என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • மழையால் இந்த ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு விநாடிக்கு 200 கன அடி நீர் வந்தது.
    • 120 கன அடி நீரினை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. கல்வராயன்மலை பகுதியில் உள்ள பொட்டியம், கல்படை, மாயம்பாடி ஆகிய ஆறுகளின் வழியாக வரும் மழை நீர் இந்த அணையில் தேக்கி வைக்கப்படும். கடந்த சில வாரங்களாக வெப்பசலனம் காரணமாக பெய்து வரும் மழையால் இந்த ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு விநாடிக்கு 200 கன அடி நீர் வந்தது. இதனால் அணையின் முழுக் கொள்ளலவான 46 அடியில் 44 அடி நிரம்பியது. சம்பா போகத்திற்கு நெல் நடவு செய்ய உள்ள விவசாயிகளுக்காகவும், அணையின் பாதுகாப்பு கருதியும், அணை நீரை திறந்து விட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கோமுகி அணையில் இருந்து புதிய மற்றும் பழைய பாசன வாய்க்கால்கள் மூலம் விநாடிக்கு 120 கன அடி நீரினை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

    பழைய பாசன வாய்க்காலில் விநாடிக்கு 55 கன அடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் பரிக்கம், மண்மலை, கரடிசித்தூர், சாவடிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். புதிய பாசன வாய்க்காலில் விநாடிக்கு 65 கன அடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கனந்தல், கச்சிராயபாளையம், அம்மாப்பேட்டை, செம்படாங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விநாடிக்கு 100 கன அடிநீர் மழைநீர் கோமுகி அணைக்கு வந்து கொண்டிருப்பதால் நடப்பு சம்பா போகத்திற்கு தேவையான பாசன நீர் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைநதுள்ளனர். இந்த நீர் திறப்பு விழாவில் சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் ஷ்ரவண்குமார் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள், தி.மு.க. பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    • இன்று காலை வினோத்தை பணிக்கு அழைத்து செல்ல அவருடன் பணியா ற்றுபவர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர்.
    • கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் கலைவாணர் நகர் உள்ளது. இங்கு வினோத் (வயது 25) என்பவர் தனது பாட்டி வீட்டில் தங்கி பெயிண்டர் வேலை செய்து வந்தார். இன்று காலை வினோத்தை பணிக்கு அழைத்து செல்ல அவருடன் பணியா ற்றுபவர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர். அப்போது வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் வினோத்தின் செல்போனை தொடர்பு கொண்டனர். நீண்ட நேரமாக அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து வீட்டின் கதவை தட்டினார்கள். கதவையும் அவர் திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    வீட்டிற்குள் இருந்த மின்விசிறியில் வினோத் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை மாநிலம் கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காதல் தோல்வியால் வினோத் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோடை மாதமான மே, ஜூன் மாதம் போல கடுமையான வெயில் சுட்டெரித்தது.
    • மழை பெய்ய தொடங்கி இன்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கோடை மாதமான மே, ஜூன் மாதம் போல கடுமையான வெயில் சுட்டெரித்தது. இதனால் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் வியர்வை மழையில் நனைந்தபடி சாலையில் நடந்து சென்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்த தொடங்கி இன்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது. மேலும் மாவட்டத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் இரு புறங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இது விழுப்புரம் நகரம் வழுதரெட்டி, சாலா மேடு, நன்னாடு, பெரும்பாக்கம், காணை, மாம்பழப்பட்டு, முகையூர், திருக்கோவிலூர், அரசூர், திருவெண்ணைநல்லூர், அரியூர், அகரம், விக்கிர வாண்டி, கண்டமங்கலம், உள்ளிட்ட பகுதிகளிலும் மாவட்டங்களில் மரக்காணம், செஞ்சி, திண்டிவனம், உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. நேற்று இரவு பெய்த மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • லாரியை வளத்தி நீலாம் பூண்டியைச் சேர்ந்த டிரைவர் தியாகராஜன் என்பவர் ஓட்டிச் சென்றார் .
    • போலீசார் வாகனங்களை சர்வீஸ் சாலையில் மாற்றி அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. லாரியை வளத்தி நீலாம் பூண்டியைச் சேர்ந்த டிரைவர் தியாகராஜன் (வயது36) என்பவர் ஓட்டிச் சென்றார் . நேற்று இரவு 7.40 மணி அளவில் முண்டியம்பாக்கம் அருகே வரும்போது எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக இருந்த மின் கம்பத்தில் மோதி லாரி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த கரும்புகள் சாலை முழுவதும் சிதறியது.

