என் மலர்
விழுப்புரம்
- இருவரும் வேலை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
- மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மன்னார் சுவாமி கோவில் பகுதியை சேர்ந்தவர் பாபு (35) டிங்கராக பணிபுரிந்து வருகிறார். இவரும் இவரது நண்பர் கிடங்கல் இரண்டு பகுதியைச் சேர்ந்த நீதி ராஜன் ஆகிய இருவரும் வேலை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எம். ஆர். எஸ். கேட் டே நைட் ஹோட்டல் அருகே வரு ம்போது அதே மார்க்கமாக வேகமாக வந்த இரு சக்கர வாகனம் இவர்கள் மீது மோதி விபத்துக்கு ள்ளானது. இந்த விபத்தில் பாபு சம்பவ இடத்திலேயே பலத்த காயங்கள் அடைந்து உயிரிழந்தார். அவருடன் வந்த நீதிராஜன் படுகாய ங்களுடன் திண்டிவனம் அரசு பொது மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்னொரு இருசக்கர வாகனத்தில் வந்த திண்டிவனம் தனியார் சட்டக் கல்லூரியில் பயிலும் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த இறை தேசிகன் (20)மற்றும் தென்காசி பகுதிைய சேர்ந்த பிரவீன் குமார் ஆகியோர் படுங்காய ங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக இந்த 3பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.
- லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கோப்புகளில் முக்கியமான ஆதாரங்கள் ஏதேனும் சிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து குற்றம் சாட்டி வந்தனர்.
மேலும் சார்பதிவாளர் அலுவலகத்தின் அருகே இ.சேவை மையம் வைத்து நடத்தி வரும் பால மணிகண்டன் என்பவர் சார் பதிவாளர் அலுவலகத்தின் புரோகராக பணியாற்றி பொதுமக்களிடம் லஞ்சப் பணத்தை அவ்வப்போது வாங்கி கொடுத்து வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் சென்று பணியில் இருந்தவர்களை அலுவலகத்திற்குள் அமர வைத்து விட்டு அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 3.60 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் சார் பதிவாளர் சங்கீதா மற்றும் புரோக்கர் பால மணிகண்டன் உள்ளிட்ட சார் பதிவு அலுவலக ஊழியர்களிடம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை நள்ளிரவு வரையில் நடைபெற்றது. சோதனைக்கு பின்பு சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து முக்கிய கோப்புகளுடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்கள்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கோப்புகளில் முக்கியமான ஆதாரங்கள் ஏதேனும் சிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அந்த மயிலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்
- பிள்ளைகளின் மாற்று சான்றிதழை வாங்க பள்ளி வளாகத்திற்கு வந்தனர்.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு படிக்கும் மாண வர்களுக்கு ஆசிரியர்கள் முறையாக பாடம் கற்பிக்கவில்லை. இதனால் மாணவர்கள் பள்ளி நேரத்திலேயே வெளியில் வந்து விளையாடுகின்றனர் என கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறினர்.
ஆனால், பள்ளி நிர்வாகம் இதனை கண்டு கொள்ளா மல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற் றோர்கள் தங்களது பிள்ளைகளின் மாற்று சான்றிதழை வாங்க பள்ளி வளாகத்திற்கு வந்தனர். இது பற்றி தகவல் அறிந்த பள்ளியின் கல்வி மேலாண்மை குழு நிர்வாகி கள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களின் பெற் றோர்கள் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் நாங்கள் மாணவர்களுக்கு முறையாக தான் பாடம் சொல்லிக் கொடுக்கிறோம், எங்கள் மீது என்ன தவறு உள்ளது என்றார். அப்போது அங்கிருந்த மாணவர்களின் பெற்றோர்கள் எங்கள் பிள்ளைகள் முறையாக படிக்க வேண்டும் என்றால் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் முறையாக பாடம் கற்பிக்காத ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லை என்றால் எங்கள் பிள்ளைகளின் மாற்று சான்றிதழை கொடுங்கள். நாங்கள் வேறு பள்ளியில் சேர்த்து விடுகிறோம் என கோரிக்கை வைத்தனர்.
இதனைக் கேட்ட பள்ளியின் மேலாண்மை குழு நிர்வாகிகள், இதுகுறித்து சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த மாண வர்களின் பெற்றோர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இச்சம்ப வத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- இருட்டில் நிலை தடுமாறிய சின்னமணி தவறி விழுந்து ஏரி நீரில் மூழ்கியுள்ளார்.
- ஏரி நீரில் தவறி விழுந்திருக்கலாம் என கருதி, நேற்றிரவு முதல் இன்று காலை வரை தீவிரமாக தேடினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கெடார் அடுத்த வீரமூர் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி மகன் சின்னமணி (வயது 32), சென்னையில் பூ கட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது. இந்நிலையில் நேற்று இரவு நண்பர்களுடன் அதே ஊரில் உள்ள பெரிய ஏரிக்கு சென்றார். அப்போது இரவு இருட்டில் நிலை தடுமாறிய சின்னமணி தவறி விழுந்து ஏரி நீரில் மூழ்கியுள்ளார்.
