என் மலர்
விருதுநகர்
- கோவில் தெப்பக்குளம் பகுதியில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இதுபற்றி இணை இயக்குநர் செல்லத்துரையிடம் பக்தர்கள் முறையிட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் சொக்கநாதர் சுவாமி கோவில் தெப்பக்குளம் பகுதியில் ஆடி அமாவாசை நாளில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை தினம் இன்று என்பதால் ஏராளமான பக்தர்கள் சொக்கநாதர் சுவாமி கோவில் தெப்பக்குளம் பகுதியில் திரண்டனர். ஆனால் கோவில் நிர்வாகத்தினர் அங்கு தர்ப்பணம் செய்ய அனுமதி இல்லை என்று கூறிவிட்டனர்.
இதனால் பக்தர்கள் கொடுக்க முடியாமல் தவித்தனர். இதுபற்றி இணை இயக்குநர் செல்லத்துரையிடம் பக்தர்கள் முறையிட்டனர். அப்போது அவர் தர்ப்பணம் செய்பவர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து அனுமதி வழங்கினார். அதன் பின்னர் பக்தர்கள் தர்ப்பணம் செய்தனர்.
- பெயிண்டர் கொலையில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- உறவினர் பெண்ணை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் முத்தாள் நகரைச் சேர்ந்த சங்கர் என்பவர் மகன் மாரிச்செல்வம் (வயது 19), பெயிண்டர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரது உறவினர் பெண்ணை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதுெதாடர்பாக விஜய் மற்றும் அஜித்குமார், ராஜூ ஆகியோர் மாரிச்செல்வத்திடம் தட்டிக்கேட்டுள்ளனர். இருந்தபோதிலும் மாரிச்செல்வம் தொடர்ந்து அந்த பெண்ணை தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விஜய், அஜித்குமார், ராஜூ ஆகியோர் மாரிச்செல்வத்துக்கு மது வாங்கிக்கொடுத்துள்ளனர். அவர் போதையில் இருந்தபோது அவரை கொலை ெசய்துவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதுபற்றி மாரிச்செல்வ த்தின் தந்தை சங்கர் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய், அஜித்குமார், ராஜூ ஆகிய 3 பேரையும் பிடித்து மாரிச்செல்வம் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வயதானவர்கள் டோலி உதவியுடன் மலைக்கு சென்று வந்தனர்.
- பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். சித்தர்களின் பூமியாக கருதப்படும் இங்கு சுயம்புவாக எழுந்தருளியுள்ள சிவனை வழிபட்டால் புண்ணியம் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.
மலை அடிவாரத்தில் இருந்து 5.5 கி.மீ. தூரத்தில் மேலே அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பகதர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. சதுரகிரியிலும் வருடந்தோறும் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறும்.
இந்நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது உண்டு. இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த 25-ந்தேதி முதல் பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டதால் முதல் நாளில் இருந்தே கணிசமான அளவில் பக்தர்கள் சதுரகிரிக்கு வரத்தொடங்கினர்.
ஆடி மாத பிரதோஷமான 26-ந்தேதி 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரியில் சாமி தரிசனம் செய்தனர். இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சதுரகிரிக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர். கார், வேன், பஸ்களில் வந்த பொதுமக்கள் மலை அடிவாரத்தில் உள்ள தோப்புகளில் தங்கினர்.
நேற்று அதிகாலை 5 மணி முதலே பக்தர்களின் எண்ணிக்ககை அதிகரித்ததால் மலையேற அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று பிற்பகல் முதல் சதுரிகிரியில் அவ்வப்போது மழை பெய்ய தொடங்கியது. மாலை முதல் மிதமான மழை பெய்துகொண்டே இருந்ததால் மலைப்பாதையில் உள்ள மாங்கனி ஓடை, பிலாவடி கருப்பசாமி கோவில் முன்பு உள்ள ஓடை, சங்கிலிப்பாறை, வழுக்குப்பாறை ஆகிய பகுதிகளில் ஓடைகளில் கணிசமான நீர்வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக மலை மேல் இருந்த பக்தர்கள் கீழே இறங்கவும், அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. நடு வழியில் சிக்கியிருந்த பக்தர்கள் மழைக்கு ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் தவித்தனர். அவர்களை வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பாக அடிவாரத்திற்கு அழைத்துச் சென்றனர்.
திடீர் மழையால் சதுரகிரிக்கு செல்ல தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டதால் அடிவாரத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் மழை நின்று வானிலை மாறியது. இதனைத் தொடர்நது ஆடி அமாவாசையான இன்று அதிகாலை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அடிவார கேட் திறக்கப்பட்டதும் பக்தர்கள் சாரை, சாரையாக பக்தி கோஷம் முழங்க மலையேற தொடங்கினர். வயதானவர்கள் டோலி உதவியுடன் மலைக்கு சென்று வந்தனர்.
