என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆர்ப்பாட்டம்
  X
  ஆர்ப்பாட்டம்

  புதுவையில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா பரவலை கட்டுப்படுத்த வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
  புதுச்சேரி:

  புதுவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைகள், வீடுகள் தோறும் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

  இந்தநிலையில் தடுப்பூசியை கட்டாயமாக்கி சட்டவிரோதமாக திணிக்கக்கூடாது, விரும்புவோருக்கு மட்டுமே தடுப்பூசியை செலுத்த வேண்டும், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எந்தவித உரிமைகளையும் மறுக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்தேசிய பேரியக்கம் சார்பில் காமராஜர் சிலையருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

  ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் தேசிய பேரியக்க புதுவை செயலாளர் வேல்சாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் அருணபாரதி உள்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
  Next Story
  ×