search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்காய் விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை
    X

    தேங்காய் விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை

    • தேங்காய் விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
    • கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காயை தமிழக அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, கா ன்சாபுரம், அத்தி க்கோவில், வ.புதுப்பட்டி, தாணிப்பாறை, மகாராஜபுரம், தம்பிபட்டி, சுந்தரபாண்டியம், கோ ட்டையூர், இலந்தைகுளம், சுரைக்காய்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

    இங்கு விளையும் தேங்காய் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா மற்றும் பல்ேவறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தேங்காய் விளைச்சல் இருந்தும் விலை இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் கஷ்டப்பட்டு தென்னையை வளர்த்து வருகின்றனர். தேங்காய் உற்பத்திக்கான செலவு, உர விலை ஆகியவை பன்மடங்கு உயர்த்துள்ள நிலையிலும் தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறோம். இந்த நிலையில் தேங்காய் விலை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அதாவது கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு காய் தேங்காய் ரூ.7.10 வரை விற்கப்படுகிறது. உற்பத்தி செலவு, கூலி ஆட்கள், உரம் உள்பட பல்வேறு செலவுகளை வைத்து பார்க்கும் போது நஷ்டம் தான் ஏற்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து தென்னை சாகுபடி செய்து வருகிறோம்.

    கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ. 140-க்கு விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசை போன்று கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காயை தமிழக அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×