பனையூர் ஊராட்சியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம்200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.
பனையூர் ஊராட்சியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
பனையூர் ஊராட்சியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஊராட்சி ஓன்றியம், பனையூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், திருக்கோவில்களில் நிலையான மாத சம்பளம் இன்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித்தொகை ரூ.4,000 மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், "மக்களை தேடி மருத்துவம்", "இல்லம் தேடிக் கல்வித்திட்டம்", "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்", "புதுமைப்பெண் திட்டம்", "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டம், இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், இலங்கை தமிழர்களுக்கான நலத்தி ட்டங்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான திட்டங்கள், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கனமழை மற்றும் வெள்ள மீட்பு பணி ஆய்வு புகைப்படங்கள் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இதனை பனையூர் ஊராட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com