search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்
    X

    விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியபோது எடுத்தபடம்.

    செஞ்சி தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்

    • பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து க்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு ஆலோசனை கூட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர் தலைமை தாங்கினார். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் வரவேற்றார். நிகழ்ச்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலா ளரும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். கூட்டத்தில் இஸ்ரோ திட்ட இயக்கு னராக செயலாற்றி இந்திய நாட்டிற்கும், தமிழ்நாட்டி ற்கும் பெருமை சேர்த்த நமது விழுப்புரம் மாவட்டம் வீரமுத்து வேலுக்கு பாராட்டு களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தும், உலக செஸ் விளையாட்டு போட்டியில் 2-வது இடத்தில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இளம் வயது வீரர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து க்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செந்தமி ழ்ச்செல்வன், மாசிலாமணி, சேதுநாதன், சீதாபதி சொக்கலிங்கம், மாநில தீர்மானகுழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், பொதக்குழு உறுப்பினர் மணிவண்ணன், ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், அண்ணாதுரை, துரை, இளம்வழுதி, மணிமாறன், திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், செஞ்சி ஒன்றிய குழு துணை தலைவர் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

    Next Story
    ×