என் மலர்
விருதுநகர்
- சீனிவாச பெருமாள் கோவில் 8 உண்டியல்கள் திறந்து பணம் எண்ணும் பணி நடந்தது
- இதில் ரொக்கப்பணம் ரூ.11 லட்சத்து 32 ஆயிரத்து 320-ம், 32 கிராம் தங்க நகைகளும், 27 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு ரூபாய் ேநாட்டுகளும் கிடைத்தன.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சன்னதியில் உள்ள 8 உண்டியல்கள் திறந்து பணம் எண்ணும் பணி நடந்தது.
விருதுநகர் அறநிலையத்துறை உதவி ஆணையர் வளர்மதி தலைமையில், செயல் அலுவலர் கரு முத்துராஜா, ஆய்வாளர் முருகானந்தம், தக்கார் பிரதிநிதி ராஜாராம், நகை மதிப்பீட்டாளர் பிரபாகரன், அர்ச்சகர் ராஜ கோபால பட்டர் முன்னிலையில் உண்டியல் திறந்து பணம் எண்ணப்பட்டன.
இதன் முடிவில் ரொக்கப்பணம் ரூ.11 லட்சத்து 32 ஆயிரத்து 320-ம், 32 கிராம் தங்க நகைகளும், 27 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு ரூபாய் ேநாட்டுகளும் கிடைத்தன.
- தூய்மை நகரத்திற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
- திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களில், லாட்ஜ்களில் சேரும் குப்பைகளை அவர்களே அழித்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பாலையம்பட்டி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு தீவிர தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று காலை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் தூய்மை நகரத்திற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
ஆணையாளர் அசோக்குமார் தலைமையில், நகர் நல அலுவலர் ராஜ நந்தினி, துணைத் தலைவர், பழனிசாமி முன்னிலையில், சுகாதார அதிகாரிகள், பொதுமக்கள் ''எனது நகரத்தை தூய்மையாக வைத்திருப்பது எனது கடமை, தூய்மை பணிகளுக்கு நேரத்தை ஒதுக்குவேன், வீட்டிலேயே குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளரிடம் ஒப்படைப்பேன்'' என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் அந்த நிகழ்ச்சியில் திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களில், லாட்ஜ்களில் சேரும் குப்பைகளை அவர்களே அழித்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
- காட்டு யானைகள் மா மரங்களை சேதப்படுத்தியது.
- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, புலி, காட்டெருமை, காட்டுப்பன்றி, மிளா, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளான கான்சாபுரம், அத்திக்கோவில் ஆகிய பகுதிகளில் பல ஏக்கரில் மா, பலா, தென்னை, வாழை ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளனர். இந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் வனவிலங்குகள் அவ்வப்போது புகுந்து தென்னை, மா, பலா, வாழை உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.
தற்போது மாங்காய் சீசன் என்பதால் மலைப்பகுதியில் இருந்து அடிவாரப்பகுதி நோக்கி வரும் காட்டு யானைகள் மா மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.ஒரு வாரமாக அத்திகோவில் பகுதியில் உள்ள விவசாயி முத்துராஜ் என்பவரது மாந்தோப்பிற்குள் புகுந்த காட்டு யானைகள் 30-க்கும் மேற்பட்ட மா மரங்களை உடைத்தும், வேரோடு சாய்த்தும் சேதப்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
யானைகள் பயிர்கள், மரங்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், யானைகள் பயிர்கள் சேதப்படுத்துவதை தவிர்க்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
- ஆடிப்பூர கொட்டகையில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
- ஆடிப்பூர கொட்டகையில் தான் ஆண்டாள் தேர் திருவிழா கருட சேவையின் போது காலையில் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெறும்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தன்று பெரிய தேரில் ஆண்டாளும், ரங்க மன்னாரும் காட்சியளிப்பார்கள்.
பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து நிலைக்கு சேர்ப்பார்கள் இந்த ஆண்டு ஆடித் தேர் திருவிழா வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதி நடைபெறுகிறது.
