என் மலர்
விருதுநகர்
- கர்ப்பிணி பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் விசாரணை நடத்தி இசக்கி துரைச்சி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள தேசிகாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பானுப்பிரியா (வயது 39). திருமணமான இவர் கணவ ருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் பானுப் பிரியாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான இசக்கி ராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகியதில் பானுப் பிரியா கர்ப்பமானார்.
சம்பவத்தன்று இசக்கி ராஜாவை பார்ப்பதற்காக பானுப்பிரியா அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த இசக்கி ராஜாவின் மனைவி இசக்கி துரைச்சி, உறவி னர்கள் மாரியம்மாள், ராமலட்சுமி, ஆனந்தராஜ் ஆகிய 4 பேர் பானுப்பிரி யாவிடம் தகராறு செய்து அவரை சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பானுப் பிரியா தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் விசாரணை நடத்தி இசக்கி துரைச்சி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
- கைதிகள் 2 பேரும் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டதால் போலீசார் தாக்குதல் நடத்திய கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
- தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தால் போலீசார் துப்பாக்கியால் சுட்டு மர்ம கும்பலை பிடித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
விருதுநகர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டி அபிராமி நகரை சேர்ந்தவர் யுவராஜ் என்ற யுவராஜ்குமார் (வயது29), இவரது நண்பர் குணா. இவர் விறகு வெட்டும் தொழில் செய்து வந்தார். குணாவுக்கும், சின்னதம்பி என்பவருக்கும் சம்பள பாக்கி தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சின்னதம்பி, அவரது தம்பி பரமசிவன் என்ற குட்டி ஆகியோர் கடந்த ஆண்டு குணாவை வெட்டி கொலை செய்தனர். இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 1-ந்தேதி யுவராஜ்குமார், விக்னேஷ்குமார் ஆகிய 2 பேரையும் சின்னதம்பி அவரது சகோதரர் விஜி மற்றும் ராமசந்திரன் ஆகியோர் தாக்கினர். இதற்கு பழிவாங்கும் வகையில் மார்ச் 2-ந்தேதி யுவராஜ், விக்னேஷ்குமார் மற்றும் குணா குடும்பத்தினர் சின்னதம்பியை வெட்டிக் கொலை செய்தனர்.
அப்போது ஏற்பட்ட மோதலில் யுவராஜ்குமார், விக்னேஷ்குமார் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் கடந்த 6-ந் தேதி கைது செய்யப்பட்டு விருதுநகர் மாவட்ட ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்கள் காயமடைந்து இருந்ததால் மார்ச் 22-ந் தேதி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் 4-வது தளத்தில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக திண்டுக்கல் ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் பால் செல்வம் தலைமையில் 3 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று இரவு போலீஸ்காரர்கள் சிலம்பரசன், அழகுராஜ் ஆகியோர் பணியில் இருந்தனர். இந்த நிலையில் இரவு 7 மணியளவில் திண்டுக்கலை சேர்ந்த போத்திராஜன், நாட்டு ராயன், அருண், விஜி, ராமசந்திரன், சோனையன் என்ற செல்வம் மற்றும் ஒருவர் உள்பட 7 பேர் அரிவாள், வாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் கைதிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு வந்தனர்.
அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 2 போலீசார் மற்றும் கைதிகள் மீது மிளகாய் பொடித்தூடி தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இந்த சம்பவத்தில் கைதி யுவராஜ்குமார், போலீஸ்காரர் சிலம்பரசன் ஆகியோர் காயமடைந்தனர்.
அப்போது போலீஸ்காரர் சிலம்பரசன் துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று மிரட்டியதால் தாக்குதல் நடத்திய 7 பேரும் தப்பி சென்றுவிட்டனர். இதுபற்றி விருதுநகர் கிழக்கு போலீசில் கைதி யுவராஜ்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், தாக்குதல் நடத்திய 7 பேர் மீதும் கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், டி.எஸ்.பி. அர்ச்சனா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கைதிகள் மற்றும் போலீசாரிடம் விசாரணை நடத்தினர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 7 பேர் சின்ன தம்பியின் உறவினர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் பாண்டியன்நகர் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, வச்சகாரப்பட்டி இன்ஸ்பெக்டர் ராம்தாஸ், கிருஷ்ணன் கோவில் இன்ஸ்பெக்டர் முத்துகுமார், திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் தாக்குதல் நடத்திய 7 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.