இன்று மட்டும் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலையாக காட்சியளித்தது. அடிவாரமான தாணிப்பாறையில் மடங்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆனால் கோவில் பகுதியில் குறைவானவர்களுக்கு மட்டுமே அன்னதானம் கிடைத்தது. மலைப்பாதையில் அடிப்படை வசதிகளும் போதுமானதாக இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இன்று மாலை 3 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இடைப்பட்ட நேரத்தில் மழை பெய்தால் அனுமதி வழங்கப்படாது என வனத்துறை தெரிவித்துள்ளது. பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருவதால் சதுரகிரியே திருவிழா கோலம் பூண்டுள்ளது.
முன்னதாக ஆடி அமாவாசையான இன்று சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
கடைசி நாளான நாளை மறுநாள் வரை பக்தர்கள் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடி மாவாசையை முன்னிட்டு விருதுநகர், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர், பேரிடர் மீட்பு குழுவினர் மலைப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
- தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை சூலக்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
- தீக்குளிக்க முயற்சி செய்த பெண் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள குராயூரை சேர்ந்த சீதாலட்சுமி என தெரியவந்தது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைகள் தொடர்பாக மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது 2 மகள்களுடன் வந்திருந்த 31 வயது ஒரு பெண் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை 2 மகளின் மீதும் ஊற்றி பின்னர் தன் உடல் மீதும் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி 3 பேரையும் காப்பாற்றினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை சூலக்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது தீக்குளிக்க முயற்சி செய்த பெண் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள குராயூரை சேர்ந்த சீதாலட்சுமி என தெரியவந்தது. 2 பேர் அதிகாரியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கருத்து வேறுபாடு காரணமாக எனது கணவர் முருகன் 15 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் எனது 2 மகள்களுடன் வாழ்ந்து வந்தேன்.
அருப்புக்கோட்டையில் ஜவுளி கடை வைத்திருந்த எனக்கும் உறவினரான கூத்திப்பாறையைச் சேர்ந்த பாலாஜிக்கு(21) பழக்கம் ஏற்பட்டது. அப்போது பாலாஜி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். இருவரும் நெருங்கி பழகினோம். அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் பாலாஜி என்னை (சீதாலட்சுமி) திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இந்த திருமணத்திற்கு பாலாஜியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பாலாஜியை வலுக்கட்டாயமாக பெற்றோர் அழைத்துச் சென்றனர். இதனை தட்டிக் கேட்க சென்ற என்னை பாலாஜி குடும்பத்தினர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும் இது தொடர்பாக அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், அருப்புக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து ஆகியோர் தொடர்ந்து பொய் வழக்கு போடுவதாக மிரட்டி வருகின்றனர். மேலும் எனது மகள்களின் பள்ளிக்குச் சென்றும் போலீசார் தொந்தரவு செய்து வருகின்றனர். என் வாழ்க்கையை சீரழித்த பாலாஜியின் பெற்றோர் அவரது உறவினர்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவர் மனுவில் கூறியிருந்தார்.
- விருதுநகரில் கட்டப்பட்ட புதிய பாலத்தை இடிக்க வந்த அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
- கச்சேரி ரோட்டில் இருந்து விக்னேஷ் காலனிக்கு செல்லும் வழியில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் நகராட்சியில் அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு கச்சேரி ரோட்டில் இருந்து விக்னேஷ் காலனிக்கு செல்லும் வழியில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆஷா முயற்சியின் பேரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் மற்றும் நகராட்சி பங்களிப்பு மூலம் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்ட ஒப்புதல் பெறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாலம் கட்டும் பணி நகராட்சி என்ஜினீயர்களின் வழிகாட்டுதலின்படி நடந்ததாக தெரிகிறது. அப்போது 2 முறை என்ஜினீயர்கள் பாலம் வடிவமைப்பில் திருத்தம் செய்தனர். அதனையும் ஏற்றுக்கொண்டு பாலம் கட்டப்பட்டது. பாலம் பணிகள் முழுமையாக முடிவடைந்த பின் தற்போது பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட பாலம் நகராட்சி என்ஜினீயர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாக கூறி அதனை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து இன்று காலை ஜே.சி.பி. எந்திரத்துடன் நகராட்சி அலுவலர்கள் பாலத்தை இடிக்க வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வார்டு கவுன்சிலர் ஆஷா மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து பாலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கவுன்சிலருக்கும் நகராட்சி அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து பொது–மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பாலம் இடிக்கும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டு அலுவ–லர்கள் பாதியிலேயே திரும்பச் சென்றனர். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பாலத்தை நகராட்சி இடிக்க முயற்சி மேற்கொண்டது பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தி.மு.க. கவுன்சிலர் ஆஷா கூறுகையில், விருதுநகர் நகராட்சி ஒப்புதலின்படி பணியானை பெறப்பட்டு பாலம் கட்டுவதற்கு ஆய்வு பணிகள் நடந்தது. அதனை தொடர்ந்து பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டு 2 முறை திருத்தம் செய்ய வேண்டும் என கூறினர். அதனை ஏற்று திருத்தமும் செய்யப்பட்டது. ஆனால் தற்போது அதிகாரிகள் பல வடிவமைப்பு சரியில்லை என்று கூறி இடிக்க நடவடிக்கை மேற்கொள்வது ஏற்க முடியாது. பாலத்தை இடிக்க நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம் என்றார்.
