ஊர்க்காவல் படை விளையாட்டு போட்டி

தமிழ்நாடு ஊர்க்காவல் படை சார்பில் ஊர்க்காவல் படை விளையாட்டு போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகள் ராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
ஊர்க்காவல் படை விளையாட்டு போட்டி
Published on

ராஜபாளையம்

தமிழ்நாடு ஊர்க்காவல் படை சார்பில் அடுத்த மாதம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி மதுரை சரக அளவிலான விளையாட்டுப் போட்டி மற்றும் பணி திறன் போட்டிகளுக்கான தேர்வு ராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மதுரை சரக துணை தளபதி ராம்குமார் ராஜா தலைமை தாங்கினார்.

இந்த போட்டி தேர்வில் விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதி அழகர்ராஜா, மதுரை மாவட்ட ஊர் காவல் படை வட்டார தளபதி ஆனந்த் வெங்கடேஷ், மதுரை மாநகர வட்டார தளபதி வெங்கடேஷ், விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார துணை தளபதி அருள் செல்வி, மதுரை மாவட்ட வட்டார துணை தளபதி இந்திராகாந்தி, மதுரை மாநகர வட்டார துணை தளபதி சகாயஜென்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டி தேர்வை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com