தேர் திருவிழாவை முன்னிட்டு ஆண்டாள் கோவிலுக்கு முன்புறம் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் மாலை தொடங்கி இரவு வரை பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, பரதநாட்டிய நிகழ்ச்சிகளை பக்தர்கள் கண்டு களிப்பதற்காக 9 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் ஆடிப்பூர கொட்டகையின் உள்ளே கண் கவரும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணியில் இரவு பகலாக 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்ணைக் கவரும் வண்ண துணிகள், பூக்களைக் கொண்டு பிரமாண்டமான முறையில் சுமார் 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் இந்த பந்தலும், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்காக பெரிய மேடையும் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆடிப்பூர கொட்டகையில் தான் ஆண்டாள் தேர் திருவிழா கருட சேவையின் போது காலையில் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெறும்.அதேபோல் தேர் திருவிழாவை முன்னிட்டு ஆண்டாளுக்கு திருப்பதி திருமலை, ஸ்ரீரங்கம், மதுரை அழகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்து பட்டு, மாலை ஆகிய மரியாதைகள் கொண்டுவரப்பட்டு இந்த பந்தலின் கீழ் வைக்கப்பட்ட பின்னர்தான் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும்.
அதேபோல் பங்குனி மாதம் உத்திர நன்னாள் அன்று ஆண்டாள்- ரங்கமன்னார் திருக்கல்யாணம் இந்த கொட்டகையின் கீழ் நடைபெறும். சிறப்பு வாய்ந்த ஆடிப்பூர கொட்டகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணியை உள்ளூர் மட்டுமல்லாது கோவிலுக்கு வந்து செல்லும் வெளியூர் பக்தர்களும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
ஆடிப்பூர திருவிழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்து ராஜா மற்றும் கோவில் அலுவலர்களும், பணியாளர்களும் செய்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்ட திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வேலைவாய்ப்பை பெற்றுதரும் பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி அனைத்து மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஆண்டுக்கான சேர்க்கை நடக்கிறது.
- இங்கு பயிலும் மாணவ-மாணவிகள் ஒவ்வொ ரு வருடமும் மாநில மற்றும் மாவட்ட அளவில் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்குகின்றனர்.
தாயில்பட்டி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இயற்கை எழிலுடன் பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவ-மாணவிகள் சிறந்த கல்வியை பெற்று தங்களது வாழ்வை மேம்படுத்தி க்கொள்ள பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இங்கு பயிலும் மாணவ-மாணவிகள் ஒவ்வொ ரு வருடமும் மாநில மற்றும் மாவட்ட அளவில் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்குகின்றனர்.
நாக் "ஏ" கிரேடு பெற்றுள்ள இந்த கல்லூ ரியில் என்ஜி னீயரிங் படிப்பு களான சி.எஸ்.இ., இ.சி.இ., இ.இ.இ., மெக்கானிக்கல், சிவில், பயோமெடிக்கல் போன்றவையும் உயர் படிப்புகளான எம்.இ., சி.எஸ்.இ., எலக்ட்ரா னிக்ஸ், ஸ்டெக்சரல் என்ஜினீயரிங், பவர் எலக்ட்ரானிக்ஸ் அண்டு டிரைவ்ஸ், என்ஜினீயரிங் டிசைன் மற்றும் பி.எச்.டி. பாடப்பிரிவுகளும் செயல்பட்டு வருகி ன்றன.பி.டெக்கில் பயோடெக், ஆர்ட்டி பிசியல், இண்ட லிஜண்ட் மற்றும் டேட்டா சயின்ஸ், எம்.பி.ஏ. போன் பாட பிரிவுகள் உள்ளன.
பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் பட்டப்படிப்பை முடித்து வெளியேவரும் மாணவ-மாணவிகளுக்கு நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தப்பட்டு பன்னாட்டு மற்றும் பிரபல நிறுவனங்கள் வேலைவாய்ப்புகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி இந்த ஆண்டு நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில் பி.சி.எஸ்., சி.டி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, ஜோஹோ போன்ற நிறுவனங்களில் 1263 மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இதன் மூலம் தேர்வானவர்களுக்கு ரூ.3 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வரை ஊதியம் பெறுவார்கள். இதற்கான பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
இந்த ஆண்டு (2022-2023) என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பிளஸ்-2 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 10-ம் மற்றும் பிளஸ்-2 சான்றிதழ், நிதந்தர சாதி சான்றிதழ், ஆதார் கார்டு, இமெயில்., பதிவு கட்டணம் செலுத்த ஏ.டி.எம்., கிரிடிட் கார்டுகள் கொண்டுவர வேண்டும். மேலும் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கான ஆலோசனையும் வழங்கப்படும்.அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தில் சலுகையும் வழங்கப்படுகிறது.
உடனடி சேர்க்கை்காக சிவகாசி, கோவில்பட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, சாத்தூர், விளாத்திகுளம், கயத்தாறு, நெல்லை, தூத்துக்குடி, சங்கரன்கோவில், கடயநல்லூர் ஆகிய ஊர்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுதொடர்பான விவரங்க ளுக்கு 80125 31336, 78670 47070, 98946 04930 மற்றும் 80125 31321, 04562-239600 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இதேபோல் பி.எஸ்.ஆர்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி, பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பி.எஸ்.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி, பி.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
- பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 29-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. அனுமதி நாட்களில் மழை பெய்தால் மலையேற தடை விதிக்கப்படும். வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது.பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் முக கவசம் அணிந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
- சிவகாசியில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரியை மறித்தனர்.
- ரேசன் அரிசி, அதனை கடத்தி வந்த லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் சமீப காலமாக ரேசன் அரிசி கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட போலீசார் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆல்வின் பிரைட் மேரி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சிவகாசியில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரியை மறித்தனர். போலீசாரை கண்டதும் லாரியில் இருந்த ஒரு நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சுதாரித்து கொண்ட போலீசார் தப்பி ஓட முயன்ற லாரி டிரைவரை விரட்டி பிடித்தனர்.
தொடர்ந்து போலீசார் லாரியில் சோதனை மேற்கொண்ட போது தலா 50 கிலோ கொண்ட 61 கிலோ மூட்டை ரேசன் அரிசிகள் கடத்தி செல்வது தெரிய வந்தது. மொத்தம் 3 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த ஸ்டாலின் என்பவருக்கு கடத்துவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து ரேசன் அரிசி, அதனை கடத்தி வந்த லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரேசன் அரிசியை கடத்திய லாரி டிரைவர் அவனியாபுரத்தை சேர்ந்த பூவலிங்கம் (வயது 32) என்பவரை கைது செய்தனர். தப்பியோடிய முனிச்சாலையை சேர்ந்த பாண்டித்துரை (29) என்பவரை தேடி வருகின்றனர்.
- அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் மனைவி ஜெயலட்சுமி கணவன் வேல்முருகன் மீது ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
- இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி மனைவிக்கு ஜீவனாம்சமாக மாதம் ரூ. 10 ஆயிரம் தரவேண்டும் என்று நீதிபதி முத்துஇசக்கி உத்தரவிட்டார்.
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள் புரம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது56). இவரது மனைவி ஜெயலட்சுமி (40. இவர்களுக்கு நிவாஸ்(17) என்ற மகன் உள்ளார். வேல்முருகன் கூலி வேலை பார்த்து வருகிறார்
வேல்முருகன் ஜெயலட்சுமி தம்பதிக்கு திருமணமாகி 20 வருடம் ஆகிறது. கருத்து வேறுபாடு காரணமாக ஜெயலட்சுமி கணவர் வேல்முருகனை 12 வருடங்களாக பிரிந்து செம்பட்டியில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் மனைவி ஜெயலட்சுமி கணவன் வேல்முருகன் மீது ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி மனைவிக்கு ஜீவனாம்சமாக மாதம் ரூ. 10 ஆயிரம் தரவேண்டும் என்று நீதிபதி முத்துஇசக்கி உத்தரவிட்டார்.
