search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் மாவட்டத்தில்  இரவு முழுவதும் பெய்த மழை
    X

    விழுப்புரம் மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த மழை

    • கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்தது.
    • ஆடிப்பட்டதுக்கு நெல் நாற்று நடுவதாக நினைத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதங்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மாலை குளிர்ந்த காற்று வீசி இரவு நேரங்களில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இரவு முழுவதும் பெய்தது. மழை பெய்யும் பொழுது விழுப்புரம் மாவட்ட புதிய பஸ் நிலையத்தில் தண்ணீர் அதிகளவில் தேங்கும். ஆனால் தற்போது நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய பஸ் நிலையம், கீழ்பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போடப்பட்ட வடிகால் வாய்க்கால் மூலம் மழைநீர் தேங்காத வண்ணம் உள்ளது.

    இதனால் புதிய பஸ் நிலையத்தில் அதிக அளவில் மழை பெய்தாலும் மழைநீர் பஸ் நிலையத்தை சூழ்ந்து கொள்ள முடியாது. நேற்று விழுப்புரத்தில் பெய்த மழை பெரும்பாக்கம், தோகைபாடி, நன்னாரு, காணை, சாலமேடு, வழுதரெட்டி, அரசூர், சாலை அகரம், கோலியனூர், வளவனூர், நன்நாட்டாம்பாளையம், வழுதரெட்டிபாளையம், அய்யம்கோவில்பட்டு, முண்டியம்பாக்கம், அய்யூர்அகரம், சிந்தாமணி உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் மழை பெய்தது. மேலும் நேற்று ஆடிக்கிருத்திகை யொட்டி பெய்த மழையால் ஆடிப்பட்டதுக்கு நெல் நாற்று நடுவதாக நினைத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×