    இதனால் திருச்சி சென்னை மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப் -இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ் ,காத்தமுத்து மற்றும் போலீசார் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற வாகனங்களை சர்வீஸ் சாலையில் மாற்றி அனுப்பி வைத்தனர். விக்கிரவாண்டி டோல் பிளாசா ஊழியர்கள் ஜே.சி.பி எந்திரத்தின் உதவியுடன் லாரி மற்றும் கரும்புகளை சாலையில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    • தான் சென்னை தாம்பரம் அருகே கொத்தனார் வேலைக்கு செல்வதாகவும் தெரிவித்து மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
    • முதலுதவி செய்து 108 ஆம்புலசுக்கு போன் செய்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்

    திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்ட திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அருகே இன்று காலை 7. 40 மணியளவில் வந்தது. அப்போது ரெயிலில் பயணம் செய்த நாகர்கோவில் பகுதியை சேர்ந்த கொத்தனார் புஷ்பராஜ் தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும் தான் சென்னை தாம்பரம் அருகே கொத்தனார் வேலைக்கு செல்வதாகவும் தெரிவித்து மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

    உடனே சக பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரெயிலின் சங்கிலியை இழுத்து திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தினர். ரெயில் டிரைவர் மற்றும் டி.டி.ஆர்.,ரெயில்வே ஊழியர்கள் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.ஒரத்தூர் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் அவர் கையில் வைத்திருந்த நெஞ்சுவலி சம்பந்தமான மாத்திரையை கொடுத்து முதலுதவி செய்து 108 ஆம்புலசுக்கு போன் செய்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ெரயில் 10 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக சென்றது.  

    • இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஸ்ரீராம் விழுப்புரம் நகர போலீசில் பாலாஜி மீது புகார் கொடுத்தார்.
    • இதில் தலை, முகம், கை உள்ளிட்ட இடங்களில் ஸ்ரீராமுக்கு வெட்டு விழுந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் சித்தேரிக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் ஸ்ரீராம் என்ற ராம்குமார் (வயது 30). இவர் விழுப்புரம் பகுதியை சேர்ந்த பல்வேறு நபர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து அதை வசூல் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 19-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் பாலாஜி (27) என்பவர் ஸ்ரீராமிடம் ரூ.2 ஆயிரம் வட்டிக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீராம் எந்த வேலை யும் செய்யாமல் ஊதாரித்த னமாக சுற்றிவரும் உனக்கு கடன் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, தனது நண்பருடன் சேர்ந்து ஸ்ரீராமை திட்டி தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஸ்ரீராம் விழுப்புரம் நகர போலீசில் பாலாஜி மீது புகார் கொடுத்தார்.

