என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
வாலிபர் மீது வழக்கு
மாமனார்-மாமியாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது வழக்கு
By
மாலை மலர்25 Dec 2021 9:14 AM GMT (Updated: 25 Dec 2021 9:14 AM GMT)

லாஸ்பேட்டையில் மனைவியை குடும்பம் நடத்த அனுப்ப மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் மாமனார்-மாமியாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை தாகூர்நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் லலிதா குமாரி. இவரை கூனிமேடு பகுதியை சேர்ந்த ஷேக்சுல்தான் என்பவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் ஆரோவில் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர். லலித்குமாரியை அவரது கணவர் அடிக்கடி அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்ததால் கடந்த தீபாவளியன்று லலித்குமாரி தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷேக்சுல்தான் மாமனார் வீட்டுக்கு வந்து லலித்குமாரியை குடும்பம் நடத்த அழைத்தார். ஆனால் லலித்குமாரியின் பெற்றோர் மகளை அனுப்ப மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஷேக்சுல்தான் தகாத வார்த்தைகளால் திட்டி மாமனார் விஜயக்குமார் மற்றும் மாமியார் லதா ஆகியோரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
இதனால் பயந்து போன விஜயக்குமார் தனது மனைவி மற்றும் மகள் லலித்குமாரியுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கியிருந்து வந்தார். ஆனாலும் ஷேக்சுல்தான் அங்கும் சென்று மாமனார் மற்றும் மாமியாரை மிரட்டினார்.
இதையடுத்து விஜயக்குமார் லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×