கோவில் தெப்பக்குளம் பகுதியில் தர்ப்பணம் செய்ய தடை

கோவில் தெப்பக்குளம் பகுதியில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இணை இயக்குநர் செல்லத்துரையிடம் பக்தர்கள் முறையிட்டனர்.
கோவில் தெப்பக்குளம் பகுதியில் தர்ப்பணம் செய்ய தடை
Published on

விருதுநகர்

விருதுநகர் சொக்கநாதர் சுவாமி கோவில் தெப்பக்குளம் பகுதியில் ஆடி அமாவாசை நாளில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை தினம் இன்று என்பதால் ஏராளமான பக்தர்கள் சொக்கநாதர் சுவாமி கோவில் தெப்பக்குளம் பகுதியில் திரண்டனர். ஆனால் கோவில் நிர்வாகத்தினர் அங்கு தர்ப்பணம் செய்ய அனுமதி இல்லை என்று கூறிவிட்டனர்.

இதனால் பக்தர்கள் கொடுக்க முடியாமல் தவித்தனர். இதுபற்றி இணை இயக்குநர் செல்லத்துரையிடம் பக்தர்கள் முறையிட்டனர். அப்போது அவர் தர்ப்பணம் செய்பவர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து அனுமதி வழங்கினார். அதன் பின்னர் பக்தர்கள் தர்ப்பணம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com