அவருடன் வந்த நண்பர்கள் சிறிது நேரம் கழித்து உடன் வந்த சின்னமணியை காணவில்லை என தேடினர். இத்தகவல் உறவினர்களுக்கு தெரிந்து அவர்களும் ஏரி பகுதிக்கு வந்து தேடினர். அவர் கிடைக்காததால் இதுகுறித்து கெடார் போலிசாருக்கும். அன்னியூர்தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். கெடார் போலிசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காணாமல் போனவர் ஏரி நீரில் தவறி விழுந்திருக்கலாம் என கருதி, நேற்றிரவு முதல் இன்று காலை வரை தீவிரமாக தேடினர்.
இதில் ஏரி நீரில் மூழ்கி இறந்து கடந்த சின்னமணியின் உடலை இன்று காலை 8 மணியளவில் தீயணைப்பு துறையினர் கைப்பற்றினர். அதனை கைப்பற்றிய கெடார் போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- துரை நேரு வீதியில் உள்ள ஒரு வங்கியில் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக வந்தார்.
- மொபைல் எண்ணிற்கு இருபதாயிரம் பணம் எடுத்ததற்காக குறுஞ்செய்தி வந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பெலாகுப்பம் பகுதியை சேர்ந்த துரை (வயது 70). இவர் திண்டிவனம் நேரு வீதியில் உள்ள ஒரு வங்கியில் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக வந்தார். அவருக்கு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கத் தெரியாததால் அருகே இருந்த டிப்டாப் நபர் ஒருவரை தனது ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுத்து தர தெரிவித்துள்ளார். இதன் பெயரில் அந்த மர்ம நபர் ஏ.டி.எம்.மில் பணம் இல்லை என கூறி உள்ளார். இந்த நிலையில் துரை அருகே இருக்கும் வேறு ஒரு வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்றார். இந்த நிலையில் அவரது மொபைல் எண்ணிற்கு இருபதாயிரம் பணம் எடுத்ததற்காக குறுஞ்செய்தி வந்தது.
அந்த செய்தியை அரசு வங்கியில் காண்பித்த போது அதில் 20 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து விட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். துரை வைத்திருந்த ஏ.டி.எம். வேறு வங்கி ஏ.டி.எம். என அதிகாரிகள் தெரிவித்தனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த துரை திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பஸ் இயக்க த்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
விழுப்புரம்:
வார இறுதி நாளினை முன்னிட்டு, வருகிற 26-ந் தேதி அன்று மக்கள் அவரவர் சென்னையில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பஸ்களை ஏற்பாடு செய்திடவும்,பஸ் இயக்க த்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
- அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பூங்காவினை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.
- உமா மகேஸ்வரி சுகுமார், பத்மாவதி திருசங்கு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின்கீழ், ரூ.30.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்காவை திறந்து வைத்து, 48 பயனாளிகளுக்கு ரூ.80.23 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பூங்காவினை திறந்து பொதுமக்கள் பயன்பா ட்டிற்கு ஒப்படைத்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தின் சார்பில், தலா ரூ.2.10 லட்சம் மானியம் வீதம், 38 நபர்களுக்கு ரூ.79.30 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை மற்றும் தனி நபர் கழிவறை அமைக்கும் திட்டத்தின்கீழ், தலா ரூ.9,300 வீதம் 10 நபர்களுக்கு ரூ.93 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவறை கட்டுவதற்கான ஆணை என மொத்தம் 48 பயனாளிகளுக்கு ரூ.80.23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
இதில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், வளவனூர் பேரூராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ஜீவா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரிய செயற்பொறியாளர் குமாரதுரை, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அசோக், செயல் அலுவலர் (பொ) ஷேக் லத்திப், கவுன்சிலர்கள் மகாலட்சுமி செந்தில், சசிகலா கபரியேல், சந்திர பாண்டியன், வடிவேல், யுவராஜா, ஆரிஸ், பாஸ்கரன், சிவசங்கரி அன்பரசு, கந்தன், பார்த்திபன், கீதா செந்தில், உமா மகேஸ்வரி சுகுமார், பத்மாவதி திருசங்கு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- பொதுமக்கள் அறநிலையத் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- பூந்தோட்டம் பகுதிக்கு அ.தி.மு.க.வினர் குவிந்தனர்
விழுப்புரம்:
திண்டிவனம் அடுத்த தீர்த்தக்குளம் பூந்தோட்டம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தம் எனக் கூறப்படுகிறது. அதே சமயம் அங்கு வசிக்கும் மக்கள் தங்களுக்கு சொந்தம் என கூறிவருகின்றனர். இந்நிலையில் இங்கு குடியிருப்பவர்களில் 15 பேர் அறநிலையத் துறைக்கு வாடகை செலுத்தவில்லை என நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 15 வீடுகளை காலி செய்ய அறநிலையத் துறை அதிகாரிகள் 100-க்கும் மேற்பட்ட போலீசாருடன் இன்று பூந்தோட்டத்திற்கு வந்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்து அறநிலையத் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த அர்ஜூனன் எம்.எல்.ஏ., அறநிலையத் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். மேலும், அறநிலையத் துறைக்கு இந்த இடம் சொந்தம் என்றால் அதற்குரிய ஆவணத்தை காட்டுமாறு கேட்டு அதிகாரிகளை தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து பூந்தோட்டம் பகுதிக்கு அ.தி.மு.க.வினர் குவிந்தனர். அனைவரும் அறநிலையத் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அர்ஜூனன் எம்.எல்.ஏ. மற்றும் அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
- அமுதவல்லி அதே பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
- அங்கிருந்து புதுவை ஜிப்மர் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் .