கைதிகள் 2 பேரும் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டதால் போலீசார் தாக்குதல் நடத்திய கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தால் போலீசார் துப்பாக்கியால் சுட்டு மர்ம கும்பலை பிடித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி கூறுகையில், இன்று மாலைக்குள் மர்ம கும்பலை சேர்ந்த 7 பேரை பிடித்து விடுவோம் என்று தெரிவித்தார்.
- விருதுநகர் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வடமலைகுறிச்சி இந்திராகாலனியை சேர்ந்தவர் முத்து(வயது55). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்துவின் ராஜ்குமார் ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வெல்லங்குடியை சேர்ந்தவர் நாராயணன்(28), வேன் டிரைவர். இவர் தனது வேனை பழுது நீக்கிவிட்டு மதுரையில் இருந்து ஊருக்கு திரும்பி னார். அப்போது வீரவ நல்லூரை சேர்ந்த மனோஜ்(30) உடன் சென்றார். விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர் அருகே வேன் சென்றபோது மனோஜ் திடீரென மயங்கி விழுந்தார்.அவரை உடனடியாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வச்சகாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் நாராயணன் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை மரணத்திற்கு கட்சியினர்-முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.
- இன்று மாலை நல்லடக்கம் நடக்கிறது.
சிவகாசி
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைப்பு செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை கே.தவசிலிங்க ஆசாரி (வயது93). இவர் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி யின் வீட்டில் வைக்கப் பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பல்வேறு கட்சியினர், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
- பட்டாசு தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் சிவகாசியில் நடந்தது.
- மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
பட்டாசு தயாரிக்கும் தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் சிவகாசியில் நடந்தது
குறைந்தபட்ச ஊதியச் சட்டப்பிரிவு 5-ன்படி, பட்டாசு உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலா ளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க உரிய விசார ணைகள் மேற்கொண்டு மாநில அரசுக்கு ஆலோ சனை தெரிவிக்க வேண்டும்.
இதன்படி தமிழக அரசு ஒரு ஆலோசனைக்குழுவை அமைத்து ஆணை பிறப்பித்தது. அதில் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தலைவராகவும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) செயலாளராகவும் கொண்ட மேற்கண்ட குழுவின் முதல் கருத்துக் கேட்பு கூட்டம் சிவகாசி டான்பாமா திருமண மண்டபத்தில் நடந்தது.
இதில் வேலையளிப்பவர் பிரதிநிதிகளும், தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கருத்து களை எடுத்துரைத்தனர். பின்னர் செங்கமலபட்டியில் அமைந்துள்ள விநாயகா பயர் ஒர்க்ஸ் மற்றும் சோனி பயர் ஒர்க்சில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக அங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
நாளை (19-ந் தேதி) வெம்பக்கோட்டை மற்றும் திருவேங்கடத்தில் உள்ள பட்டாசு தொழிற்சா லைகளில், பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிலாளர்களிடமும் கருத்துக் கேட்பு நடத்த மேற்கண்ட குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
அப்போது பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பான கருத்து ருக்களை வாய்மொ ழியாகவும், எழுத்து பூர்வமாகவும் வழங்கலாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
- விருதுநகரில் சிறப்பாக பணியாற்றிய வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் பரிசு வழங்கினார்.
- விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மார்ச் மாதத்திற்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான மார்ச் மாதத்திற்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பணியாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சியர்களில், சாத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசனுக்கு முதல் பரிசும், ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரனுக்கு 2-ம் பரிசும், வெம்பக்கோட்டை வட்டா ட்சியர் ரங்கநாதனுக்கு 3-ம் பரிசும்ட வழங்கப்பட்டது.
சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் தனி வட்டாட்சியர் ராம்தாசுக்கு முதல் பரிசும், சாத்தூர் தனி வட்டாட்சியர் சீதாலட்சுமிக்கு 2-ம் பரிசும், ராஜபாளையம் தனி வட்டாட்சியர் சரசுவஸ்வதிக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.
முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிக ளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சி யர்களில் திருச்சுழி மண்டல துணை வட்டாட்சியர் சரவணக்குமாருக்கு முதல் பரிசும், சாத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் ராஜா மணிக்கு 2-ம் பரிசும், காரியாபட்டி மண்டல துணை வட்டாட்சியர் அழகுப் பிள்ளைக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது. உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்களில் வெம்பக்கோட்டை வட்டத்துணை ஆய்வாளர் மாரிமுத்துவுக்கு முதல் பரிசும், விருதுநகர் வட்டத்துணை ஆய்வாளர் அரவிந்தனுக்கு 2-ம் பரிசும், சாத்தூர் வட்டத்துணை ஆய்வாளர் தங்கப்பாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத் துணை ஆய்வாளர் ராமசுப்பு ஆகியோருக்கு 3-ம் பரிசும், வழங்கப்பட்டது.
அதிக எண்ணிக்கையில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவு செய்த சிறந்த வட்ட சார் ஆய்வாளர்களில் சிவகாசி வட்ட சார்ஆய்வாளர் சுரேசுக்கு முதல் பரிசும், விருதுநகர் வட்ட குறுவட்ட அளவர் பாண்டிச்செல்விக்கு 2-ம் பரிசும், விருதுநகர் வட்ட சார் ஆய்வாளர் முத்து மாரிக்கு 3-ம் பரிசையும் கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், சிவகாசி கோட்டாட்சியர் விசுவ நாதன், சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் அரசின் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்.
- மேற்கண்ட தகவலை விருதுநகர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு 1.1.2019 முதல் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மாநிலம் முழுவதும் தடைசெய்தது. இதனைத் தொடர்ந்து
2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிபந்தனைகளுக்குட்பட்டு காலமுறைக் கடன்களுக்கு மட்டும் 50 சதவீத நிவாரணத் தொகையை அரசு அறிவித்திருந்தது.
தற்போது பல்வேறு தொழில் அதிபர்கள், சங்கத்தி னர்களின் வேண்டு கோளுக்கி ணங்க மேற்கண்ட நிவாரணத்தொகையை வழங்குதில் மேலும் சில தளர்வுகளை அளித்து மார்ச் 2023-ல் திருத்திய அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி இந்த தடைக்காலத்திற்கு முன்பு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் காலமுறைக் கடனாக பெற்றிருந்த நிலுவைத் தொகையில் 50 சதவீதத்தை அரசிடம் நிவாரணமாக பெறுவதற்கு மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டு கோள் விடுக்கப் பட்டுள்ளது.
1.1.2019 அன்றுள்ள படி நடைமுறை மூலதன கடன் தொகையிலும் நிலுவையில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை நிவாரணமாக வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. மேற்கண்ட நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடிக்கப்பட்டிருந்தால் அந்த நிறுறுவனத்தின் உரிமையாளர் பெயரில் உள்ள தனிப்பட்ட வங்கி கணக்கில் நிவாரணத்தொகையை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நிவா ரணம் வேண்டும் நிறுவனம் பங்குதாரர் நிறுவ னமாக இருந்தால் இதரப் பங்குதாரார்களின் தடை யின்மை சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் நிவாரணத் தொகையானது ரூ.50 லட்சத்திற்கு மிகாமல் அரசு வகுத்துள்ள நிபந்தனை களுக்குட்பட்டு வழங்கப்படும்.
ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்கள் தடையினால் எந்திரங்களுக்கான காலமுறைக்கடன் தொகையில் மட்டும் நிவாரணம் பெற்ற நிறுவ னங்கள் இந்த சலுகையினை பயன்படுத்தி நடைமுறை மூலதன கடன் தொகைக்கும், 50 சதவீத தொகையை நிவாரணமாக பெற்றுக்கொள்ளலாம். இந்த அரசா ணையின்படி நிவாரணத்திற்கு 14.6.2023-ந்தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையம், பொது மேலாளரை நேரிலோ அல்லது 90800 78933 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவகாசி அருகே பெண்ணை தாக்கிய கணவர், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- இதுகுறித்து மகேசுவரி எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
விருதுநகர்
சிவகாசி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மகேசுவரி(36). இவரது கணவர் சுப்பிரமணியன். இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மகேசுவரி கோபித்துக்கொண்டு சகோதரி வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் ஊர் திருவிழாவிற்கு வருமாறு உறவினர் மூலமாக சுப்பிரமணியன் அழைத்துள்ளார். மகேசுவரியும் சமாதானமாகி திருவிழாவிற்கு வந்துள்ளார். திருவிழா முடிந்த பின்னர் மீண்டும் சகோதரி வீட்டிற்கு செல்லுமாறு கூறி சுப்பிரமணியனின் தாய் ஜெயலட்சுமி மகேசுவரியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயலட்சுமியும், சுப்பிரமணியனும் சேர்ந்து மகேசுவரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகேசுவரி எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில்புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாடு ஊர்க்காவல் படை சார்பில் ஊர்க்காவல் படை விளையாட்டு போட்டிகள் நடந்தது.
