்டுள்ளனர். நவநாகரீக ஆடைகளுடன் அவர்கள் வீதிகளில் உலா வந்தவண்ணம் உள்ளனர்.
வெளிமாநில வாகனங்கள் ஆயிரக்கணக்கில் புதுவைக்கு வந்துள்ளதால் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் வர உள்ளனர். அப்போது மேலும் நெரிசல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் படையெடுப்பு காரணமாக அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிகின்றன. முன்பதிவு செய்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு அறையில்லை என்ற நிலை நிலவுகிறது. ஒருசில ஓட்டல்களில் வழக்கமான கட்டணத்தைவிட 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடுவதால் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் மக்கள் கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா தொழிலை நம்பியுள்ள மக்களின் பொருளாதார நலன் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அரசு முழு தளர்வு அளித்துள்ளது. இதற்கிடையே ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அந்த மாநில அரசுகள் தடை விதித்துள்ளது. இதனால் புதுவைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதற்கிடையே புதுச்சேரியில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் வழிமுறைகளையும் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்து கண்காணிப்பில் வைப்பது போன்ற நடை முறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முககவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடை வெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா வழிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
கொரோனா நடைமுறைகள் குறித்து அறிவிப்புகள் செய்ய வேண்டும். அவை பின்பற்றப்படுவதை கண் காணிக்க சிறப்பு குழுக்களை அமர்த்த வேண்டும். கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வருபவர்கள் முககவசம் அணிந்து இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வெப்பமானி உதவியோடு உடல் வெப்பத்தை பரிசோதனை செய்ய வேண்டும்.
மக்கள் கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனைகள் நடத்த வேண்டும். தொற்று அறிகுறி காணப்பட்டவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ உதவி அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கிய போதிலும், பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது சுகாதாரத்துறை.
ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதித்துள்ளன. இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட முடியாது.
ஆனால், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் தற்போது ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது. இதனால் புத்தாண்டு கொண்டாட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், புத்தாண்டு அன்று நள்ளிரவு ஒரு மணி வரை மதுபானம் விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். டிசம்பர் 31-ந்தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள், மால்கள், சினிமா தியேட்டர்கள் அனுமதிக்க வேண்டும் என்றார்.
மேலும், பாண்டிச்சேரியில் 8.24 லட்சம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியும், 5.40 லட்சம் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அறிவித்தன்படி, அடுத்த மாதத்தில் இருந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும். 15 முதல் 18 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இருக்கிறோம். பள்ளியில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு வீட்டிற்கு சென்று செலுத்தப்படும் என்றார்.
புதுச்சேரி மாநிலத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பிற நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 186 பேர் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 167 பேரும், டெல்லியில் 165 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் 49, ராஜஸ்தான் 46, தெலங்கானா 55, கர்நாடகாவில் 31, கேரளாவில் 57 பேர், ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தமிழ்நாட்டில் 34 பேர் ஒமைக்ரான் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

80 வயது முதியவர் மற்றும் 20 வயது வாலிபர் என இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்... மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி