என் மலர்
விழுப்புரம்
- அரசு பஸ்சில் பயணம் செய்த ஐகோர்ட்டு வக்கீல் நெஞ்சுவலி ஏற்பட்டு பஸ்சின் இருக்கையிலேயே இறந்தார்.
- விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி:
சென்னை வேளச்சேரி வி.ஜி.பி. செல்வா நகரை சேர்ந்தவர் ரவி ஆனந்த் (வயது 45).இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று முன்தினம் மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பஸ்சில் சென்று விட்டு நேற்று இரவு மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாரதிதாசன் டிரைவராகவும், ராமநாதபுரம் எஸ்.வி.மங்கலமத்தை சேர்ந்த சந்திரமோகன் கண்டக்டராகவும் இருந்தனர். அரசு பஸ் இன்று அதிகாலை 5.45 மணிக்குவிக்கிரவாண்டி அருகே உள்ள ஒரு ஓட்டலில் நின்றது.
பஸ்சில் பயணம் செய்த அனைவரும் இறங்கி சென்றனர். ரவி ஆனந்தும் பஸ்சில் இருந்து இறங்கி கழிவறைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பஸ்சில் ஏறி தனது இருக்கையில் அமர்ந்தார். 5.55 மணிக்கு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்களிடம் நெஞ்சு வலி உள்ளதாக கூறியுள்ளார்.
உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் கண்டக்டர், டிரைவர் ஆகியோர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சில் வந்தவர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்ததில் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனடியாக விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விக்கிரவாண்டி போலீஸ்காரர் செல்வகுமார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த ரவி ஆனந்த் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நெஞ்சுவலியால் இறந்தவரின் மனைவி வினித்ரா சென்னை தலைமை செயலகத்தில் உதவி பிரிவு அலுவலராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சி.மெய்யூர் கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- அவர்களை பிடிக்க போலீசார் முயற்சித்தும் தப்பியோடிவிட்டனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள சி.மெய்யூர் கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே 2 வாலிபர்கள் நாட்டுத் துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் வந்தனர். போலீசாரை கண்ட வாலிபர்கள், மோட்டார் சைக்கிளையும், நாட்டு துப்பாக்கியையும் அங்கேயே போட்டு விட்டு ஓடி விட்டனர்.
அவர்களை பிடிக்க போலீசார் முயற்சித்தும் தப்பியோடிவிட்டனர். உடனடியாக வழக்கு பதிவு செய்த திருவெண்ணைநல்லூர் போலீசார், மோட்டார் சைக்கிளையும், நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். அதனை சாலையில் போட்டுவிட்டு தப்பியோடிய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றுள்ளனர்.
- மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட நகரான் தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் வயது (45)இவர் மரக்காணத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் தனது வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இவரது குழந்தைகளும் பள்ளிக்கு சென்று உள்ளனர் .இந்நிலையில் நேற்று மாலை இவரது வீடு திடீரென தீ பற்றி எரிந்துள்ளது இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றுள்ளனர். அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென கூரை வீடு முழுக்க பரவி உள்ளது. இவரது வீட்டின் அருகில் உள்ள ராஜேந்திரன் வீடும் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் 2 கூரை வீடுகளும் தீப்பற்றி முழுவதுமாக எரிந்துவிட்டது
இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி, டி.வி, கட்டில், பாத்திரங்கள், நில பத்திரம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகிவிட்டது இது பற்றி தகவல் அறிந்த விழுப்புரம் வடக்கு மாவட்டதி.மு.க. துணை செயலாளர் ரவிக்குமார், மரக்காணம் பேரூராட்சி துணை தலைவர் தலைவர் பலராமன், கவுன்சிலர்கள் தயாளன், பிரபாகரன் வருவாய் ஆய்வாளர் தினகரன், கிராம நிர்வாக அலுவலர் முத்து கணேஷ் மற்றும் வருவாய் துறையினர் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஜனார்த்தனன் வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து ஏற்பட்ட மின் கசிவால் தான் இந்த தீ விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட 2குடும்பத்திற்கும்தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் அரிசி ,காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
- 20-க்கும் மேற்பட்ட பகுதிகளின் தெருக்களின் வழியாக வழுதரெட்டி ஏரி வாய்க்கால் செல்கிறது.
- கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்ற உடன் வழுதரெட்டி ஏரி வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் நகர 32-வது வார்டில் வசிக்கும் மக்கள் சார்பில் விழுப்புரம் கலெக்டருக்கு மனு அளித்தனர். அதில் உள்ளதாவது;- விழுப்புரம் நகராட்சி 32-வது வார்டிற்குட்பட்ட கவுதம் நகர், ஸ்ரீராம் நகர், வழுதரெட்டி காலனி, பாண்டியன் நகர், சாலாமேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளின் தெருக்களின் வழியாக வழுதரெட்டி ஏரி வாய்க்கால் செல்கிறது. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்த வாய்க்கால் தற்போது தூர்ந்து போய் இருப்பதால் வடகிழக்கு பருவமழையின் போது அதிகளவில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு மேற்கண்ட 20-க்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய சூழ்நிலை இருக்கிறது.
கடந்த காலங்களில் பெய்த பருவமழையின் போது குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து இந்த பகுதிகளில் வசித்து வரும் மக்கள் கடும் இன்ன ல்களுக்கு ஆளானார்கள். இது குறித்து கடந்த 2022ஆம் ஆண்டு அப்போதைய மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்ற உடன் வழுதரெட்டி ஏரி வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது. ஆகவே, கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் வடக்கிழக்கு பருவமழைக்கு முன்பாக வழுதரெட்டி ஏரி வாய்க்கால்களை தூர்வாரி வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து உதவிடுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
- கொரோனா தொற்று காலத்தில் ரூ35 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
- குடி போதையில் வந்த நாகப்பன், வேலவனை வழிமறித்து பணத்தை கேட்டார்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி ஒன்றியம் குண்டலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலவன் (வயது 38). கூலித் தொழிலாளி. இவர் தனது பெரியப்பா மகன் நாகப்பன் (50) என்பவரிடம் கொரோனா தொற்று காலத்தில் ரூ35 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. நாகப்பனிடம் கடன் வாங்கிய பணத்தை வேலவன் திரும்ப கொடுத்த நிலையில், வட்டி பணம் தரவேண்டுமென என வேலவனிடம், நாகப்பன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் வேலவன் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். குடி போதையில் வந்த நாகப்பன், வேலவனை வழிமறித்து பணத்தை கேட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த நாகப்பன், வேலவனின் தலையில் வெட்டினார். இதில் வேலவனின் இடது காதில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் வேலவனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கெடார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
- இதனையடுத்து விவசாயிகள் வா க்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
காவிரியில் நீர் திறக்காத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவாக சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வ தற்காக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை நோக்கி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். திண்டிவனம் அடுத்த கோனேரி குப்பம் பகுதியில் விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசார், சென்னைக்கு செல்ல அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனை யடுத்து விவசாயிகள் வா க்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இருந்தபோதும் போலீசார் அனுமதி மறுத்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கரும்பு மற்றும் நெற்பயிர்களை கையில் பிடித்தபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியல் ஈடுபட்ட விவசா யிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், சென்னை போராட்ட த்திற்கு செல்ல அனுமதி அளித்த னர். தொடர்ந்து விவசாயி கள் தங்கள் மறியலை கைவி ட்டனர். விவசாயி களின் இந்த மறியல் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சா லையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக பல்வேறு புகார்கள் வந்தன.
- வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சி.வி சண்முகம் இன்று நேரில் ஆஜரானார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலத்தில் கடந்த மார்ச், மே மாதங்களில அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி. சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக பல்வேறு புகார்கள் வந்தன.
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் சுப்பிரமணியன் சி.வி. சண்முகம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சி.வி சண்முகம் இன்று நேரில் ஆஜரானார்.
- பா.ம.க. செயலாளர் ஜெயராமன் தலைமையிலான நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்ததில் ஈடுபட்டனர்.
- திண்டிவனம் - மரக்காணம் சாலையில் மோட்டார் சைக்கிளுடன் ஒன்று திரண்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பா.ம.க.வின் சாதனைகளை விளக்கி மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் நடத்த இன்று திட்டமிடப்பட்டது. இதற்கு விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் திண்டிவனம் - மரக்காணம் சாலையில் மோட்டார் சைக்கிளுடன் ஒன்று திரண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மற்றும் போலீசார், மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் நடத்த அனுமதி கிடையாது. அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். இதையடுத்து விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெயராமன் தலைமையிலான நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்ததில் ஈடுபட்டனர். இருந்தபோதும் போலீசார் அனுமதி மறுத்து அனைவரையும் கலைந்து செல்ல வலியுறுத்தினர்.