இந்தநிலையில் மனைவி ஜெயலட்சுமி வழக்கில் ஆஜராகி முடித்து வெளியே வந்தார். நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த ஜெயலட்சுமியிடம் வேல்முருகன் வாக்குவாதம் செய்து பொதுஇடம் என்றும் பாராமல் அவரை தாக்கியுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் சண்டையை விலக்கி வைத்தனர்.
இதை அறிந்த நீதித்துறை நடுவர் நீதிபதி முத்து இசக்கி நீதிமன்ற வளாகத்தில் மனைவியை தாக்கிய வேல்முருகனை கைது செய்து சிறையில் அடைக்குமாறு நகர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி போலீசார் அவரை கைது செய்து அருப்புக்கோட்டையில் உள்ள சிறையில் அடைத்து உள்ளனர்.
- மாணவியின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அவரது பிடியில் இருந்து அந்த மாணவி தப்பித்து வீட்டுக்கு வந்தாார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள சொக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி நேற்று காலை அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் மாணவியை பின் தொடர்ந்து சென்று கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரது பிடியில் இருந்து அந்த மாணவி தப்பித்து வீட்டுக்கு வந்தாார். நடந்த சம்பவம் குறித்து தனது சகோரரிடம் தெரிவித்தார். உடனே அவர் அருண்பாண்டி வீட்டுக்கு சென்று கண்டித்தார். அப்போது அருண்பாண்டி, அவரது தந்தை ராஜாங்கம், சகோதரி பஞ்சு ஆகியோர் அவதூறாக பேசி மாணவியின் சகோதரரை சரமாரியாக தாக்கினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி ஏ.முக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அருண்பாண்டி உள்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கட்டிட வேலை பார்த்த பெண் தவறி விழுந்து பலியானார்.
- ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் பச்சமடம் திருவனந்தபுரம் தெருவை சேர்ந்தவர் பரிமளா (வயது 65). இவர் தனியார் நிறுனத்தில் கட்டிட வேலை செய்யும் சித்தாளாக வேலை பார்த்து வந்தார். அவர் ராஜபாளையத்தில் டிராவல்ஸ் கட்டிட 2-வது மாடியில் பணி செய்த போது திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அப்ேபாது கீழே செயல்பட்ட புரோட்டா கடை மேற்கூரையில் விழுந்து படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மகன் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு ஊழியர்கள் பிரசாரம் நடந்தது.
- அகவிலைப்படி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான பிரசாரபயணம் நடைபெற்று வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதியம், பல லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புதல், அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம், சாலைப்பணியாளர்கள் 41 மாத பணிநீக்க காலத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். அகவிலைப்படி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான பிரசாரபயணம் நடைபெற்று வருகிறது.
கடந்த 20-ந் தேதி களியக்காவிளையில் தொடங்கிய பிரசாரக் குழுவினர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வருகை தந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு பிரசாரம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் ராஜகுரு தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாநில துணைப் பொதுச் செயலாளர் சீனிவாசன் பேசினார்.
அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகி மரிய டேவிட், சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகி சந்தானம், மின்வாரிய ஓய்வு பெற்றோர் அமைப்பின் நிர்வாகி கணேசன், பி.எஸ்.என்.எல். ஓய்வு பெற்றோர் அமைப்பின் நிர்வாகி புளுகாண்டி, அனைத்து துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் பேசினர்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
- இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
ராஜபாளையம்
மத்திய அரசு அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவத்திற்கு இளைஞர்களை 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யும் திட்டத்தை கொண்டுவர ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இளைஞர்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் இத்திட்டத்தை கைவிடக் கோரியும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் மகாலட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் ராமர், மாவட்ட செயலாளர் கணேசன், மாநில குழு உறுப்பினர் திருமலை, டாக்ஸி தொழிலாளர் சங்கம் சார்பில் கண்ணன், மாரியப்பன், பிச்சைக்கனி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.






