என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • காலை உணவின் சுவை மற்றும் தரத்தினை மாவட்ட கலெக்டர் பழனி, ஆய்வு செய்தார்.
    • ஊரகப்பகுதிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் காலை உணவு திட்டம்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியம், ஆயந்தூர் ஊராட்சியில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கும் பொருட்டு, முன்னோட்டமாக தயாரிக்க ப்பட்ட காலை உணவின் சுவை மற்றும் தரத்தினை மாவட்ட கலெக்டர் பழனி, ஆய்வு செய்தார். அவர் பேசியதாவது, 

    காலை உணவு திட்டம், அறிவித்து, முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் தொடக்கி வைத்து, செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது, 2-ம் கட்டமாக அனைத்து ஊரகப்பகுதிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு திட்டம் ஆகஸ்ட் 25-ந்தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. மேலும், மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் உள்ள 988 பள்ளிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 32 பள்ளிகள் என மொத்தம் 1020 பள்ளிகளில் முன்னோட்டமாக காலை உணவு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் உணவினை உண்டு சுவை மற்றும் தரத்தினை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார்.

    • முதுநிலை வருவாய் ஆய்வாளர்களும் பதவி உயர்வு பெற்றனர்
    • உத்–த–ரவை மாவட்ட கலெக்–டர் சி.பழனி பிறப்–பித்–துள்–ளார்.

    விழுப்–பு–ரம்:

    விழுப்–பு–ரம் மாவட்–டம் மேல்–ம–லை–ய–னூர் தேர்தல் பிரிவு துணை தாசில்–தா–ராக பணி–யாற்றி வந்த தன–லட்–சுமி பதவி உயர்வு பெற்று செஞ்சி ஆதி–தி–ரா–வி–ட–நல தனி தாசில்–தா–ராக நிய–ம–னம் செய்–யப்–பட்–டார். அதேபோன்று, திரு–வெண்–ணைநல்–லூர் தலைமை–யி–டத்து துணை தாசில்–தார் செந்தில்–கு–மார் பதவி உயர்வு பெற்று விழுப்–பு–ரம் ஆதி–தி–ரா–விட நல தனி தாசில்–தா–ரா–க–வும், மேல்–ம–லை–ய–னூர் தலை–மை–யி–டத்து துணை தாசில்–தார் துரைச்–செல்–வன் பதவி உயர்வு பெற்று செஞ்சி சமூக பாது–காப்பு திட்ட தனி தாசில்–தா–ரா–க–வும் நிய–ம–னம் செய்–யப்–பட்–டுள்–ளார்–கள்.

    மேலும், மரக்–கா–ணம் தலை–மை–யி–டத்து துணை தாசில்–தார் ஏழு–மலை பதவி உயர்வு பெற்று மரக்–கா–ணம் தேசிய நெடுஞ்–சாலை நில–எ–டுப்பு தனி தாசில்–தா–ரா–க–வும், மேல்– ம–லை–ய–னூர் வட்ட வழங்–கல் அலு–வ–லர் கிருஷ்–ண–தாஸ் திண்–டி–வ–னம் முத்–தி–ரைத்–தாள் தனி தாசில்–தா–ரா–க–வும் நிய–ம–னம் செய்–யப்–பட்–டுள்–ள–னர். இதேபோல் மாவட்ட கலெக்டர் அலு–வ–லக தலைமை உத–வி–யா–ளர் கனி–மொழி, திரு–வெண்–ணைநல்–லூர் தேர்–தல் துணை தாசில்–தார் வித்–யா–த–ரன், விக்–கி–ர–வாண்டி மண்–டல துணை தாசில்–தார் யுவ–ராஜ், செஞ்சி வட்ட வழங்–கல் அலு–வ–லர் வெங்–க–டேசன், திண்–டி–வ–னம் மண்–டல துணை தாசில்–தார் ராஜ–சேகர், கண்–டாச்–சி–பு–ரம் தேர்தல் பிரிவு துணை தாசில்–தார் ரமேஷ் இவர்–கள் உள்–பட மொத்–தம் 20 பேர் பதவி உயர்வு பெற்று மாவட்டத்–திற்–குள் வெவ்–வேறு இடங்–க–ளுக்கு நிய–மிக்–கப்–பட்–டுள்–ளார்–கள்.

