என் மலர்
விருதுநகர்
- கல்லூரி மாணவி- இளம்பெண் மாயமாகினர்.
- ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் சத்திரரெட்டியபட்டி வீட்டு வசதி குடியிருப்பை சேர்ந்த வர் சுந்தரராஜன். இவரது மகள் சுபஸ்ரீ(வயது23). முதுகலை பட்டப்படிப்பு படித்துள்ளார். இவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடு கள் செய்தனர். அப்போது தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரை காதலிப்பதாக தந்தையிடம் சுபஸ்ரீ கூறியுள்ளார்.
அதற்கு அவரை பற்றி விசாரித்து பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என தந்தை கூறியுள்ளார். இந்த நிலையில் வீட்டில் இருந்த சுபஸ்ரீ மாயமானார். எங்கு சென்றார் என தெரிய வில்லை. இதை தொடர்ந்து பாண்டியன்நகர் மகளை கண்டுபிடித்து தருமாறு போலீஸ் நிலையத்தில் சுந்ததராஜன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெம்பக்கோட்டை அருகே உள்ள இ.மீனாட்சி புரத்தை சேர்்ந்த நடராஜ். இவரது மகள் அங்காளஈஸ்வரி(19). காக்கிவாடன்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து வெம்பக்கோட்டை ேபாலீஸ் நிலையத்தில் நடராஜ் புகார் செய்தார். ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
- அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா தினம் கொண்டாட்டப்பட்டது.
- கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி மதனகோபால் செய்திருந்தார்.
சிவகாசி
சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் நந்தகுமார் யோகா பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது ''யோகா என்றால் அலைபாயும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் ெசயல்'' உடல் மற்றும் மனதை ஒரு சமநிலைக்கு கொண்டு வர யோகா உதவுகிறது. படிப்பில் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு தினமும் யோகா செய்வது நல்லது என்றார்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் விளையாட்டுத்துறை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட அலகு, மாணவர் சேவை அலகு ஆகிய பிரிவைச்சேர்ந்த அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்து பயன்பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி மதனகோபால் செய்திருந்தார்.
- மோட்டார் சைக்கிளில் வைத்த ரூ.83 ஆயிரம் திருடப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளக்கோட்டையை சேர்ந்தவர் சரவணன்(வயது43). இவர் அங்குள்ள வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூ.80 ஆயிரம் எடுத்தார். மேலும் கையில் ரூ.3 ஆயிரம் வைத்திருந்தார். பணத்தை பையில் வைத்து மோட்டார் சைக்கிளில் வைத்தார்.
பின்னர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், அவரது மகன் படிக்கும் பள்ளியில் இருந்தும் பேசுவதாகவும், மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் உடனடியாக பள்ளிக்கு வருமாறும் கூறியுள்ளார். அதிர்ச்சி யடைந்த சரவணன் பள்ளிக்கு சென்றார்.
மோட்டார் சைக்கிளை பள்ளியின் வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பையை காணவில்லை. யாேரா மர்ம நபர்கள் நோட்டமிட்டு திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அருப்புக்கோட்ைட மேஜித்ரேட் கோர்ட்டில் சரவணன் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்லூரி மாணவி-வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர்.
- ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சாத்தூர் அருகே உள்ள ஏ.ராமலிங்காபுரத்தை சேர்ந்தவர் சமுத்திரகனி. இவரது மகள் ராஜேஸ்வரி(19). விருதுநகரில் உள்ள நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு சில மாதங்களாக உடல்நல பாதிப்பு இருந்து வந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகாமல் இருந்ததால் ராஜேஸ்வரி விரக்தியில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாணவியின் தாய் சமுத்திரகி அம்மாபட்டி போலீசில் புகார் செய்தார். ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சக்திகுளம் காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு குடிபழக்கம் இருந்தது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவம் பார்த்தும் குணமாகாததால் அவர் விரக்தியில் இருந்தார்.
இந்த நிலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மனைவி காளியம்மாள் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தில் இதுவரை பா.ஜ.க. ஆட்சி அமையவில்லை.
