என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mikesetkar"

    • மைக்செட்காரர் மீது தாக்குதல் நடந்தது.
    • வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள மாத்தூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் கணேசன்(வயது26). மைக்செட் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் அங்கு பொங்கல் திருவிழா நடந்தது. இதற்காக கருப்புசாமி கோவில் அருகே கணேசன் அம்மன் டவர் அமைத்தார். ஆனால் இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக தாசில்தார் தலைமையில் சமரச கூட்டம் நடந்தது. அதில் சமரசம் ஏற்படாததால் அந்த இடத்தை இரு தரப்பினரும் பயன்படுத்த தாசில்தார் தடை விதித்தார். இதைத்தொடர்ந்து அம்மன் டவரை அகற்றும் பணிகளில் கணேசன் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது எதிர் தரப்பை சேர்ந்த கருப்பன், செந்தூர், சுந்தர் மற்றும் சிலர் அங்கு வந்து கணேசனுடன் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×