search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.50 கோடி மதிப்பிலான பணிகள் குறித்து ஆய்வு
    X

    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.50 கோடி மதிப்பில் நடைபெற உள்ள பணிகள் குறித்து கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

    ரூ.50 கோடி மதிப்பிலான பணிகள் குறித்து ஆய்வு

    • ரூ.50 கோடி மதிப்பிலான பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.
    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற உள்ள பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 2022-23-ம் ஆண்டிற்கான ரூ.50 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன.

    இந்தப் பணிகளின் விபரங்கள் குறித்த ஆலோசனைக்கூட்டம் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மே கநாதரெட்டி தலைமைவில் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-

    கோவிலுக்கு வரும் வழிவில் அர்ச்சுனா ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் ரூ.6 கோடி மதிப்பில் அமைக்கவும், கோவில் வளாகத்தில் 330 கடைகள் கட்டும் பணிகள் ரூ.20 கோடி மதிப்பிலும், அன்னதான கூடம் ரூ.2.50 கோடி மதிப்பிலும், கோவில் வளாகத்தில் பல்நோக்கு ஓய்வுக் கூடம் ரூ.4 கோடி மதிப்பிலும் கட்டுவதற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. கோவில் எல்லைப் பகுதிவில் சுற்றுச்சுவர் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அங்கீகாரம் வேண்டி

    விண்ணப்பிக்கப் பட்டுள்ளது.

    மேற்கு மற்றும் தெற்கு வெளிப்பிரகாரத்திற்கு வெளியே கருங்கல் தளம் ரூ.1.50 கோடி மதிப்பிலும், கோவில் வளாகத்தில் சுற்றுச் சாலைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ரூ.6.50 கோடி மதிப்பிலும், அம்மை நோய் பாதித்தவர்கள் விரதம் மேற்கொள்ள வயன மண்டபம் ரூ.50 லட்சம் மதிப்பிலும், கோவில் வளாகத்தில் கலையரங்கம் ரூ.50 லட்சம் மதிப்பிலும், கோவில் வளாகத்தில் பெண்களுக்கு குளியல் அறை மற்றும் கழிப்பறை ரூ.2 கோடி மதிப்பிலும் கட்டுவதற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது.

    கோவில் வடமேற்குப் பகுதியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலைத்தொட்டி ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கீகாரம் வேண்டி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பூங்கா ரூ.3கோடியில் அமைக்க அங்கீகாரம் வேண்டி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என மொத்தம் ரூ.50 கோடி மதிப்பில் 2022-23-ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்புகள் வெளியிடபட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், 2022-23-ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பின்படி, கோவிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலனை முன்னிட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கோவில் பெருந்திட்ட வரைபடத்தினை ஆய்வு செய்து அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கினார்.

    இந்த கூட்டத்தில், கோவில் அறங்காவலர் ராமமூர்த்தி, உதவி ஆணையர் கருணாகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×