- அண்ணாமலை ஒரு நேர்மையான அதிகாரி.
அருப்புக்கோட்டை :
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசினார். முன்னதாக சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு 500 மதுக்கடைகளை மட்டும் மூடுவதாக அறிவித்து இருக்கிறது. இதனால் எந்தப் பயனும் இல்லை. அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.
தமிழகத்தில் இதுவரை பா.ஜ.க. ஆட்சி அமையவில்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி உள்ளது. அங்கு ஊழல் இல்லை என கூற முடியாது. ஆனால் அண்ணாமலை ஒரு நேர்மையான அதிகாரி. அதிகாரத்துக்கு வந்த பிறகு நேர்மையாக இருப்பதுதான் சாதனை.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக கூறுவதால் எந்த கட்சிக்கும் பாதிப்பு வராது. வரும் காலங்களில் ஆண்ட கட்சியும், ஆளுகிற கட்சியும் பணம் கொடுக்காமல் வாக்குகள் வாங்க முடியாது என்ற நிலை உள்ளது. மாற்றத்தை எதிர்நோக்குபவர்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள்.
செந்தில் பாலாஜி மீதான விசாரணை வரவேற்கத்தக்கது. இருந்தாலும் இது காலம் கடந்த செயல். ஒரு அரசியல் நெருக்கடி மற்றும் பழிவாங்கும் செயலாகத்தான் இதனை பார்க்க முடிகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க இவ்வளவு காலம் எங்கே சென்றார்கள்?
செந்தில் பாலாஜியின் விஷயத்தில் அவரை காக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்கிறாரா? என்பது பின்னர்தான் தெரியவரும். மொத்தத்தில், இது அனைவரையும் காப்பாற்றிக் கொள்ளும் நடவடிக்கையாகத்தான் தெரிகிறது.
இவ்வாறு சீமான் கூறினார்.
- விருதுநகர் வாலிபர் கொலையில் ரவுடி கைது செய்யப்பட்டார்.
- 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர்
விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் ராம லட்சுமி. இவரது மகன் முத்துப்பாண்டி (வயது 17). டிரம்ஸ் இசைக்கலைஞரான இவர் மதுரை யில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்கான கூலி வாங்குவதில் முத்துப் பாண்டிக்கும், அதே பகுதியை சேர்ந்த அஜித்குமா ருக்கும் பிரச்சினை ஏற்பட் டது.
இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் 2 பேரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து அஜித்குமார், முத்துப்பா ண்டியை கொலை செய்ய திட்டமிட்ட தாக தெரிகிறது.
இதற்காக சம்பவத்தன்று இரவு முத்துப்பாண்டியை வீட்டில் இருந்து வெளியே அஜித்குமார் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின் முத்துப்பாண்டி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதற்கிடையில் அங்கு உள்ள ஜக்கம்மாள் கோவில் பின்புறம் முத்துப்பாண்டி காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தியதில், அஜித்கு மார், அவரது நண்பர்கள் செல்வம் என்ற விஜய், தனுஷ் உள்பட 4 பேர் முத்துப்பா ண்டியை கொலை செய்தது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையில் அதே பகுதியில் பதுங்கி இருந்த அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது விருதுநகர் போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்கு கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறக்கப்பட்டது.
- தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சி மேட்டுப்பட்டி 15-வது வார்டு வண்ணார் புதுத் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், சேத்தூர் பேரூராட்சியில் அனைத்து தெருக்களிலும் பேவர் பிளாக் சாலை வசதி செய்து தரப்படும். முக்கிய இடங்க ளில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்படும். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வழங்க நீர்தேக்க தொட்டி கட்டப்படும் என்றார்.
மேலும் சேத்தூர் பேரூ ராட்சிக்கு சாஸ்தா கோவில் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என எம்.எல்.ஏ. கூறினார்.
