லாரி மீது சரக்கு வேன் மோதல்- டிரைவர் பலி

அதே திசையில் முன்னால் ஜல்லி ஏற்றிக் கொண்டு சென்ற லாரி மீது கோழி ஏற்றி சென்ற சரக்கு வேன் மோதியது.இடிபாடுகளில் சிக்கி சரக்கு வேனை ஓட்டி சென்ற‌ டிரைவர் பிரதீபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
சேதமடைந்த சரக்கு வேன் மற்றும் விபத்தில் பலியான பிரதீபன்.
சேதமடைந்த சரக்கு வேன் மற்றும் விபத்தில் பலியான பிரதீபன்.
Published on

வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள வல்லம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காவல் நகர் அருகே வைத்தீஸ்வரன் கோயில், வடபாதி எடகுடியை சேர்ந்த ஜெயராமன் என்பவரது மகன் பிரதீபன் (வயது 29) என்பவர் சரக்கு வேனில் கோழிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே திசையில் முன்னால் ஜல்லி ஏற்றிக் கொண்டு சென்ற லாரி மீது கோழி ஏற்றி சென்ற சரக்கு வேன் பலமாக மோதியது.

இதில் சரக்கு வேன் முன்பக்கம் நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கி சரக்கு வேனை ஓட்டி சென்ற‌ டிரைவர் பிரதீபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பிரதீபனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வல்லம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com