என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • ஜெயச்சந்திரன் கரடிப்பாக்கத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணி செய்தார்.
    • சிகிச்சை பலனின்றி இன்று காலை 10 மணியளவில் இறந்து போனார்.

    விழுப்புரம்: 

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தென்மங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 50). கரடிப்பாக்கத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணி செய்தார். இவர், இவரது உறவினர் ரவிச்சந்திரன் (49) என்பவருடன் விழுப்புரம் சென்று, நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது தேசிய நெடுஞ்சாலையை கடந்து தென்மங்கலத்திற்கு செல்ல சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். அப்போது உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது.

    இதில் ஜெயச்சந்திரன், ரவிச்சந்திரன் மற்றும் சிவக்குமார் (30), அவரது மனைவி ஆனந்தி (25) ஆகியோர் படுகாயமடைந்து முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜெயச்சந்திரன் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை 10 மணியளவில் இறந்து போனார். இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜய் என்ற அனாமிக்கா தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார்.
    • தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் என்ற ஊரை சேர்ந்த பூபதி என்பவரது மகன் விஜய் என்ற அனாமிக்கா (வயது 22). திருநங்கை. இவர் பிடாகத்தில் இருந்து செஞ்சிக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். அவர் சிட்டாம்பூண்டி அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அனாமிகா வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அனாமிகா தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த செஞ்சியை சேர்ந்த விஜயதாஸ் என்பவரது மகன் பாலாஜி (23), காதர் என்ப வரது மகன் சானவாஸ் (23) ஆகியோர் காயங்களுடன் செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர்.

    இந்த விபத்து குறித்து அனந்தபுரம் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.செஞ்சியை அடுத்த ஊரணித் தாங்கள் என்ற ஊரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 32). இவர் தனது வீட்டில் இருந்து கடைவீதிக்கு சென்றார். அப்போது சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து செஞ்சி போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • விபத்தில் அப்பளம் போல நொறுங்கிய காரில் பலத்த காயங்களுடன் தந்தை, தாய், மகன் என 3 பேரும் சிக்கி தவித்தனர்.
    • மகன் சிவராமகிருஷ்ணன் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    வானூர்:

    சென்னை மேற்கு மாம்பலம் சுப்பையா நகரை சேர்ந்தவர் ஸ்ரீவர்ஷன் (வயது 58). உயர்நீதிமன்றத்தில் உதவி அலுவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி லலிதா (55), மகன் சிவராமகிருஷ்ணன் (23) ஆகியோருடன் நேற்று இரவு மயிலாடுதுறையில் உள்ள கோவிலுக்கு செல்ல காரில் புறப்பட்டார். கிழக்கு கடற்கரை சாலையில் வந்த இந்த காரை சிவராமகிருஷ்ணன் ஓட்டி வந்தார்.

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகேயுள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் கார் வந்தபோது, அடையாளம் தெரியாத நபர் திடீரென சாலையை கடக்க முயற்சித்தார். அவர் மீது மோதாமல் இருக்க சிவராமகிருஷ்ணன் காரினை திருப்பினார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகிலிருந்த மரத்தின் மோதி விபத்துக்குள்ளானது.

    விபத்தில் அப்பளம் போல நொறுங்கிய காரில் பலத்த காயங்களுடன் தந்தை, தாய், மகன் என 3 பேரும் சிக்கி தவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கோட்டக்குப்பம் போலீசார், அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் 3 பேரையும் மீட்டனர். புதுவை மாநிலம் கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதில் சிகிச்சை பலனின்றி உயர்நீதிமன்ற உதவி அலுவலர் ஸ்ரீவர்ஷன், அவரது மனைவி லலிதா இருவரும் இறந்தனர். இவர்களது மகன் சிவராமகிருஷ்ணன் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் நேற்று திரும்பி வந்து கொண்டிருந்தார்.
    • ஸ்கூட்டரில் இருந்து அவர் நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தார்.

    விழுப்–பு–ரம்:

    விழுப்–பு–ரம் மாவட்–டம் வானூர் தாலுகா நல்–லா–வூர் கிரா–மத்தைசேர்ந்–த–வர் லோக–நா–தன் (வயது 42). அவ–ரது மனைவி தேவி (38). இவர் கிளி–ய–னூ–ருக்கு சென்று வீட்–டுக்கு மோட்டார் சைக்கிளில் நேற்று திரும்பி வந்து கொண்–டி–ருந்–தார்.

