துணிக்கடையில் வேலை செய்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்த வாலிபர் சிறையில் அடைப்பு

நட்பு காதலாக மாறியது. 21 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறிய சதீஷ்குமார்.உல்லாசமாக இருந்தது மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
துணிக்கடையில் வேலை செய்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்த வாலிபர்  சிறையில் அடைப்பு
Published on

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 24). சேல்ஸ்மேன் வேலை செய்து வருகிறார். இவர் புதுவையில் உள்ள துணிக்கடையில் வேலை செய்தார். அப்போது அதே கடையில் பணியாற்றிய புதுவையை சேர்ந்த 21 வயது பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறி, நட்பு காதலாக மாறியது. 21 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறிய சதீஷ்குமார், அவருடன் தனிமையில் உல்லாசமாக பலமுறை இருந்துள்ளார். சில நாட்கள் கழித்து அந்த பெண்ணை பார்ப்பதையும், பேசுவதையும் சதீஷ்குமார் நிறுத்திக் கொண்டார்.

அதிர்ச்சியடைந்த இளம்பெண், தன்னை திருமணம் செய்து கொள்ள சதீஷ்குமாரிடம் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து துணிக்கடைக்கு வேலைக்கு செல்வதையே சதீஷ்குமார் நிறுத்திவிட்டார். மேலும், அதிர்ச்சியடைந்த இளம்பெண், சதீஷ்குமாரை தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால், அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று வந்தார். தனக்கு நடந்த விஷயங்களை புகார் மனுவாக போலீசாரிடம் கொடுத்தார். அதில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை ஏமாற்றிய சதீஷ்குமாருடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

புகாரைப் பெற்ற போலீசார், மரக்காணம் சதீஷ்குமாரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அவர் புகார் கொடுத்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை. மேலும், அவருடன் பழகவே இல்லை என்றும் கூறினார். இதையடுத்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார், இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணுடன், சதீஷ்குமார் பலமுறை உல்லாசமாக இருந்தது மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அரசு காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com