    பணம் தராமல் அனுப்பிய கோபத்தில் இருந்த பாலாஜிக்கு இந்த புகார் சம்பவம் கடும் ஆத்திரமடையச் செய்தது. இதனால் ஸ்ரீராமை பாலாஜி கொலை செய்ய முடிவு செய்தார். அதற்காக பாலாஜி ஸ்ரீராம் எங்கெங்கு செல்கிறார். தனியாக செல்லும் இடங்களை கண்காணித்து திட்டம் தீட்டினார். இதனையடுத்து நேற்று மாலை தனியாக தனது மோட்டார் சைக்கிளில் சித்தேரிக்கரை ரெயில்வே கேட் அருகில் வந்த ஸ்ரீராமை பாலாஜி மற்றும் பாலாஜியின் கூட்டாளி யான கண்டமங்கலம் பகுதி யை சேர்ந்த அய்யப்பன் (28), பிரகாஷ் (25) ஆகி யோர் வழிமறித்து வீச்சரி வாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தலை, முகம், கை உள்ளிட்ட இடங்களில் ஸ்ரீராமுக்கு வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் ஸ்ரீராம் சாலையில் சரிந்தார். பின்னர் பாலாஜி மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த ஸ்ரீராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து முன்விரோதத்தில் ஸ்ரீராமை கொலை செய்த பாலாஜி மற்றும் பாலாஜி யின் கூட்டாளி களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட பாலாஜி, அய்யப்பன், பிரகாஷ் ஆகியோரை போலீசார் பிடித்தனர். பிடிபட்டவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறக்கி விடப்பட்டனர்.
    • ெரயிலை பிடிக்க வேண்டும் என கூறி டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி அரசு பஸ் சென்றது. நேற்று இரவு 9 .20 மணியளவில் விக்கிரவாண்டி டோல் பிளாசாவை கடக்க முயன்ற போது சுங்கவரி செலுத்தாததால் விழுப்புரம் நோக்கி செல்லவிடாமல் அந்தபஸ் நிறுத்தப்பட்டது. பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறக்கி விடப்பட்டனர்.இதனால் பஸ்சில் வந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து மாற்று பஸ்சில் செல்ல முடியாமல் தவித்தனர்.

    மேலும் பஸ்சில் வந்த பயணிகள் விழுப்புரம் ெரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டம் நோக்கி செல்லும் ெரயிலை பிடிக்க வேண்டும் என கூறி டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடத்திற்கு பிறகு இரவு 10.05 மணிக்கு விழுப்புரம் நோக்கி சென்ற வேறு அரசு பஸ்சில் பயணிகள் ஏறி சென்றனர்.இதனால் டோல் பிளாசா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அங்கம்மாள் இன்று காலை மடப்பட்டு - திருக்கோவிலூர் சாலையை கடக்க முயன்றார்.
    • சம்பவ இடத்திற்கு திருவெண்ணைநல்லூர் போலீசார் விரைந்து வந்தனர்

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அடுத்த பெண்ணைவலம் கிராமத்தை சேர்ந்தவர் அங்கம்மாள் (வயது 75). இவர் இன்று காலை மடப்பட்டு - திருக்கோவிலூர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மூதாட்டி அங்கம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு திருவெண்ணைநல்லூர் போலீசார் விரைந்து வந்தனர். மூதாட்டி அங்கம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த ஜனனியின் மீது விழுந்து பலத்த காயமடைந்தார்
    • அதிகாரிகள் கல் குவாரியை உரிய பாதுகாப்போடு இயங்குவதற்கு அறிவுறுத்த வேண்டும்

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த தென்னம்பூண்டியை சேர்ந்தவர் ஜீவரத்தினம் .இவரதுமனைவி ஜனனி (வயது24). இவர் வழக்கம் போல் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் வெடி வெடித்ததில் மலைக்கற்க்கள் பெயர்ந்து வந்து ஜனனியின் வீட்டின் மேல் கூரையில் விழுந்தது. இதில் மேற்கூரை முழுவதும் சேதமடைந்து வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த ஜனனியின் மீது விழுந்து பலத்த காயமடைந்தார் .

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியு ள்ளது .எனவே துறை சார்ந்த அதிகாரிகள் கல் குவாரியை உரிய பாதுகா ப்போடு இயங்குவதற்கு அறிவுறுத்த வேண்டும் என்பது இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • இப்போட்டிகள் 2 பிரிவுகளாக ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக நடத்தப்பட உள்ளது.
    • ரூ.1000 வீதம் 10 பரிசு வரை ஒவ்வொரு பிரிவிற்கும் சான்றிதழ்களுடன் வழங்கப்படும்.

    விழுப்புரம்:

    விளையாட்டு துறை சார்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெருந்தூர ஓட்டப் போட்டி ஆண்டுதொறும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 7-ந் தேதி அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் 2 பிரிவுகளாக ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக நடத்தப்பட உள்ளது. முதல் பிரிவில் 17 வயது முதல் 25 வயது வரை உள்ள பள்ளி, கல்லூரி அரசு பணியாளர்கள் மற்றும் பொதுப்பிரிவினர் களுக்கும், 25 வயதிற்கு மேல் அனைத்து அரசு அலுவலர்கள், பொதுபிரிவி னர்கள், விளையாட்டு ஆர்வ லர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் கலந்துகொள்ளலாம்.

    மேலும் இப்போட்டி களில் கலந்துகொள்ளும் வீரர், வீராங்கனைகள் தங்களுடைய ஆதார் அட்டை நகலை கண்டிப்பாக கொண்டு வந்து பதிவு செய்து வேண்டும். இப்போட்டியில் பங்கேற்ப வர்கள் தங்கள் பதிவினை எம்.ஜி.ஆர் உள்விளை யாட்டரங்கம், மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் இன்று முதல் நேரடியாக பதிவு மேற்க்கொண்டு கலந்து கொள்ளலாம். போட்டியில் வெற்றிபெறும் முதல் மூன்று இடங்களுக்கு ரூ.5000, 3000, 2000, எனவும் ரூ.1000 வீதம் பத்து பரிசு வரை ஒவ்வொரு பிரிவிற்கும் சான்றிதழ்களுடன் வழங்கப்படும். எனவே மேற்கண்ட போட்டிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவ லர்கள், பொது பிரிவி னர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயன்பெறவும். இவ்வாறு கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • விக்கிர வாண்டி பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது டிராக்டர் டிப்ப ரின் ஹைட்ராலிக் திடீரென ரிலீசானது.
    • பஸ் நிலையம் அருகில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    விழுப்புரம்

    கொய்யா மரகட்டை களை ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் இன்று காலை 7.30 மணிக்கு முண்டியம்பாக்கம் நோக்கி சென்றது. இந்த டிராக்டரை விக்கிரவாண்டியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். டிராக்டர் விக்கிர வாண்டி பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது டிராக்டர் டிப்ப ரின் ஹைட்ராலிக் திடீரென ரிலீசானது. இதனால் டிப்பர் மேலே தூக்கியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் தலை கீழாக கவிழ்ந்தது.

    விபத்தில் டிராக்டர் டிரைவர் நாகராஜ்க்கு படுகாயம் ஏற்பட்டது. அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு முண்டியம் பாக்கத்தில் உள்ள விழுப்பு ரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்த விக்கிர வாண்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அலுவ லர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சாலை யில் கவிழ்ந்த கிடந்த டிராக்டர் டிப்பரை அகற்றி னர். இதனால் விக்கிர வாண்டி பஸ் நிலையம் அருகில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • சிமெண்ட் ஓடு போட்டவீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கடலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
    • 9½ பவுன் நகை மற்றும் ரூ. 95ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே உள்ள வாழப்பட்டு கிரா மத்தைச் சேர்ந்தவர் ராற் குமார் (வயது49). இவர் விழுப்புரத்தில் துணிக்க டையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 30 -ந் தேதி மாலை 5 மணிக்கு தனது சிமெண்ட் ஓடு போட்டவீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கடலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று பிற்பகல் 2 மணி அளவில் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 9½ பவுன் நகை மற்றும் ரூ. 95ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது. இது பற்றி கெடார் போலீ சில் புகார் செய்ததின்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் விவே கானந்தன் வழக்கு பதிந்து நகை-பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.

    ×