என் மலர்
நீங்கள் தேடியது "மோதல்"
- போக்குவரத்து பாதிப்பால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
- ஊட்டியில் இருந்து கோவை நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்தது.
ஊட்டி,
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
பஸ்சில் சுரேஷ் என்பவர் டிரைவராகவும், மனோகரன் என்பவா் நடத்துநராக பணியில் இருந்தனர்.
ஊட்டியில் இருந்து கோவை நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்தது. இந்த லாரியை மணிகண்டன் என்பவா் ஓட்டி வந்தார்.
குன்னூா்-பா்லியாறு அருகே பஸ் சென்றபோது, டிப்பா் லாரியும், அரசு பஸ்சும் நேருக்குநோ் மோதிக்கொண்டன. இதில் யாருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
பஸ்சும், லாரியும் மோதிக்கொண்டதால், அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாா், வாகனங்களை அப்புற ப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா்.
இதையடுத்து, அணிவகுத்து நின்ற வாகனங்கள் சுமாா் 1 மணி நேரம் கழித்து புறப்பட்டு சென்றன. இந்த சம்பவம் குறித்து குன்னூா் போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
- இருவரும் வேலை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
- மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மன்னார் சுவாமி கோவில் பகுதியை சேர்ந்தவர் பாபு (35) டிங்கராக பணிபுரிந்து வருகிறார். இவரும் இவரது நண்பர் கிடங்கல் இரண்டு பகுதியைச் சேர்ந்த நீதி ராஜன் ஆகிய இருவரும் வேலை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எம். ஆர். எஸ். கேட் டே நைட் ஹோட்டல் அருகே வரு ம்போது அதே மார்க்கமாக வேகமாக வந்த இரு சக்கர வாகனம் இவர்கள் மீது மோதி விபத்துக்கு ள்ளானது. இந்த விபத்தில் பாபு சம்பவ இடத்திலேயே பலத்த காயங்கள் அடைந்து உயிரிழந்தார். அவருடன் வந்த நீதிராஜன் படுகாய ங்களுடன் திண்டிவனம் அரசு பொது மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்னொரு இருசக்கர வாகனத்தில் வந்த திண்டிவனம் தனியார் சட்டக் கல்லூரியில் பயிலும் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த இறை தேசிகன் (20)மற்றும் தென்காசி பகுதிைய சேர்ந்த பிரவீன் குமார் ஆகியோர் படுங்காய ங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக இந்த 3பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதே திசையில் முன்னால் ஜல்லி ஏற்றிக் கொண்டு சென்ற லாரி மீது கோழி ஏற்றி சென்ற சரக்கு வேன் மோதியது.
- இடிபாடுகளில் சிக்கி சரக்கு வேனை ஓட்டி சென்ற டிரைவர் பிரதீபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள வல்லம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காவல் நகர் அருகே வைத்தீஸ்வரன் கோயில், வடபாதி எடகுடியை சேர்ந்த ஜெயராமன் என்பவரது மகன் பிரதீபன் (வயது 29) என்பவர் சரக்கு வேனில் கோழிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே திசையில் முன்னால் ஜல்லி ஏற்றிக் கொண்டு சென்ற லாரி மீது கோழி ஏற்றி சென்ற சரக்கு வேன் பலமாக மோதியது.
இதில் சரக்கு வேன் முன்பக்கம் நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கி சரக்கு வேனை ஓட்டி சென்ற டிரைவர் பிரதீபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பிரதீபனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வல்லம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






