என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

செஞ்சி அருகே விபத்தில் திருநங்கை உள்பட 2 பேர் பலி

- விஜய் என்ற அனாமிக்கா தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார்.
- தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் என்ற ஊரை சேர்ந்த பூபதி என்பவரது மகன் விஜய் என்ற அனாமிக்கா (வயது 22). திருநங்கை. இவர் பிடாகத்தில் இருந்து செஞ்சிக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். அவர் சிட்டாம்பூண்டி அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அனாமிகா வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அனாமிகா தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த செஞ்சியை சேர்ந்த விஜயதாஸ் என்பவரது மகன் பாலாஜி (23), காதர் என்ப வரது மகன் சானவாஸ் (23) ஆகியோர் காயங்களுடன் செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த விபத்து குறித்து அனந்தபுரம் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.செஞ்சியை அடுத்த ஊரணித் தாங்கள் என்ற ஊரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 32). இவர் தனது வீட்டில் இருந்து கடைவீதிக்கு சென்றார். அப்போது சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து செஞ்சி போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.