    மேலும் முது–நிலை வரு–வாய் ஆய்–வா–ளர்–க–ளாக பணி– யாற்றி வந்த மலர்–விழி, சித்–தார்த்–தன், ஆறு–மு–கம், கணேசன், அக்–தர்–ஜெகன், வேல்–மு–ரு–கன், சொர்–ணாம்–பிகை உள்–ளிட்ட 19 பேர் துணை தாசில்–தா–ராக பதவி உயர்வு பெற்று மாவட்–டத்–தில் வெவ்–வேறு இடங்–களில் பணி நிய–ம–னம் செய்–யப்பட்–டுள்–ள–னர். இதற்–கான உத்–த–ரவை மாவட்ட கலெக்–டர் சி.பழனி பிறப்–பித்–துள்–ளார்.

    • அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டார்.
    • சந்தனக்கூடு நிகழ்ச்சியில் சிலம்பாட்டம் ஆடி அமைச்சர் செஞ்சி மஸ்தான் அனைவரையும் மகிழ்வித்தார்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நரசிங்கராயன் பேட்டையில் உள்ள ஹசரத் சையத்பாபா தர்காவின் 26-ம் ஆண்டு சந்தன குடம் மற்றும் உருஸ்முபாரக் திருவிழா நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டார். பின்னர் சந்தனக்கூடு நிகழ்ச்சியில் சிலம்பாட்டம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தார்.

    இதனை தொடர்ந்து அனைவருக்கும் பொது விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பொது விருந்தினை தொடங்கி வைத்தார்.

    இதில் செஞ்சி ஒன்றிய தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், நகர செயலாளர் கார்திக், ஊராட்சி மன்ற தலைவர் பிலால், முன்னாள் ஊராட்சி மன்ற தலை வர்கள் காசியம்மாள் ஏழுமலை, ஏழுமலை, பாலகிருஷ்ணன், கவுன் சிலர் ஜான்பாஷா, நிர்வாகிகள் ஜே.எஸ். சார்தார், தொண்டரணி பாஷா உள்ளிட்ட உரூஸ் கமிட்டியினர் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
    • கடந்த மாதம் 19-ந்தேதி ஸ்ரீமதியின் தாய் செல்வியிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

    விழுப்புரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதனை தொடர்ந்து வன்முறை வெடித்தது. பள்ளி பஸ்கள் சேதப்படுத்தப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    கடந்த மாதம் 19-ந்தேதி ஸ்ரீமதியின் தாய் செல்வியிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. அதனை படித்து பார்க்க அவகாசம் வேண்டும் என ஸ்ரீமதியின் தாய் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அந்த வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார். அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஸ்ரீமதியின் தாய் சார்பில் ஐகோர்ட்டு வக்கீல் கஜேந்திரன், விழுப்புரம் வக்கீல்கள் லூசியா, கேசவன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள், மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணையை சிறப்பு புலனாய்வு ஓய்வுபெற்ற நீதிபதி நடத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். மேலும் குற்றப்பத்திரிகை தொடர்பாக சில ஆவணங்களை சரி பார்க்க வேண்டி உள்ளது. எனவே, விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

    இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 20-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.

    • விழுப்புர மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் குவிந்தனர்.
    • எதிர்ப்பு தெரிவித்து விண்ணை பிளக்கும் வண்ணம் கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

    விழுப்புரம்:

    மத்திய அரசு தாக்கல் செய்த புதிய சட்ட மசோதாக்களை திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் 31-ம் தேதி வரை நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி இன்று காலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள விழுப்புர மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் குவிந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் குற்றவியல் வக்கீல்கள், சங்கத் தலைவர் காளிதாஸ் தலைமையில் பார் அசோசியன் தலைவர் தயானந்தம், விழுப்புரம் லாயர் அசோசியேஷன் செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர். 100-க்கு மேற்பட்ட வக்கீல்கள் மத்திய அரசின் புதிய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விண்ணை பிளக்கும் வண்ணம் கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மூத்த வக்கீல்கள் மாரிமுத்து, ஜெயபிரகாஷ், தன்ராஜ், தமிழரசன், முகில்வண்ணன், பிரின்ஸ், சோமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அறிந்த விழுப்புரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக உள்ளது.

