என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு ஊழியர்கள் பிரசாரம்
- அரசு ஊழியர்கள் பிரசாரம் நடந்தது.
- அகவிலைப்படி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான பிரசாரபயணம் நடைபெற்று வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதியம், பல லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புதல், அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம், சாலைப்பணியாளர்கள் 41 மாத பணிநீக்க காலத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். அகவிலைப்படி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான பிரசாரபயணம் நடைபெற்று வருகிறது.
கடந்த 20-ந் தேதி களியக்காவிளையில் தொடங்கிய பிரசாரக் குழுவினர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வருகை தந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு பிரசாரம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் ராஜகுரு தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாநில துணைப் பொதுச் செயலாளர் சீனிவாசன் பேசினார்.
அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகி மரிய டேவிட், சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகி சந்தானம், மின்வாரிய ஓய்வு பெற்றோர் அமைப்பின் நிர்வாகி கணேசன், பி.எஸ்.என்.எல். ஓய்வு பெற்றோர் அமைப்பின் நிர்வாகி புளுகாண்டி, அனைத்து துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் பேசினர்.