இதேபோல வானூர் மேற்கு ஒன்றிய பா.ம.க. சார்பில் மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் நடத்த அக்கட்சியினர் கரசானூரில் ஒன்று திரண்டனர். அங்கு வந்த வானூர் போலீசார் அனுமதி மறுத்து அனைவரையும் கலைந்து செல்ல வலியுறுத்தினர். பா.ம.க. வானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையிலான நிர்வாகிகள், எங்கள் கட்சியின் சாதனைகளை விளக்கி மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் செய்ய உள்ளோம். இதற்கு திடீரென அனுமதி மறுப்பது சரியான நடைமுறையல்ல என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பா.ம.க.வினரின் மோட்டார் சைக்கிள் பிரச்சாரத்திற்கு திண்டிவனம் மற்றும் வானூரில் போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும், 2 இடங்களிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி வழங்க கோரி போலீசாரிடம் பா.ம.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் திண்டிவனம், வானூர் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
- தடுப்பூசிகளை எவ்வாறு கையாள்வது மற்றும் செலுத்துவது என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
- கந்தசாமி, சுகுமார், கால்நடை உதவி டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடை நோய் ஆய்வு மற்றும் தடுப்பூசி தொழில்நுட்பக் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடைகளை தாக்கும் கோமாரி அம்மை மற்றும் ஆடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோய்க்கான தடுப்பூசிகளை எவ்வாறு கையாள்வது மற்றும் செலுத்துவது என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இதில் சென்னை கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மருத்துவ பணிகள் கூடுதல் இயக்குநர் டாக்டர் சத்தியநாராயணன் விழுப்புரம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் லதா, கள்ளக்குறிச்சி துணை இயக்குநர் டாக்டர் பொன்னம்பலம், உதவி இயக்குநர்கள் டாக்டர்கள் ராஜேந்திரன், கந்தசாமி, சுகுமார், கால்நடை உதவி டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழாவை தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார்.
- டாக்டர்களின் ஆலோசனைகளை முறை யாக பின்பற்ற வேண்டும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் சமூகநலத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செஞ்சி வட்டாரத்தின் சார்பில் சமுதாய வளை காப்பு விழா செஞ்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மை யினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு வளைகாப்பு விழாவை தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கருவுற்ற தாய்மார்கள் சத்தான உணவு உட்கொள்ள வேண்டும். டாக்டர்களின் ஆலோசனைகளை முறை யாக பின்பற்ற வேண்டும். பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செய லாளர்கள் விஜயராக வன், பச்சையப்பன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை சத்தியமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் யோக பிரியா, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன்,செஞ்சி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி, நகர செய லாளர் கார்த்திக், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையா ளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் செஞ்சி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் டயானா நன்றி கூறினார்.
- இவர் கடந்த 2-ந்தேதி மாலை அரசூருக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- கண்ணனை முண்டியம்பாக்கம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள பாரதிநகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 56), விவசாயி. இவர் கடந்த 2-ந்தேதி மாலை அரசூருக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சென்ற போது பின்னால் வந்த கார்மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த கண்ணனை முண்டியம்பாக்கம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்து போனார். இது குறித்து திருவெண்ணை நல்லூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இதையடுத்து திருவெண்ணைநல்லூர் கடை வீதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- குச்சிப்பாளையத்தை சேர்ந்த முத்துக்குமரன் என்பது தெரியவந்தது.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து திருவெண்ணைநல்லூர் கடை வீதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 பேர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டனர். அவர்களை திருவெ ண்ணை நல்லூர் போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவர்களிடமிருந்த 1 லட்சத்து 35 ஆயிரத்து 300 பணத்தையும், 300 லாட்டரி சீட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் திருவெண்ணை நல்லூர் காந்திக்குப்பம் வள்ளுவர் தெருவை சேர்ந்த வையாபுரி (வயது 65), உளுந்தூர்பேட்டை வட்டம் கொரட்டூர் குச்சிப்பாளையத்தை சேர்ந்த முத்துக்குமரன் (42) என்பது தெரியவந்தது. 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






