என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • முரளி தாசை சந்திக்க பாபு தனது நண்பரை அழைத்துக் கொண்டு அச்சரம்பட்டு கிராமத்திற்கு சென்றார்.
    • இன்று அதிகாலை 4 மணியளவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள அச்சரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முரளிதாஸ் (வயது 32). இவருக்கும் பிரம்மதேசம் அடுத்த பழமுக்கலை சேர்ந்த பாபுவிற்கும் (38) இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது வந்தது. முரளி தாசை சந்திக்க பாபு தனது நண்பரை அழைத்துக் கொண்டு அச்சரம்பட்டு கிராமத்திற்கு சென்றார். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், முரளிதாசை பாபு கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முரளிதாஸ் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய பாபுவை தேடி வந்தனர்.

    பாபுவுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற புதுவை மாநிலம் கோரிமேடு பகுதியை சேர்ந்த ஜெகனை ஆரோவில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னை விரைந்தனர். அங்கு உறவினர் வீட்டில் மறைந்திருந்த பாபுவை இன்று அதிகாலை 4 மணியளவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை ஆரோவில் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார் என போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    • இம்மாவட்டத்திற்கு ரூ.1.55 கோடி விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை விழுப்புரம் கலெக்டர் பழனி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு விழு ப்புரம் மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடு ரூ.1.50 கோடி முழுமையாக எட்டப்பட்டது. நடப்பாண்டு இம்மாவட்டத்திற்கு ரூ.1.55 கோடி விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த குறியீட்டை முழுமையாக எய்திட வேண்டும். காதி கிராப்டில் இவ்வாண்டும் சிறப்பு விற்பனையாக கதர் பாலியஸ்டர் மற்றும் பட்டு ஆகிய ரகங்களுகு்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களும், பொதுமக்களும் கதர் ஆடைகளை வாங்கி கிராம நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக காந்தியடிகளின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு கலெக்டர் பழனி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொ) கலைமாமணி, கதர் ஆய்வாளர் ஜெயகுமார், விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன் மற்றும் கதர் கிராமத் தொழில் வாரிய ஊழியர்கள் உடனிருந்தனர்.

    • ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் சுடுகாடு அமைத்து பயன்படுத்தி வருகின்றனர்.
    • சொந்தமான நிலத்தைக் கூட ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பதாக தெரிய வருகின்றது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கத்தில் 500 -க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஒரு பகுதியினர் ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் சுடுகாடு அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்ற இந்த சுடுகாட்டுக்கு முறையான பாதை வசதி இல்லாத நிலையில் அருகில் உள்ள பட்டா நிலத்தின் வழியை பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் மேல் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாத வண்ணம் தடுப்புகள் அமைத்தும் ,செல்லும் வழியில் பள்ளங்கள் தோண்டியும் நிலத்தின் உரிமையாளர் இடையூறு செய்து வருவதாக தெரிய வருகின்றது .

    இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்த நிலையில் 3 முறை சமாதான கூட்டம் திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றும் இதுவரையில் சுடுகாட்டுக்கு செல்லுகின்ற பாதையை துறை சார்ந்த அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனவும்,ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தைக் கூட ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பதாக தெரிய வருகின்றது. இந்நிலையில் கருவம்பாக்கம் கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அலுவலகத்தில் விசை தெளிப்பான், தார் பாய் உள்ளிட்ட வேளாண் பொருட்களை வாங்கி வைத்திருந்தார்.
    • அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே கோட்டப்பூண்டி கிராமத்தில் நெல் உற்பத்தியாளர் குழு அலுவலகம் உள்ளது. இக்குழுவின் தலைவராக செக்கடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா இருந்து வருகிறார்.

    இந்த அலுவலகத்தில் விசை தெளிப்பான், தார் பாய் உள்ளிட்ட வேளாண் பொருட்களை வாங்கி வைத்திருந்தார். சம்பவத்தன்று மர்ம நபர்கள் இந்த அலுவலகத்தின் பூட்டை உடைத்து அதிலிருந்த வேளாண் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு 20 ஆயிரம் ரூபாய் எனக்கூறப்படுகிறது.இது குறித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதை அதிகமாகி தலைக்கேறியதால் நாராயணசாமி 5 பேரிடம் தகராறில் ஈடுபட்டார்.
    • மற்ற 4 பேருடன் சேர்ந்து ரெயில் நிலையத்தில் இருந்தவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகேயுள்ள கண்டம்பாக்கத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், இவர் மீது புகார் கொடுப்பவர்களை மிரட்டி வாபஸ் பெறச் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். எப்போது ம்மதுபோதை யில் கத்தியுடன் வலம் வரும் நாராயணசாமி, நேற்று கண்டம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு சென்றார். அங்கு படுத்து உறங்கி கொண்டிருந்த 5 பேரை எழுப்பினார். போதை அதிகமாகி தலைக்கேறியதால் நாராயணசாமி 5 பேரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது நாட்டு வெடிகுண்டை எடுத்து 5 பேர் மீது வீசினார். பலத்த சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பரணிதரன் (வயது 22) படுகாயமடைந்தார். மற்ற 4 பேருடன் சேர்ந்து ரெயில் நிலையத்தில் இருந்தவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.

    நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி நாராய ணசாமி அங்கிருந்து தப்பி யோடிவிட்டார். சிறிது நேரம் கழித்து ரெயில் நிலையத்திற்குள் பீதியில் வந்த பயணிகள் ஒரு சிலர் படுகாயமடைந்த பரணிதரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ரெயில் நிலைய த்திற்கு விரைந்து வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்ற போலீசார், அங்கு பரணிதரனிடம் விசாரணை நடத்தினர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பிரபல ரவுடி நாராயண சாமியுடன் தொடர்பில் இருந்த கூட்டாளிகள் 3 பேரை நேற்று இரவு மடக்கி பிடித்தனர். அவர்களை விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையம் அழைத்து வந்து நாராயணசாமி பதுங்கியுள்ள இடம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நாட்டு வெடிகுண்டு வீசி தப்பியோடிய பிரபல ரவுடி நாராயணசாமியை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். சமீபகாலமாக விழுப்புரம் நகரப் பகுதியில் ரவுடிகளின் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    • தேவராசு திருக்கனூரில் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார்.
    • அதிலிருந்த 8 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் 30 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை பணம் திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். விக்கிரவாண்டி அடுத்த வி. மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராசு(50). இவர் திருக்கனூரில் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாவாடை கூறிவிட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் சத்தம் கேட்டு பாவாடை எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைத்து இருந்தும் உள்ளே பீரோ திறந்தும் கிடந்தது. இது பற்றி திருச்செந்தூரில் இருந்த தேவராசிடம் தகவல் தெரிவித்தனர். அவர் வி .மாத்தூர் திரும்பி வந்து பீரோவை பார்த்தபோது அதிலிருந்த8 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் 30 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இது பற்றிய புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    • செம்மனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரவேல் கூலி தொழிலாளி.
    • லாரியில் கோழிகளை ஏற்றுவதற்காக வந்துள்ளார்.

    விழுப்புரம்:

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரவேல் (வயது 40) கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் புதுக்கேணி பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் லாரியில் கோழிகளை ஏற்றுவதற்காக வந்துள்ளார்.

    வேலைக்கு சென்ற இடத்தில் திடீரென உத்தரவேலுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள் உத்தரவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சென்னை - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
    • அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் மாண்டூர் பஸ் நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத நபர் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையை நோக்கி சென்ற லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 108 ஆம்புலன்ஸ்சில் அடையாளம் தெரியாத நபர் பலியானார். அதே சாலையில் திருச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். மாண்டூர் உர நிறுவனம் அருகில் சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரி யாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்தி லேயே தலை நசுங்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவெண்ணை நல்லூர் போலீசார் இவ்விரு விபத்துகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகளின் வீட்டிற்கு சென்றார்.
    • சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்தார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுசிலா (வயது 62). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மயிலம் அருகே உள்ள தென்பசாரில் உள்ள அவரது மகளின் இல்லத்திற்கு சென்றார். இந்நிலையில் இன்று பெர மண்டூருக்கு வருவதற்காக தென் பசாரில் உள்ள சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்தார்.

    அப்போது விழுப்புரத்தி லிருந்து சென்னை நோக்கி சென்ற கார் மூதாட்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுசிலா பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். இந்நிலையில் சுசிலா மீது மோதிய காரை, அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடிவிட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த மயிலம் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்
    • சன்னதியில் தேங்காய் கொடுத்தார்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கிலும் அமாவாசை யன்று லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

    நேற்று பெண் பக்தர் ஒருவர் உற்சவர் அம்மன் சன்னதியில் தேங்காயை கொடுத்தார். அதை பூசாரிகள் உடைக்கும் போது அதன் உட்புறம் இரண்டு மூடிகள் இருந்தது அங்கிருந்தவர்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது.

    • சென்னை சென்ற லாரி இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சேடன் குட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 55) . கூலித் தொழிலாளி.இவர் திண்டிவனம் எம். ஆர். எஸ். கே. கேட் அருகே டாஸ்மாக் கடைக்குஎதிரே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக ரோட்டை கடந்த போது திண்டிவனத்தில் இருந்து சென்னை சென்ற லாரி இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் நாகராஜ் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜ் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த பகுதியில் நெடுஞ்சாலையில் ஓரத்தில் டாஸ்மாக் கடை உள்ளதால் தொடர்ந்து விபத்து நடப்பதாகவும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தொடர்ந்து உயிரிழப்பும் ஏற்படுவதாகவும் அந்த பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இந்த இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் போராட்டம் நடத்துவது என திட்டமிட்டுள்ளனர்.

    • கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது வந்தது.
    • அச்சரம்பட்டு கிராமத்திற்கு நேற்று மாலை வந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள அச்சரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முரளிதாஸ் (வயது 32). இவருக்கும் பிரம்மதேசம் அடுத்த பழமுக்கலை சேர்ந்த பாபுவிற்கும் (38) இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது வந்தது. இந்நிலையில் முரளி தாசை சந்திக்க பாபு தனது நண்ப ரை அழைத்துக் கொண்டு அச்சரம்பட்டு கிராமத்திற்கு நேற்று மாலை வந்தார்.

    அப்போது முரளிதாஸ் ஏரிக்கரை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த பாபு, முரளிதாசிடம் பணம் கேட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது பாபு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முரளிதாசின் வலது காலில் வெட்டினார். இதனால் பலத்த காயமடைந்த முரளிதாஸ், கீழே விழுந்து கூச்சலிட்டு கதறினார். இதனைப் பார்த்த பாபு, தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் தப்பியோடினார். அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் முரளிதாசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு முரளிதாசிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், கத்தியால் வெட்டப்பட்ட காலில் இருந்து ரத்தம் நிற்கவில்லை. இந்நிலையில் முரளி தாஸ் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முரளிதாசை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய பாபு மற்றும் அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×