- ரத்த காயங்களுடன் கிடந்த பெண் இறந்தார்.
- இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராளியை சேர்ந்தவர் கோபால். இவர் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 48). இன்று காலை இவர் வீட்டில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
வீட்டில் ரத்த காயங்களுடன் கிடந்த சரஸ்வதியை யாராவது தாக்கி கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தில் விரைவில் மாற்றங்கள் வரும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி அளித்துள்ளார்.
- இந்துக்கள் நடத்தும் பள்ளிகளில் தவறு நடந்தால் சூறையாடப்படுகிறது.
ராஜபாளையம்
ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானாவில் சென்னை மாகாண முதல்வராக இருந்த குமாரசாமி ராஜா சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
விஷ்வ இந்து பரிசத் அமைப்பின் தலைவர் சரவண கார்த்திக், மாநில துணை தலைவர் குணசீலன், மாவட்ட தலைவர் லெனின், மாவட்ட அமைப்பாளர் சிவா, அமைப்பு குழு தலைவர் பொன்னுச்சாமி, வடக்கு ஒன்றிய தலைவர் சிவசக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய சுதந்திர அமுத விழாவை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் ஜூலை-15 முதல் ஆகஸ்டு 15 வரை சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை போற்றும் வகையில் நினைவிடங்களில் மரியாதை செய்து வருகிறோம்.
முன்னாள் சென்னை மாகாண முதல்வர் பி.எஸ். குமாரசாமிராஜா பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆசிரியர்களை மிரட்டும் நோக்கத்துடன் செயல் படுபவதை கைவிட வேண்டும். இந்துக்கள் நடத்தும் பள்ளிகளில் தவறு நடந்தால் சூறையாடப்படுகிறது. கிறிஸ்தவர்கள் நடந்தும் பள்ளிகளில் தவறு நடந்தால் யாரும் கண்டு கொள்வதில்லை.
சபாநாயகர் அப்பாவு அனைத்து மதத்தினருக்கும், அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவானவர். அவர் கிறிஸ்தவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மற்ற மதத்தினரை படிப்பறிவு இல்லாதவர்கள் என கூறுவது நல்லதல்ல.
தமிழகம் முழுவதும் பா.ஜ.க., இந்து அமைப்புகள் நடத்துகிற நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி மறுப்பது, தடை விதிப்பது நல்லதல்ல. எங்களுடைய கருத்துரிமை, பேச்சுரிமையை பறிக்க கூடாது. எங்கள் மீது தடைகள் விதிப்பதை ஜனநாயக முறைப்படி எதிர்கொள்வோம். தமிழகத்தில் வெகு சீக்கிரத்தில் மாற்றங்கள் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முழு நேரம்- அஞ்சல் வழி கூட்டுறவு பட்டய பயிற்சி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
- பட்டயப் பயிற்சி பெறாத நிரந்தரப் பணியாளர்களுக்கு மட்டும் தற்போது அஞ்சல் வழி கல்வி மூலம் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார்விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022 - 23 ஆண்டிற்கு முழு நேரக் கல்வி மூலம் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதில் கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலா–ண்மை, நகை மதிப்பீடு ஆகிய தொழில்நுட்பம் சார்ந்த 3 சான்றிதழ்களுடன் கூடிய கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்குரிய மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளர்கள் குறைந்த பட்ச கல்வி தகுதியான பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் வருகிற 28-ந் தேதி வரை ரூ.100 செலுத்தி நேரில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், கூட்டுறவு நிறுவனங்களில் பணி–புரியும் இந்த பட்டயப் பயிற்சி பெறாத நிரந்தரப் பணியாளர்களுக்கு மட்டும் தற்போது அஞ்சல் வழி கல்வி மூலம் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சாத்தூர் தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், சிவசக்தி திருமண மண்டபம், எஸ்.ஆர். நாயுடு நகர், பி.ஆர்.சி.டிப்போ எதிரில், சாத்தூர் என்ற முகவரியில் தபால் மூலமாக வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி மாலை 5.30 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, 88071 59088 என்ற முதல்வரின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- இது போன்ற வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை இந்த செஸ் விளையாட்டு நமக்கு கற்றுத்தருகிறது.