- இந்த போட்டிகள் ராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
ராஜபாளையம்
தமிழ்நாடு ஊர்க்காவல் படை சார்பில் அடுத்த மாதம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி மதுரை சரக அளவிலான விளையாட்டுப் போட்டி மற்றும் பணி திறன் போட்டிகளுக்கான தேர்வு ராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மதுரை சரக துணை தளபதி ராம்குமார் ராஜா தலைமை தாங்கினார்.
இந்த போட்டி தேர்வில் விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதி அழகர்ராஜா, மதுரை மாவட்ட ஊர் காவல் படை வட்டார தளபதி ஆனந்த் வெங்கடேஷ், மதுரை மாநகர வட்டார தளபதி வெங்கடேஷ், விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார துணை தளபதி அருள் செல்வி, மதுரை மாவட்ட வட்டார துணை தளபதி இந்திராகாந்தி, மதுரை மாநகர வட்டார துணை தளபதி சகாயஜென்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டி தேர்வை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடந்தது.
- பட்டாசு விபத்து குறித்து அந்தப்பகுதி மக்கள் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
- இரவில் நடந்த விபத்து காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள எதிர்கோட்டையை சேர்ந்தவர் இமயவர்மன். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் பட்டாசு ஆலை உள்ளது. 10-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த ஆலையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று இரவு ஊழியர்கள் வேலையை முடித்துவிட்டு வழக்கம் போல் வீட்டுக்கு சென்றிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் ஆலையில் இருந்த ஒரு அறையில் பட்டாசு மூலப்பொருட்கள் திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து தீ அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவி பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கின.
பட்டாசு விபத்து குறித்து அந்தப்பகுதி மக்கள் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் வெடி விபத்து நடந்த அறை இடிந்து தரைமட்டமானது.
இரவில் நடந்த விபத்து காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பட்டாசு ஆலை ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
- இரவு வீட்டில் தனியாக படுத்திருந்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வெற்றிலை ஊரணி மேலத்தெருவை சேர்ந்தவர் காளிமுத்து(வயது 43), பட்டாசு ஆலை ஊழியர். இவர் இரவு வீட்டில் தனியாக படுத்திருந்தார். காலையில் சென்று பார்த்தபோது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுபற்றி அவரது மனைவி ஜோதி வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிமுத்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராகுல்காந்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
- ரெயில் நிலையம் நோக்கி அணிவகுத்து சென்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பைக் கண்டித்து, ராஜபாளையத்தில் போராட்டம் நடந்தது.
ரெயில் மறியல் செய்வதற்காக மாவட்ட தலைவர் ரெங்கசாமி தலைமையில், நகர தலைவரும் கவுன்சிலருமான ஆர்.சங்கர் கணேஷ் முன்னிலையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்சக்தி மோகன், கவுன்சிலர் சங்கர் கணேஷ், வழக்கறிஞர் காளிதாஸ், டைகர் சம்சுதீன், சேவாதளம் பச்சையத்தான், ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியராஜ், சாத்தூர் அய்யப்பன் வட்டார தலைவர்கள் கணேசன், லட்சுமணன், பாலகுருநாதன், கார்த்திக், கணேசன், பவுல்ராஜ், செல்வகனி, சுப்ரமணி, முருகராஜ், ஜெயக்குமார், நட்சடலிங்கம், கர்ணன், சுந்தரம், ராஜகோபால், இளைஞர் காங்கிரஸ் ராஜாராம், சாமி உள்பட சுமார் 150 பேர் ரெயில் நிலையம் நோக்கி அணிவகுத்து சென்றனர்.
ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, வடக்கு இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் மற்றும் போலீசார் ரெயில்வே பீடர் ரோடு மினிரவுண்டானாவில் அவர்களை தடுத்து நிறுத்தினர். ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திவ்யா வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தார்.