    கிளி–ய–னூர் ஏரிக்–கரை சாலை–யில் வந்–தபோது எதிர்–பா–ராத வித–மாக ஸ்கூட்–டரில் இருந்து அவர் நிலைத–டு–மாறி தவறி கீழே விழுந்–தார். இதில் அவருக்கு மூச்–சுத்தி–ண–றல் ஏற்–பட்டு சம்–பவ இடத்–தி–லேயே பரி–தா–ப–மாக இறந்–தார்.

    இது–கு–றித்து தக–வல் அறிந்–த–தும் சம்–பவ இடத்–திற்கு விரைந்து சென்ற கிளியனூர் போலீ–சார் அவ–ரது உடலை கைப்–பற்றி பிரேத பரி–சோதனைக்–காக புதுச்–சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்து வக்கல்லூரி ஆஸ்–பத்–தி–ரிக்கு அனுப்பி வைத்த–னர்.

    • போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
    • கலெக்டர் பழனி தலைமையில் கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    விழுப்புரம்:

    சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். அதையொட்டி விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கலெக்டர் பழனி தலைமையில் கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    அப்போது போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், எம்.எல்.ஏ.க்கள் புகழந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், கோட்டாட்சியர் பிரவீனா குமாரி, தாசில்தார் வேல்முருகன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கல்லூரி முதல்வர் சிவகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • தமிழக அரசு, என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பழைய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது.

    விழுப்புரம்:

    தமிழக அரசு, என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பழைய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளரும், மாநில விசாரணைக்குழு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வெங்கடேசன், மாநில இளைஞரணி செயலாளர் நல்லதம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்தது.
    • ஆடிப்பட்டதுக்கு நெல் நாற்று நடுவதாக நினைத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதங்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மாலை குளிர்ந்த காற்று வீசி இரவு நேரங்களில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இரவு முழுவதும் பெய்தது. மழை பெய்யும் பொழுது விழுப்புரம் மாவட்ட புதிய பஸ் நிலையத்தில் தண்ணீர் அதிகளவில் தேங்கும். ஆனால் தற்போது நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய பஸ் நிலையம், கீழ்பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போடப்பட்ட வடிகால் வாய்க்கால் மூலம் மழைநீர் தேங்காத வண்ணம் உள்ளது.

    இதனால் புதிய பஸ் நிலையத்தில் அதிக அளவில் மழை பெய்தாலும் மழைநீர் பஸ் நிலையத்தை சூழ்ந்து கொள்ள முடியாது. நேற்று விழுப்புரத்தில் பெய்த மழை பெரும்பாக்கம், தோகைபாடி, நன்னாரு, காணை, சாலமேடு, வழுதரெட்டி, அரசூர், சாலை அகரம், கோலியனூர், வளவனூர், நன்நாட்டாம்பாளையம், வழுதரெட்டிபாளையம், அய்யம்கோவில்பட்டு, முண்டியம்பாக்கம், அய்யூர்அகரம், சிந்தாமணி உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் மழை பெய்தது. மேலும் நேற்று ஆடிக்கிருத்திகை யொட்டி பெய்த மழையால் ஆடிப்பட்டதுக்கு நெல் நாற்று நடுவதாக நினைத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக இருந்த விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்தது.
    • நீரில் மூழ்கி திருமலை பரிதாபமாக இறந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே மேல்செவலாம்பாடி பகுதியை சேர்ந்தவர் சீனுவாசன் மகன் திருமலை (வயது 45)விவசாயி.நேற்று மாலை மேல்செவலாம்பாடியில் இருந்து எயில் பகுதியை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக இருந்த விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்தது. பின்னர் நீரில் மூழ்கி திருமலை பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து மேல்மலையனூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

    தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய சிறப்பு அதிகாரி பரஞ்சோதி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 2 மணி நேரம் போராடி கிணற்றில் விழுந்து இறந்து கிடந்த திருமலை உடலை மீட்டு அவலூர்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்த னர். அவலூர்பேட்டை போலீசார் திருமலை உடலை பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பால், தயிர், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
    • பக்தர்கள் அந்த மஞ்சளை எடுத்துச் சென்று கட்டி வைப்பதால் சகல பாக்கியமும் உண்டாகும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் மலையடி வாரத்தில் பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மஞ்சள் இடுப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டுக்கான மஞ்சள் இடிப்பு திருவிழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மகா காளியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து நேற்று காலை 8 மணி அளவில் சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து மகாகாளியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. மாலை 4.30 மணி அளவில் அக்னி தீர்த குளக்கரையில் கரகம் ஜோடிக்கப்பட்டு உடுக்கை அடித்து காளியம்மனை அழைத்து சென்று மல்லாக்காக படுக்க வைத்து மார்பின்மீது உறல் வைத்து அதில் மஞ்சளை கொட்டி மயிலம்குரு மகா சன்னிதானம் குமாரசிவ விஸ்வநாதன் மற்றும் பக்தர்கள் சேர்ந்து மஞ்சளை இடித்து இடிக்கப்பட்ட மஞ்சளை பக்தர்கள் மீது வாரி இறைத்தனர்.

    பக்தர்கள் அந்த மஞ்சளை எடுத்துச் சென்று வீடு மற்றும் வியாபார தலங்களில் கட்டி வைப்பதால் சகல பாக்கியமும் உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாத வர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம் என்பதால் அந்த கோவில் அருகில் பக்தர்கள் முண்டி மோதிக் கொண்டு அந்த மஞ்சளை எடுத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் மயிலம் மற்றும் அதை சுற்றியுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மயிலம் பொம்மபுர ஆதினம்20-ம் பட்டம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் குமாரசிவ விஸ்வநாதன் முன்னிலையில் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். 

    • சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
    • ஜாமீனில் வெளியில் வரும் அவர், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷச் சாராயம் குடித்து 15 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

    மரக்காணம் பாலகிருஷ்ணா தெருவில் வசிக்கும் விஜயகுமார் (வயது 23) தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பதும், ஜாமீனில் வெளியில் வரும் அவர், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், விஜயகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு பரிந்துரைத்தார். கலெக்டரின் உத்தரவின் பேரில் மரக்காணம் போலீசார் விஜயகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • லாரிகளில் கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
    • ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் செம்மண்ணை எடுத்து லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமம் உள்ளது. இங்கு அதிகளவில் செம்மண் மற்றும் கிராவல் மண் கிடைக்கும். இதனை ஒரு சிலர் லாரிகளில் கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்த திருட்டு சம்பவங்கள் இரவு நேரங்களில் மட்டுமே நடைபெறுகிறது. இந்நிலையில் நடுக்குப்பத்திலிருந்து ஆலத்தூருக்கு செல்லும் வழியில் நேற்று இரவு ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் செம்மண்ணை எடுத்து லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த விவசாயி ஒருவர் இது குறித்து கிராம மக்களிடம் கூறினார்.

    உடனடியாக 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனைக் கண்ட செம்மண் கொள்ளையர்கள் வாகனங்களை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். இது தொடர்பாக கிராம மக்கள் வருவாய் துறையினருக்கும், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். செம்மண் மற்றும் கிராவல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி. எந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் குருமூர்த்தி அளித்த புகாரின் பேரில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்?, இந்த வாகனங்களின் உரிமையாளர் யார்? என்பது குறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
    • ஆண்களுக்கு 8சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ரூ.2 கோடியும் மற்றும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ரூ.2 கோடி அளவிலும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பல்வேறு கடன்கள் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி, ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்க சிறப்பு லோன் மேளாக்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கியின் கிளைகளான விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கி, விழுப்புரத்தில் 17-ந் தேதியும், திண்டிவனம் கூட்டுறவு நகர வங்கி,திண்டிவனத்தில் 18-ந் தேதியும், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி,வானூரில்22-ந் தேதியும், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, விக்கிரவாண்டியில் 24-ந் தேதியும், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி,மரக்காணத்தில்25-ந் தேதியும், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி செஞ்சியில் 29-ந் தேதியும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடை பெறும். திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது. மகளிருக்கான சுய உதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு தலா ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.கடன் விண்ணப்பங்களானது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கியின் கிளைகளிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலும் கிடைக்கும். முகாமில் கலந்து கொள்ள வரும் முன்பே விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து எடுத்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் , திட்ட அறிக்கை, ஒட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும். எனவே,விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் (கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) இச்சிறப்பு லோன் மேளாக்களில் கலந்து கொண்டு கடன் உதவி பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×