என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    மது குடித்து விட்டு ரகளை செய்த 2 வாலிபர்கள் கைது

    மது குடித்து விட்டு ரகளை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை குயவர்பாளையம் வாஞ்சிநாதன் வீதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு வாலிபர் மது குடித்து விட்டு அவ்வழியே செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்து கொண்டிருந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் அதேபகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற மண்ணாங்கட்டி (வயது24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல் வில்லியனூர்-ஒதியம்பட்டு ரோடு கணுவாய்பேட்டை 4 முனை சாலை சந்திப்பில் ஒரு வாலிபர் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசி ரகளை செய்வதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் வில்லியனூர் கணுவாய்பேட்டை சாமியார்தோப்பு மல்லிகா தியேட்டர் வீதியை சேர்ந்த மணிகண்டன் என்கி ஸ்பீடு மணி(21) என்பது தெரியவந்தது. தொடர்ந்து மணிகண்டனை கைது செய்தனர்.
    Next Story
    ×