என் மலர்
விருதுநகர்
- மகாத்மா வித்யாலயாவில் யோகா நிகழ்ச்சி நடந்தது.
- பயிற்சியாளர் பேச்சிமுத்து யோகா குறித்து விளக்கம் அளித்தார். ஆசிரியர் ஜோஸ்பிரியா நன்றி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயாவில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நடந்தன. தாளாளர் முருகேசன் தலைமை தாங்கினார். முதல்வர் ராணி முன்னிலை வகித்தார்.
ஆசிரியை மாரியம்மாள் வரவேற்றார். மாணவர்கள், ஆசிரியர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர். பயிற்சியாளர் பேச்சிமுத்து யோகா குறித்து விளக்கம் அளித்தார். ஆசிரியர் ஜோஸ்பிரியா நன்றி கூறினார்.
- சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
- கல்லூரி தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார்.
சிவகாசி
பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் விருதுநகர் மாவட்ட நேரு யுகேந்திரா-விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து சர்வதேச யோகா தினத்தை கல்லூரி கலையரங்கில் கொண்டாடியது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் விஷ்ணுராம் மற்றும் டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினார். மாணவி சவுமியா வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட இளைஞர் நல அதிகாரி ஞானசந்திரன் கலந்து கொண்டார். விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட சமூக சுகாதார அலுவலர் ராஜாகுமார், யோகா அமைப்பை சேர்ந்த ஜெயக்குமார், ரமேஷ், கோபிநாத், கருப்பசாமி, அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர். துர்க்கை ஈஸ்வரன், உடற்கல்வி ஆசிரியர் சுந்தர மூர்த்தி, நேரு-யுகேந்திர அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.
- தேங்காய் விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
- கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காயை தமிழக அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, கா ன்சாபுரம், அத்தி க்கோவில், வ.புதுப்பட்டி, தாணிப்பாறை, மகாராஜபுரம், தம்பிபட்டி, சுந்தரபாண்டியம், கோ ட்டையூர், இலந்தைகுளம், சுரைக்காய்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கு விளையும் தேங்காய் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா மற்றும் பல்ேவறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தேங்காய் விளைச்சல் இருந்தும் விலை இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் கஷ்டப்பட்டு தென்னையை வளர்த்து வருகின்றனர். தேங்காய் உற்பத்திக்கான செலவு, உர விலை ஆகியவை பன்மடங்கு உயர்த்துள்ள நிலையிலும் தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறோம். இந்த நிலையில் தேங்காய் விலை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அதாவது கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு காய் தேங்காய் ரூ.7.10 வரை விற்கப்படுகிறது. உற்பத்தி செலவு, கூலி ஆட்கள், உரம் உள்பட பல்வேறு செலவுகளை வைத்து பார்க்கும் போது நஷ்டம் தான் ஏற்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து தென்னை சாகுபடி செய்து வருகிறோம்.
கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ. 140-க்கு விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசை போன்று கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காயை தமிழக அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பங்குசந்தையில் முதலீடு செய்வதாக ரூ. 15 லட்சம் மோசடி செய்த ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
- பணத்தை பெற்றுக் கொண்ட அவர் அதன் பின் பங்குச்சந்தை குறித்த நிலவரத்தை எனக்கு தெரியப்படுத்தவில்லை.
விருதுநகர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சவுடார்பட்டியைச் சேர்ந்தவர் ராணி (வயது 39). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகர் பாண்டியன் நகரில் குடியிருந்தார். இந்தநிலையில் அவர் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
பாண்டியன் நகரைச் சேர்ந்த ஆசிரியர் சிவக்குமார் என்பவர் பங்கு சந்தையில் முதலீடு செய்து லாபம் எடுப்பதாக ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி அவரது வங்கி கணக்குகளில் பல்வேறு தவணைகள் மூலம் ரூ. 14 லட்சத்து 83 ஆயிரம் செலுத்தினேன். பணத்தை பெற்றுக் கொண்ட அவர் அதன் பின் பங்குச்சந்தை குறித்த நிலவரத்தை எனக்கு தெரியப்படுத்தவில்லை.
எனவே பணத்தை திருப்பித்தருமாறு கேட்டேன். ஆனால் சிவக்குமார் தர மறுத்து விட்டார். இதற்கு உடந்தையாக அவரது சகோதரி ஹேமலதா, கணவர் சந்திரபோஸ் உள்ளனர். உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சிவக்குமார் உள்பட 3 பேர் மீதும் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- ரூ.3 கோடி பணிகளை ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
- இங்கு போடப்பட்டுள்ள சாலையின் தரம் குறித்து சோதனை செய்தார்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை கூடுதல் ஆணையர் ஆனந்தராஜ் பார்வையிட்டார்.