விழுப்புரம்:
மரக்காணம் அருகே உள்ள காட்டு கொள்ளை செய்யாங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணு. கூலித் தொழிலாளி. இவரது மனைவி அமுதவல்லி (வயது 55) இவர் நேற்று மதியம்அதே பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அந்த கிராமத்தில் ஒரே ஒரு ரேஷன் கடை மட்டுமே உள்ளது இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது இதன் காரணமாக அமுதவல்லி கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் வரிசையில் நின்று ள்ளார். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது .
இது பற்றி தகவல் அறிந்த அவரது மகன் ஆனந்த் தனது தாயை ரேஷன் கடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மயக்கம் அதிகமானதால் அமுதவல்லி மோட்டார் சைக்களில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரது உறவினர்கள் அவரை புதுவை கனக செட்டி குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை அளித்து ள்ளனர். அங்கிருந்து புதுவை ஜிப்மர் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு சிகிச்சை பலனின்றி அமுதவல்லி பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடித்துவிட்டு வந்து வீட்டில் சண்டை போட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.
- சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் பாரத் (வயது 37). இவருக்கு திருமணம் நடைபெறவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில் அவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் சண்டை போட்டு வந்ததாகவும் கூறப்பட்டது. இன்று திடீரென திருமணம் ஆகாத விரக்தியால் பாரத் திடீரென வீட்டிலிருந்த மண்எண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள செய்ய முயன்று ள்ளார். பின்னர் படுங்காயம் அடைந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி த்தனர். திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.முண்டியம்பாக்கம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இது குறித்து ரோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகாத விரக்தியால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விருதுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை யும், பாராட்டு பத்திரமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
- பெண்க ளாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்.
விழுப்புரம்:
ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி பயில உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீர தீர செயல் புரிந்த 5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி 24) "தேசிய பெண் குழந்தை விருது" வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருதுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை யும், பாராட்டு பத்திரமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ் நாட்டை பிறப்பிட மாகவும், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்ட பெண் குழந்தையாக இருக்க வேண்டும். இவ்விருத்திற்கு தகுதிக ளான கீழ்கண்டவற்றில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான-தனித்துவமான செய்திருத்தல், சாதனை பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகிய வற்றிற்கு தீர்வு காண்ப தற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூல மாகவோ விழிப்பு ணர்வை எற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்ப தை போன்ற செயல்களை பெண்க ளாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்.
விருதுக்கான விண்ணப் பங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலு வலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உட்பட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன்மொழி களுடன் மாவட்ட சமூகநல அலு வலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன் சமூகநல ஆணையரகத்துக்கு பரிசீ லனைக்கு அனுப்பி வைக்க ப்படும். மாவட்டங்களி லிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவில் தேர்வுகுழு மூலம் பரிசீலனை செய்யப்ப ட்டு அனைத்து தகுதிகள் பெற்ற பெண் குழந்தை தேர்வு செய்யப்பட்டு வரும் ஜனவரி 24-ந் தேதி மாநில விருது வழங்கப்படும்.
இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் செயல்படும் அறை எண்.26 மாவட்ட சமூக நல அலு வலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்பிக்க இறுதி நாள் 20.11.2023 ஆகும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப் படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட கலெக்டர் டாக்டர் பழனி தெரி வித்துள்ளார்.
- அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., லோகநாதன் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- அமைச்சர் பொன்முடியின் மகன் பொன்.கவுதமசிகாமணி இன்று ஆஜராகவில்லை.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூந்துறையில் செம்மண் குவாரி உள்ளது. இந்த குவாரியில் இருந்து அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., லோகநாதன் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி மற்றும் 5 பேர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே இறந்து விட்டார். அமைச்சர் பொன்முடியின் மகன் பொன்.கவுதமசிகாமணி இன்று ஆஜராகவில்லை. அவர் ஆஜராகாததற்காக காரணத்தை அவரது வக்கீல்கள் மனுவாக தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூரணி அம்மாள் விசாரணை நடத்தி வருகிறார்.






