திருவெண்ணைநல்லூர் அருகே சாலை விபத்தில் கிராம உதவியாளர் பலி

ஜெயச்சந்திரன் கரடிப்பாக்கத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணி செய்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை 10 மணியளவில் இறந்து போனார்.
திருவெண்ணைநல்லூர் அருகே சாலை விபத்தில் கிராம உதவியாளர் பலி
Published on

விழுப்புரம்: 

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தென்மங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 50). கரடிப்பாக்கத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணி செய்தார். இவர், இவரது உறவினர் ரவிச்சந்திரன் (49) என்பவருடன் விழுப்புரம் சென்று, நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது தேசிய நெடுஞ்சாலையை கடந்து தென்மங்கலத்திற்கு செல்ல சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். அப்போது உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது.

இதில் ஜெயச்சந்திரன், ரவிச்சந்திரன் மற்றும் சிவக்குமார் (30), அவரது மனைவி ஆனந்தி (25) ஆகியோர் படுகாயமடைந்து முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜெயச்சந்திரன் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை 10 மணியளவில் இறந்து போனார். இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com