இருக்கன்குடி பகுதியில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மண்புழு உரக்குடில் நாற்றங்கால் மற்றும் பண்ணை கூடத்தில் வளர்க்கப்பட்டு வரும் மீன் குஞ்சு பண்ணைகள், பிரதமரின் குடியிருப்பு வீடுகள் ஆகியவற்றினை ஆய்வுசெய்த கூடுதல் ஆணையர் கத்தாளம்பட்டி பஞ்சாயத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பண்ணை குட்டை முள்ளி செவல்லில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் தொகுப்பு வீடுகள் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
வெங்கடாசலபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அரசு மருத்துவமனைக்கு செல்லும் தார் சாலையில் ஆய்வு செய்தார். இங்கு போடப்பட்டுள்ள சாலையின் தரம் குறித்து சோதனை செய்தார். இந்த நிகழ்ச்சிகளில் கூடுதல் ஆணையருடன் ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சக்தி முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி, வெள்ளைச்சாமி, உதவி பொறியாளர்கள் நாராயணசாமி, முத்துக்குமார் ராஜ்குமார், ஆகியோர் பங்கேற்றனர்.
- வாக்குப்பதிவு எந்திர கிட்டங்கியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
- வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்து தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் பெங்களளூருவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பும் வகையில் திறக்கப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குபதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கிட்டங்கியில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு செய்தார்.
வாக்குபதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கிட்டங்கியில் 411 வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை எந்திரங்கள் பணிக்காவும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது பழுதடைந்த 38 வாக்குப்பதிவு கட்டுப்பாடு எந்திரங்கள் மற்றும் 36 வாக்குப்பதிவு எந்திரங்களையும், 68 வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை எந்திரங்கள் ஆக மொத்தம் 553 வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்து தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் பெங்களளூருவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பும் வகையில் திறக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் மங்களராமசுப்பிரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) காளிமுத்து, தனிவட்டாட்சியர் (தேர்தல்) மாரிசெல்வி மற்றும் அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ரூ.50 கோடி மதிப்பிலான பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.
- இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற உள்ள பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 2022-23-ம் ஆண்டிற்கான ரூ.50 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன.
இந்தப் பணிகளின் விபரங்கள் குறித்த ஆலோசனைக்கூட்டம் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மே கநாதரெட்டி தலைமைவில் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-
கோவிலுக்கு வரும் வழிவில் அர்ச்சுனா ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் ரூ.6 கோடி மதிப்பில் அமைக்கவும், கோவில் வளாகத்தில் 330 கடைகள் கட்டும் பணிகள் ரூ.20 கோடி மதிப்பிலும், அன்னதான கூடம் ரூ.2.50 கோடி மதிப்பிலும், கோவில் வளாகத்தில் பல்நோக்கு ஓய்வுக் கூடம் ரூ.4 கோடி மதிப்பிலும் கட்டுவதற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. கோவில் எல்லைப் பகுதிவில் சுற்றுச்சுவர் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அங்கீகாரம் வேண்டி
விண்ணப்பிக்கப் பட்டுள்ளது.
மேற்கு மற்றும் தெற்கு வெளிப்பிரகாரத்திற்கு வெளியே கருங்கல் தளம் ரூ.1.50 கோடி மதிப்பிலும், கோவில் வளாகத்தில் சுற்றுச் சாலைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ரூ.6.50 கோடி மதிப்பிலும், அம்மை நோய் பாதித்தவர்கள் விரதம் மேற்கொள்ள வயன மண்டபம் ரூ.50 லட்சம் மதிப்பிலும், கோவில் வளாகத்தில் கலையரங்கம் ரூ.50 லட்சம் மதிப்பிலும், கோவில் வளாகத்தில் பெண்களுக்கு குளியல் அறை மற்றும் கழிப்பறை ரூ.2 கோடி மதிப்பிலும் கட்டுவதற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது.
கோவில் வடமேற்குப் பகுதியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலைத்தொட்டி ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கீகாரம் வேண்டி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பூங்கா ரூ.3கோடியில் அமைக்க அங்கீகாரம் வேண்டி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என மொத்தம் ரூ.50 கோடி மதிப்பில் 2022-23-ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்புகள் வெளியிடபட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், 2022-23-ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பின்படி, கோவிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலனை முன்னிட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கோவில் பெருந்திட்ட வரைபடத்தினை ஆய்வு செய்து அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கினார்.
இந்த கூட்டத்தில், கோவில் அறங்காவலர் ராமமூர்த்தி, உதவி ஆணையர் கருணாகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 749 மையங்களில் 30 ஆயிரம் பேருக்கு எழுத்தறிவு திட்டம் தொடக்கம் தொடங்கியது.
- தியாகராசா தொடக்கப் பள்ளியில் உள்ள மையத்தில் திட்ட தொடக்க விழா வட்டாரக் கல்வி அலுவலர் மலர்கொடி தலைமையில் நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 3-ம் கட்டமாக 749 மையங்களில் 29 ஆயிரத்து 991 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கற்றுத்தரும் பணி தொடங்கியுள்ளது என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் கூறி னார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், தியாக ராசா தொடக்கப் பள்ளியில் உள்ள மையத்தில் திட்ட தொடக்க விழா வட்டாரக் கல்வி அலுவலர் மலர்கொடி தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் பழனிச்சாமி வரவேற்றார்.