ெதாடர்ந்து அன்னதா னத்தை அவர் தொடங்கி வைத்தார். இதில் சேத்தூர் பேரூராட்சி சேர்மன் பால சுப்பிரமணியன், செயல் அலுவலர் சந்திரகலா,தி.மு.க செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர் மன் காளீஸ்வரி மாரிச் செல்வம், ஒன்றிய துணை செயலாளர் குமார், கவுன் சிலர் ராஜசோழன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மைக்செட்காரர் மீது தாக்குதல் நடந்தது.
- வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
வத்திராயிருப்பு அருகே உள்ள மாத்தூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் கணேசன்(வயது26). மைக்செட் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் அங்கு பொங்கல் திருவிழா நடந்தது. இதற்காக கருப்புசாமி கோவில் அருகே கணேசன் அம்மன் டவர் அமைத்தார். ஆனால் இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக தாசில்தார் தலைமையில் சமரச கூட்டம் நடந்தது. அதில் சமரசம் ஏற்படாததால் அந்த இடத்தை இரு தரப்பினரும் பயன்படுத்த தாசில்தார் தடை விதித்தார். இதைத்தொடர்ந்து அம்மன் டவரை அகற்றும் பணிகளில் கணேசன் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர் தரப்பை சேர்ந்த கருப்பன், செந்தூர், சுந்தர் மற்றும் சிலர் அங்கு வந்து கணேசனுடன் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் அகற்றப்பட்டது.
- பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பயணிகள் நிழற்கூடத்தை சுத்தம் செய்த ஊழியர்கள்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் பயணி கள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடத்தில் இருந்து மதுரை, ராமேசுவரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இந்த பஸ் நிலையத்தில் இருந்து செல்வது வழக்கம். இந்த நிழற்கூடத்தை மூதாட்டி ஒருவர் தனது வீடு போல் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தார்.
அவர் அந்த நிழற்கூடத்தில் பஸ் பயணிகள் யாரையும் அமர விடாமலும், அவதூறாக பேசியும் வந்துள்ளார். மேலும் அந்த மூதாட்டி நரிக்குடியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மதுபான பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை பஸ் நிலையம் அருகிலேயே மலை போல் குவித்து வைத்திருந்தார்.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசியது. இதனால் பயணிகள் நிழற்கூடத்தின் அருகில் குவித்து வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றவேண்டும் என்று பஸ் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான செய்தி 'மாலைமலர்' நாளிதழில் வெளிவந்தது.
இதையடுத்து நரிக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துமாரி காளீஸ்வரன் உத்தரவின் பேரில் நரிக்குடி ஊராட்சி செயலர் கவிதா மேற்பார்வையில் ஊராட்சி ஊழியர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். பஸ் நிறுத்தத்தின் அருகில் மலைபோல் குவிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாட்டில்களையும் அங்கிருந்து அகற்றினர்.
பின்னர் பஸ் நிறுத்தத்தில் இருந்த ஆக்கிரமிப்பையும் அகற்றி சுத்தப்படுத்தினர். இதனால் பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
- மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
- வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 46). இவர் தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். அதிகாலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் எரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுந்தரமூர்த்தி மற்றும் அங்கிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். யாரோ மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் சுந்தரமூர்த்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தனியார் ஊழியர் பலியானார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அய்யனார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 29). இவர் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு பணிக்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். சாய்பாபா கோவில் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றபோது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சரவணன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சரவணன் மனைவி கற்பகவல்லி ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
- மாணவர் ஹேமபிரகாஷ் நன்றி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர், பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி குழுமத்தலைவர் குமரேசன், மேனேஜிங் டிரஸ்டி சித்ரா குமரேசன், துணைத் தலைவர் அரவிந்த், மேனே ஜிங் டிரஸ்டி மோனிஷா ஆகியோர் தலைமையில் பள்ளி முதல்வர் செந்தில்குமார், துணை முதல்வர் அனுசியா, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது.
மாணவி ஐஸ்வர்யா வரவேற்று பேசினார். தினந்தோறும் காலை அல்லது மாலையில் யோகா செய்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று பள்ளி முதல்வர் எடுத்து ரைத்தார். முடிவில் மாண வர் ஹேமபிரகாஷ் நன்றி கூறினார்.