விருதுநகர்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (28-ந் தேதி) முதல் 10-ந் தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கிறது.
இதையொட்டி விருதுநகர் மருத்துவக்கல்லூரி கலைய–ரங்கில் மாவட்டத்தில் பல்வேறு கட்டங்களாக நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் மேகநாத–ரெட்டி தலைமை தாங்கி செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
விழாவில் கலெக்டர் பேசுகையில், இந்த விளையாட்டில் ஒரு நகர்வில் வெற்றி பெற முடியாது. தொடர்ச்சியாக ஒவ்வொரு படியாக நகர்ந்து, தோல்விகளையும் சந்தித்து தான் வெற்றி பெற முடியும். இது போன்ற வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை இந்த செஸ் விளையாட்டு நமக்கு கற்றுத்தருகிறது.
எனவே அனைவரும் படிப்பிலும், இது போன்ற விளையாட்டுகளிலும் ஈடுபடுத்திக்கொண்டு தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார்.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி சிலம்பாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலம் ஊர்வலமாக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி வரை எடுத்து செல்லப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, சிவகாசி சார் ஆட்சியர் பிருத்திவிராஜ், கோட்டாட்சியர்கள் கல் ய ா ண குமார்(அருப்புக்கோட்டை), அனிதா(சாத்தூர்), திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) தெய்வேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்அதிரடி சோதனை நடத்தினர்.
- உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காத 10 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்ட திருவிழா வருகிற 1-ந் தேதி நடக்கிறது.
இதையொட்டி கோவில் அருகே உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் லால்வேனா உத்தரவுப்படி விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி அறிவுறுத்தலின்படி மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரசேகரன், ராஜமுத்து, ராஜேந்திரன் உட்பட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு 36 உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்தனர்.
ரோஸ்மில்க்கில் அதிக கலர் சேர்த்த 7 லிட்டர் ரோஸ் மில்க், தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர்கள் 4 கிலோ, கெட்டுப்போன முந்திரி குருனை 3 கிலோ, பேக்கிங் செய்யப்படாத, தேதி இல்லாத பால்கோவா பாக்கெட்டுகள் 15 கிலோ, தெர்மாகோல் கப் 100 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காத 10 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
- கடந்த 25-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- கோவில் பகுதியில் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த 25-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை மலைக்கு செல்ல பத்கர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் நாள் முதல் கனிசமான அளவில் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஆடி பிரதோஷத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை அடிவாரத்தில் திரண்டனர்.காலை 7 மணி முதல் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
ஆடி அமாவாசை நாளை வருவதை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு மலை ஏறினர். வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை சோதித்த பின் மலைஏற அனுமதிக்கப்பட்டனர்.
பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வேன், கார்களில் சதுரகிரி மலை அடிவாரத்திற்கு வந்து குவிந்தனர். பக்தர்களின் வருகையை முன்னிட்டு கோவில் நிர்வாகம், மடத்தின் சார்பில் மலை அடிவாரம் மற்றும் மலை மேல் கோவில் பகுதியில் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
பக்தர்கள் மலை அடிவாரத்திற்கு வரவும், அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பவும் பஸ் வசதிகளும் அரசு சார்பில் செய்யப்பட்டிருந்தன. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மலைப்பாதைகளில் மருத்தவ முகாம்கள், போலீஸ் பாதுகாப்பு போன்றவை போடப்பட்டிருந்தது.
- 3 இளம்பெண்கள் மாயமாகினர்.
- பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
விருதுநகர்
ராஜபாளையம் ஜமீன்கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் கனிசெல்வம். இவரது மனைவி தையல் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை.
தேபோல் ராஜபாளையம் அருகே உள்ள புதூரைச் சேர்ந்த முத்துக்குட்டி என்பவரது மகளும் மாயமானார். ராஜபாளையம் அழகாபுரியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் கடந்த 24-ந் தேதி குரூப்-4 தேர்வு எழுதச்சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேற்கண்ட மாயம் தொடர்பான சேத்தூர், தளவாய்புரம், கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