திட்டத்தைத் தொடங்கி வைத்து, கற்போருக்கு புத்தகங்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களை வழங்கி உதவி திட்ட அலுவலர் ஜோதிமணி ராஜன் பேசியதாவது:-
விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ங்களை முன்னுரிமை பெறும் மாவட்டங்கள் என 2019-ம் ஆண்டு அறிவித்து ஒவ்வொரு துறையிலும் பல்வேறு முன்னேற்ற திட்டங்களை அரசு நிறை வேற்றி வருகிறது.
இதன்படி சிறப்பு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டம் சார்பில் முதல் கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் 2019-2020 ஆண்டில் 615 மையங்களில் தலா 40 பேருக்கும், 2020-2021 ஆண்டில் 1124 மையங்களில் தலா 40 பேருக்கும் அடிப்படை எழுத்தறிவு 6 மாதங்கள் தன்னார்வலர்கள் மூலம் இரவு நேரங்களில் கற்றுத் தரப்பட்டு, இவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்கப்ப ட்டது.
தற்போது 3-வது இறுதி கட்ட எழுத்தறிவுத் திட்டம் ஜூன் மாதம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் 749 மையங்களில் தொடங்க ப்பட்டுள்ளது. இதில் 29,991 பேருக்கு எழுத்தறிவு 6 மாதங்கள் கற்றுத்தரப்பட்டு தேர்வு நடத்தி முடிக்கப்படும். இத் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் எழுத படிக்கத் தெரியாதவர்கள் இல்லை என்ற நிலை உரு வாகும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
நிகழ்ச்சியில் ஆசிரியப் பயிற்றுநர் கற்பகம், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாடசாமி, ஜெயக்குமார் ஞானராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- இளம்பெண் உள்பட 2 பேர் மாயமாகினர்.
- இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
விருதுநகர்
விருதுநகர் பூங்கா நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் செல்வக்கனி (வயது 22). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் பைபாஸ் ரோட்டில் உள்ள வாகன விற்பனையகத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற செல்வக்கனி பின்னர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள சின்ன ரெட்டியபட்டி சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி வடிவு (45), கட்டிட வேலை பார்த்து வந்த இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் வடிவை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
- நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த வாலிபரை கைது செய்தனர்.
- வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெட்டு குண்டுகளை வைத்திருந்தாரா? என்பது தொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செம்பட்டையன்கால் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி மகன் கார்த்திக் (வயது24). இவரிடம் வனவிலங்குகள் வேட்டையாட கூடிய நாட்டு வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் போலீசாரும், வனத்துறையினரும் இணைந்து நேற்றிரவு கார்த்திக் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் 12 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்த கார்த்திக்கை போலீசார் பிடித்து, வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெட்டு குண்டுகளை வைத்திருந்தாரா? என்பது தொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கார்த்திக் மீது வனத்துறையில் ஏற்கனவே 2 வழக்குகள் உள்ளது.
- தெரு நாய்கள் விரட்டியதால் புள்ளிமானை கிணற்றில் விழுந்தது.
- தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
பாளையம்பட்டி
அருப்புக்கோட்டை அருகே பெரியநாயகபுரம் கிராமத்தில் இன்று காலை தண்ணீர் தேடி புள்ளிமான் வந்தது. இதை பார்த்த தெரு நாய்கள் அந்த மானை விரட்டியது. இதில் பயந்த அந்த மான் அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தது.
இதை பார்த்த பொது மக்கள் அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலை மையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் விழுந்த புள்ளி மானை பாது காப்பாக உயிருடன் மீட்டனர்.
பின்னர் மான் வனத்துறை அதிகாரி களிடம் ஒப்படை க்கப்பட்டது. கிணற்றுக்குள் புள்ளிமான் விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களி டையே சிறிதுநேரம் பரபரப்பு ஏற்படுத்தியது
- விருதுநகர் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள சிவரக்கோட்டையை சேர்ந்தவர் மாரீஸ்வரன் (வயது 48). இவரது மனைவி புஷ்பராணி (45). இவர்களது மகன் ருஜித்குமார் சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் தனது தாயாரிடம் ருஜித்குமார் பேசுவதை தவிர்த்து வந்தாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த புஷ்பராணி அவரது தாயார் வீட்டிற்கு சென்று யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார்.
ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட புஷ்பராணி சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் கிழக்கு பாண்டியன் நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (27). இவரது மனைவி சக்திபிரியா.
கடந்த சில மாதங்களாக அடிக்கடி மதுகுடித்து வந்ததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக சக்தி பிரியா கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
மனைவியிடம் சமரசம் பேசி பலனில்லை. இதனால் விரக்தி அடைந்த அசோக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