    • 43 ஆயிரம் வாகனங்கள் டோல் பிளா சாவை கடந்து சென்றது.
    • மாலை 4 மணி முதல் வாகனங்கள் பிளாசாவை கடக்க அணிவகுத்து நிற்க ஆரம்பித்தன.

    விழுப்புரம்:

    சென்னை தலைநகரில் இருந்து மதுரை அ.தி.மு.க. மாநாடு மற்றும் விடு முறையை கழிக்க நேற்று முன்தினம் தென் மாவட்ட த்தை நோக்கி 43 ஆயிரம் வாகனங்கள் டோல் பிளா சாவை கடந்து சென்றது. நேற்று மதுரை மாநாடு ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது பிற்பகல் முதல் சென்னை நோக்கி வாகனங்கள் திரும்ப ஆரம்பித்தன.இதனால் விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் மாலை 4 மணி முதல் வாகனங்கள் பிளாசாவை கடக்க அணிவகுத்து நிற்க ஆரம்பித்தன.தொடர்ந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் அதிகரித்துக் கொண்டிருந்ததால் டோல் பிளாசா வில் கூடுதலாக 9 லைன்களை திறந்து வாகனங்களை அனுப்பி வைத்தனர். நேற்று இரவு வரை 39 ஆயிரம்வாகனங்கள் சென்னை திரும்பி சென்றது.

    • பிரகலாதன் சென்னையில் அரசு மருத்துவராக பணி யாற்றி வருகிறார்.
    • சிறு காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தப்பினர்.

    விழுப்புரம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரகலாதன் (வயது 45). சென்னையில் அரசு மருத்துவராக பணி யாற்றி வருகிறார். இவர் சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அடுத்த சாரம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் வரும்போது பின்னால் வந்த லாரி கார் மீது மோதியது. இதில் கார் தலைக்குப்புற கவிழந்தது. விபத்தில் அரசு மருத்துவர் பிரகலாதன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தப்பினர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டி வனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியை தேடி வந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூர் பகுதியை சேர்ந்த வர் கமலஹாசன். இவர் தனது மோட்டார் சைக்கி ளை வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காணாமல் போன மோட்டார் சைக்கிளை கமலஹாசன் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் இவரது வீட்டின் அருகே பக்கத்து வீட்டில் உள்ள பழனி கமலஹாசன் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றதாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூறினர். இதுகுறித்து கமலஹாசன் ரோஷனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியை தேடி வந்தனர்.

    இந்நிலையில் பட்டணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரோசனை போலீசார் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பழனியை மடக்கி விசாரித்தபோது முன்விரோத தகராறு காரணமாக கமலஹாசனின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார். உடனே அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் பழனி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பலராமன் மனைவி மற்றும் குடும்பத்தார் நேற்று இரவே விக்கிரவாண்டிக்கு சென்று விட்டனர்.
    • அவர், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சித்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பலராமன் (வயது 73). விவசாயி. இவரது உறவினரின் புதிய வீட்டின் புதுமனை புகுவிழா முண்டியம்பாக்கத்தில் இன்று நடக்கிறது. இதற்காக பலராமன் மனைவி மற்றும் குடும்பத்தார் நேற்று இரவே விக்கிரவாண்டிக்கு சென்று விட்டனர்.இந்நிலையில் விவசாயி பலராமன் இன்று அதிகாலை முண்டியம்பாக்கத்திற்கு புறப்பட்டார். பஸ் ஏறி விழுப்புரத்திற்கு வந்தார். அங்கிருந்து பஸ் மூலம் முண்டியம்பாக்கம் வந்த அவர், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சித்தார்.

    அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் பலராமன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பலராமன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இது குறித்த புகாரின் பேரில் விரைந்து சென்ற விக்கிரவாண்டி போலீசார், விவசாயி பலராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற விவசாயி சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கரும்பு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று செம்மேடு சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது.
    • இச்சம்பவம் குறித்து அவலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே கரடிக்குப்பம் கிராமத்திலிருந்து நேற்று மாலை கரும்பு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று செம்மேடு சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. அவலூர்பேட்டை செல்லியம்மன் கோவில் அருகில் சென்ற போது எதிர்பாரதவிதமாக சாலை ஓரம் இருந்த சிமெண்ட் மின்கம்பத்தில் மோதியது. இதனால் மின்கம்பம் முறிந்தது.இதுகுறித்து தகவலறிந்த மின்சார துறையினர் விரைந்து செயல்பட்டு மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் பெரும் மின் விபத்து தடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து அவலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோர்கள், கல்வி யாளர்கள், சமூகச் செயற்பா ட்டாளர்கள் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.
    • இந்த உண்ணா விரதப் போராட்டம் இன்று மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.

    விழுப்புரம்:

    நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தி.மு.க. சார்பில் விழுப்புரத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் இன்று காலை தொடங்கிய உண்ணாவிரதப் போராட்ட த்திற்கு அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். அமைச்சர் செஞ்சி மஸ்தான், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர். இதில் விழுப்புரம் மாவட்ட மாணவ, மாணவி கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூகச் செயற்பா ட்டாளர்கள் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.

    உண்ணாவிரதத்தில் விழுப்புரம் மாவட்ட பொரு ளாளர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை, நகர சபை தலைவர் தமிழ்செல்வி பிரபு, கோலியனூர் யூனியன் சேர்மன் சச்சி தானந்தம், ஒன்றிய செயலாளர்கள் தெய்வ சிகாமணி, மும்மூர்த்தி, முருகவேல், திருக்கோவிலூர் தங்கம், முன்னாள் எம்.எல்.ஏ சேதுநாதன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தினகரன், துணை அமைப் பாளர் பிரேம், மாவட்ட தொண்டர்படை அமைப்பா ளர் கபாலி, மாவட்ட மாண வரனி அமைப்பாளர் வினோத், மாவட்ட மருத்து வரணி செயலாளர் டாக்டர் செந்தில், மாவட்ட வர்த்தக அணி சங்கர், இலக்கிய அணி வல்லப்ப ராசு, நகர இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன், துணை அமைப்பாளர் சோமு ஆகியோர் உள்பட ஏராள மானோர் பங்கேற்றுள்ளனர். இந்த உண்ணா விரதப் போராட்டம் இன்று மாலை 5 மணிவரை நடைபெற வுள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் சென்ற பாஸ்கர், பிரகாஷ் ஆகிய இருவரும் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள்.
    • விபத்துக்குள்ளான கார் பக்கத்திலிருந்த பள்ளத்தில் இறங்கியதால் காரில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    செஞ்சி:

    புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 30), பிரகாஷ் (31). இருவரும் நண்பர்கள். சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்தனர். இவர்களுடன் பணிபுரிபவருக்கு இன்று காலை செஞ்சியை அடுத்த பாக்கம் கிராமத்தில் திருமணம் நடைபெற்றது.

    இதில் பங்கேற்க நேற்று நள்ளிரவு பாஸ்கரும், பிரகாசும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து செஞ்சி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் செஞ்சியை அடுத்த பெருங்காப்பூர் காப்புக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பாஸ்கர், பிரகாஷ் ஆகிய இருவரும் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள். விபத்துக்குள்ளான கார் பக்கத்திலிருந்த பள்ளத்தில் இறங்கியதால் காரில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த செஞ்சி போலீசார், பலியான 2 வாலிபர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×